32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
குறிச்சொல்

எம்.எஸ்.பாஸ்கர்

26 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன
M.S.பாஸ்கர் போலீஸாக நடிக்கும் ‘விடியும் காத்திரு’ – க்ரைம் த்ரில்லர்| சினிமா முக்கியச் செய்தி
03/09/2026 Dinesh R 2 நிமிட வாசிப்பு

M.S.பாஸ்கர் போலீஸாக நடிக்கும் ‘விடியும் காத்திரு’ – க்ரைம் த்ரில்லர்|

எம்.எஸ். பாஸ்கர் நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘விடியும் காத்திரு’ ஆகும். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஃப்ரெண்ட்ஸ் ப்ரொடக்‌ஷன் ஹவுஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை பி.எம். ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். அயோத்தி வளர்மதி இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். இயக்குநர்கள் பாலா மற்றும்  மிஷ்கின் படங்களின் கதை விவாதங்களில் பங்காற்றிய ஆர். அரவிந்த ராஜன், தனது முதல் திரைப்படமாக ‘விடியும் காத்திரு’ படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் அம்ஜதா […]

முழுமையாகப் படிக்க
செய்திகள் வரிசை (பக்கம் 1)
Kutti Story Pictures | எம்.எஸ்.பாஸ்கர் | ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் சினிமா

Kutti Story Pictures | எம்.எஸ்.பாஸ்கர் | ஃப்ராங்க்ஸ்டர் ராகுல்

குட்டி ஸ்டோரி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் புவனேஷ் சின்னசாமி தயாரிப்பில் நடிகர் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா பூஜையுடன் சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. காமெடி நடிகராக பிரபலமான ‘ஃப்ராங்க்ஸ்டர்’ ராகுல் இயக்குநராக அறிமுகமாகும் இந்தத் திரைப்படத்தில் தமிழ்த் திரையுலகின் சிறந்த குணச்சித்திர நடிகரான எம்.எஸ்.பாஸ்கரும், ஃப்ராங்க்ஸ்டர் ராகுலும் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் நடிகை ஸ்மீகா, அருள்தாஸ், முனீஸ்காந்த், ஸ்ரீநாத், சிவா அரவிந்த், பிரியதர்ஷினி, அஞ்சலி ராவ், அபிநயா […]

18/07/2025 Dinesh R
டூரிஸ்ட் ஃபேமிலி விமர்சனம் | Tourist Family review இது புதிது

டூரிஸ்ட் ஃபேமிலி விமர்சனம் | Tourist Family review

விலைவாசி உயர்வையும், கடன் சுமையையும் சமாளிக்க முடியாமல், வல்வெட்டித்துறையில் இருந்து தமிழ்நாட்டிற்குக் கள்ளத்தோணியில் தன் குடும்பத்தை அழைத்து வருகிறார் தர்மதாஸ். ராமேஸ்வரத்தில் நிகழும் ஒரு வெடிகுண்டு விபத்தில் தொடர்புடையவர்களாகத் தர்மதாஸின் குடும்பத்தினரைச் சந்தேகப்படுகின்றனர் காவலர்கள். அந்தச் சிக்கலில் இருந்து தர்மதாஸின் குடும்பத்தினர் மீண்டார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. தர்மதாஸின் இளைய மகன் முல்லியாகக் கமலேஷ் ஜெகன் நடித்துள்ளார். இவர், ராட்சசி படத்தில், ஜோதிகாவை வெட்கத்துடன் காதலிக்கும் கதிர் எனும் பள்ளிச் சிறுவனாக நடித்திருப்பார். இப்படத்தின் கலகலப்பிற்குப் […]

