32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

ஹீரோவாகும் சிம்ஹா!

Dinesh R சேலம் Published: 13/12/2014 1 நிமிட வாசிப்பு Updated: 11/02/2015 சினிமா
எழுத்து அளவு:

Simhaa Paambu Sattai

இயக்குநரும் தயாரிப்பாளருமான மனோபாலா அவர்களின் மனோபாலா பிக்சர் ஹவுஸ் மற்றும் R.சரத்குமார், R.ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீஃபன் ஆகியோரின் மேஜிக் ஃப்ரேம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் பாம்பு சட்டை.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

“சதுரங்க வேட்டை” திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மனோபாலா தொடுக்கும் புதிய வேட்டையான ‘பாம்பு சட்டை’ படத்தை புதுமுக இயக்குனர் ஆடம் தாசன் இயக்குகிறார், இவர் இயக்குநர் சங்கரின் இணை இயக்குநர் ஆவார். பல படங்களில் குணசித்திர நடிகராக நடித்து வந்த பாபி சிம்ஹா இப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். இவருக்கு கச்சிதமாகப் பொருந்தும் வண்ணம் அமைந்துள்ளது இந்த கதாபாத்திரம்.

ஏர்டெல் சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றி பெற்ற அஸீஸ் அசோக் இசையமைப்பளாராக அறிமுகமாகிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பதிவு நாளை முதல் ஆரம்பமாகிறது. திட்டமிட்டப்படி படமெடுத்து வெளியிடும் மனோபாலா இப்படத்தை கோடை விடுமுறையில் வெளியிட முனைப்பாக உள்ளார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.