32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

அஜித் சார்ன்னா பாசிடிவ்

Dinesh R சேலம் Published: 19/01/2015 1 நிமிட வாசிப்பு Updated: 24/10/2015 சினிமா
எழுத்து அளவு:

விக்னேஷ் சிவன்

எதிர்பாராத விதமாக அஜித் படத்தில் பாடல் எழுதக் கிடைத்த வாய்ப்பை எண்ணி ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் உள்ளார் விக்னேஷ் சிவன்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

“நான் பாடல் ஆசிரியர் எல்லாம் கிடையாது. சில நேரம் சில விஷயங்கள் நமக்கே தெரியாமல் நடந்து விடும். இப்பவும் எனக்கு இந்த வாய்ப்பு எப்படி வந்தது என்று புரியவில்லை எல்லாம் கடவுளின் செயல்.

கௌதம் சார் பாட்டு எழுதச் சொன்னவுடன் தலை, கால் புரியவில்லை. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று அவுட்-லைன் எழுதிக் கொடுத்தேன். பின்னர், ஹாரிஸ் சார் மெட்டுக்கு ஏற்றார்போல் சில வார்த்தைகளைச் சேர்த்து மாற்றியதும் பாடல் பதிவு செய்யப்பட்டது.”

கௌதம் சாரின் படத்தில் பாட்டு கதையை நகர்த்திச் செல்லும். இப்பாட்டு ஒரு குத்துப் பாடல் மட்டும் கிடையாது. கதையின் முக்கியமான கதாபாத்திரங்களைப் பற்றி எடுத்துரைக்கும் வகையில் அமைந்திருக்கும்.

பாட்டு எழுதப்படுவது ‘தல’ அஜித் சாருக்கு என்பதாலோ என்னவோ எனக்கு பாட்டு ‘Positive’ ஆக வந்தது. அதனாலேயே ‘எல்லாமே இனிமே நல்லாத்தான் நடக்கும்’ என்று ஆரம்பிதேன்.

கௌதம் சார்கிட்ட உதவி இயக்குநரா வேலை செய்யவேண்டுமென பல நாள் ஏங்கியது உண்டு. அது இந்தப் பாட்டு எழுதுனது மூலம் அது நிறைவேறியுள்ளது” என்றார் விக்னேஷ் சிவன் உற்சாகத்துடன்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.