30/04/2025 Dinesh R
ரகு தாத்தா விமர்சனம் இது புதிது

ரகு தாத்தா விமர்சனம்

ஹிந்தித் திணிப்பு தீவிரமாக இருந்த காலகட்டத்தில் நிகழ்கிறது கதை. திராவிட இயக்கத்தின்பால் ஆழ்ந்த பற்றுடையவராக கதையின் நாயகி வலம் வருகிறார். க.பா. எனும் கயல்விழி பாண்டியன் ஓர் எழுத்தாளருமாவார். தனது தாத்தாவிற்குப் புற்றுநோய் என்பதாலும், அவரது கடைசி ஆசை தனது திருமணத்தைப் பார்க்கவேண்டும் என்பதாலும், திருமணத்திற்குச் சம்மதிக்கிறார் கயல்விழி. ஆனால், தனக்கு மாப்பிள்ளையாக வரப் போகிறவன் பசு தோல் போர்த்திய புலி என்றுணர்ந்து, எப்படியாவது கல்யாணம் தானாகவே நிற்கவேண்டும் எனப் போராடுகிறார். அவரது முயற்சி வெற்றி பெறுகின்றதா […]

16/08/2024 Dinesh R
“என் குருவின் சீடனாக..” – எம்.எஸ்.பாஸ்கர் | BOAT இது புதிது

“என் குருவின் சீடனாக..” – எம்.எஸ்.பாஸ்கர் | BOAT

சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘போட்’ திரைப்படத்தில் யோகி பாபு, கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், குலப்புளி லீலா, எம்.எஸ். பாஸ்கர், சாம்ஸ், மதுமிதா, ஷாரா, மாஸ்டர் அக்ஷத் தாஸ் ஆகியோருடன் ஹாலிவுட் நடிகர் ஜெஸ்ஸி ஃபோக்ஸ்-ஆலன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு, ஜிப்ரான் வைபோதா இசையமைத்திருக்கிறார். நடுக்கடலில் உருவான நெய்தல் நிலக்கதையான இப்படத்தை மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் மற்றும் சிம்பு தேவன் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் பிரபா […]

29/07/2024 Dinesh R
ஒரு நொடி”-யை பார்க்க தூண்டும் 3 முக்கிய அம்சங்கள் சினிமா

ஒரு நொடி”-யை பார்க்க தூண்டும் 3 முக்கிய அம்சங்கள்

ஒன்று. தமிழ் திரை வரலாற்றில் முதன் முறையாக ஒரு படத்தையே 13 நிமிட குறும்படமாக காட்டிய அந்த முயற்சி, பலனளித்திருக்கிறது. அந்த பதிமூன்று நிமிடக் காட்சியின் ஒவ்வொரு நொடியும் படம் தொடர்பான சுவாரஸ்யத்தைக் கூட்டுவதோடு, மெய்யாகவே நம்மை இருக்கை நுனிக்கு தள்ளுகின்றன. இரண்டு. த்ரிஷ்யம் திரைப்படத்திற்குப் பிறகு, இப்படத்தின் முடிவு தான் எங்களால் கணிக்க முடியாததாக இருந்தது என்கின்ற தணிக்கை துறையினரின் பாராட்டு. மூன்று. படத்தைப் பார்த்த மறுகணமே, தான் முன் வைக்கும் யோசனைகளைப் பரிசீலிப்பதாக இருந்தால் […]

25/04/2024 Inbaaraja
“அக்கரன்” திரைப்படத்தில் மாறுபட்ட வேடத்தில் நடிக்கும் எம்.எஸ்.பாஸ்கர் சினிமா

“அக்கரன்” திரைப்படத்தில் மாறுபட்ட வேடத்தில் நடிக்கும் எம்.எஸ்.பாஸ்கர்

குன்றம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் அருண் K பிரசாத் இயக்கத்தில், எம் எஸ் பாஸ்கர் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, மாறுபட்ட களத்தில் வித்தியாசமான திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “அக்கரன்”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில் நடிகர் எம் எஸ் பாஸ்கர் பேசியதாவது.. இப்படத்தைத் தயாரித்திருக்கும் கார்த்திகேயனுக்கும் மற்றும் படக்குழுவினருக்கும் என் வாழ்த்துக்கள். ஹரி இசையில் பாடல்கள் அட்டகாசமாக இருக்கிறது. சரவெடி […]

