32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

சாண்டல்வுட்: சிவண்ணாவுடன் இணையும் KVN ப்ரொடக்‌ஷன்ஸ் – வடேயார் மூவிஸ்

Dinesh R சேலம் Published: 01/09/2025 2 நிமிட வாசிப்பு Updated: 04/09/2025 அயல் சினிமா
எழுத்து அளவு:

ஹாட்ரிக் வெற்றியைத் தந்துள்ள கருநாடக சக்கரவர்த்தி சிவராஜ்குமாரின்  புதிய படம் செப்டம்பர் மாதம் துவங்கவுள்ளது. இந்தப் படத்தை சாண்டல்வுட்டில் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய புகழ்பெற்ற இயக்குநர் பவன் வடேயார் இயக்குகிறார். முன்னதாக இவர் புனித் ராஜ்குமாருக்காக இரண்டு படங்களை இயக்கியுள்ளார். ஆனால் சிவராஜ்குமாரை இயக்குவது இதுவே முதல்முறை. இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும்  செப்டம்பர் 3 ஆம் தேதி துவங்குகிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்தியாவின் பல பகுதிகளில் நடைபெற உள்ளது. முதல் கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் 3 அன்று பெங்களூருவில் துவங்குகிறது. அதன் பின் மண்டியா, ஹிமாச்சலப் பிரதேசம், மும்பை மற்றும் ஹைதராபாத் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

பிரபல தயாரிப்பு நிறுவனம் KVN ப்ரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. பவன் வடேயாருக்கு சொந்தமான வடேயார் மூவிஸ் மற்றும் வெங்கட் கோனங்கி தலைமையிலான KVN ப்ரொடக்‌ஷன்ஸ் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன.

சிவராஜ்குமார் நாயகனாக  நடிக்கும் இந்தப் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக  உருவாகிறது. இதில் ஜெயராம், சாய் குமார், கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே, பிரகாஷ் பெலவாடி போன்ற மூத்த நடிகர்களும், சஞ்சனா ஆனந்த் மற்றும் தீக்‌ஷித் ஷெட்டி போன்ற இளம் திறமையாளர்களும் இணைந்து நடிக்கவுள்ளனர். படம் முழுக்க வணிக அம்சங்களுடன் கூடிய கதைக்களத்தில் அதிரடி ஆக்சன் எண்டர்டெயினராக உருவாகிறது. இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார். ஷஷாங்க் நாராயண் படத்தொகுப்பைக் கவனிக்கிறார். சிவராஜ்குமார், பவன் வடேயார், KVN ப்ரொடக்‌ஷன்ஸ் ஆகியோரின் முதல் கூட்டணியாகும்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.