17/04/2024 Inbaaraja
டீஸர் மற்றும் ட்ரைலரை ஒரே நேரத்தில் வெளியிட்டு அசத்திய “ஒரு நொடி” படக்குழு சினிமா

டீஸர் மற்றும் ட்ரைலரை ஒரே நேரத்தில் வெளியிட்டு அசத்திய “ஒரு நொடி” படக்குழு

அறிமுக இயக்குநர் மணிவர்மன் இயக்கத்தில் தமன்குமார் நாயகனாக நடிக்கும் ‘ஒரு நொடி’ படத்தின் டீசரை தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ஆர்யா இன்று வெளியிட்டுள்ளார். இந்த படத்தின் டீசர் சரிகமா மியூசிக் நிறுவனத்தால் இன்று YouTube வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது. அதே நேரத்தில் தமிழ் திரையுலகில் முதல் முறையாக இப்படத்தின் ட்ரைலரும் தமிழ்நாடு முழுக்க 150 வெவ்வேறு திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இவ்வாறு செய்வதன் மூலம் ஆன்லைன் ரசிகர்கள் மற்றும் திரையரங்கு ரசிகர்களை இரண்டு விதங்களில் ஒருசேர கவர முடியும் […]

13/04/2024 Inbaaraja
ஒரு தவறு செய்தால் விமர்சனம் இது புதிது

ஒரு தவறு செய்தால் விமர்சனம்

‘எங்க வீட்டுப் பிள்ளை’ எனும் படத்தில், 1965 இல் கவிஞர் வாலியால் எழுதப்பட்ட ‘நான் ஆணையிட்டால்’ பாடலில் வரும் ஒரு வரியைப் படத்திற்குத் தலைப்பாக வைத்துள்ளார் இயக்குநர் மணி தமோதரன். பாடலில் அடுத்த வரியான, ‘அதைத் தெரிந்து செய்தால்’ என்ற வரியையும் சேர்த்தே, கதையின் ஓட்டத்தை உருவாக்கியுள்ளார். திரைத்துறையில் உள்ள நண்பர்கள் மூவர்க்கு, தங்கியிருக்கும் அறையைக் காலி செய்யவேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது. பிறரின் தேவையைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால், சுலபமாகச் சம்பாதிக்கலாமென பாடத்தைக் கோயம்பேடு மார்க்கெட்டில் கற்கின்றனர். […]

05/04/2024 Dinesh R
வெப்பம் குளிர் மழை விமர்சனம் இது புதிது

வெப்பம் குளிர் மழை விமர்சனம்

வெப்பமும் குளிரும் இணைந்தால் மழை பொழிவது போல், ஆணின் வெப்பமான விந்தணுவும், பெண்ணின் குளிர்வான கருமுட்டையும் இணைவதால் குழந்தை பிறக்கிறது என்பதை உணர்த்தும் குறியீட்டுத் தலைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளார் இயக்குநர். கல்யாணமாகி ஐந்து வருடங்கள் கடந்தும், குழந்தை பாக்கியம் இல்லாமல் ஏச்சுபேச்சுக்கும் ஆளாகின்றனர் நாயகனும் நாயகியும். நாயகனுக்குத் கோயில் திருவிழாவில் கிடைக்கும் முதல் மரியாதை பற்றிய ஊர் பஞ்சாயத்தில், குழந்தையில்லாததால் அவமானப்படுத்துகிறார். நாயகனின் வேதனையைப் பொறுக்கமாட்டாமல், நாயகி கணவனை விட்டு விலகி, நாயகனை இரண்டாம் கல்யாணத்திற்கு வற்புறுத்துகிறாள். அதில் […]

28/03/2024 Dinesh R
வடக்குப்பட்டி ராமசாமி விமர்சனம் சினிமா

வடக்குப்பட்டி ராமசாமி விமர்சனம்

கடவுள் மீது மக்களுக்கு இருக்கும் மூடநம்பிக்கைகளை வைத்து கல்லா கட்டிக் கொண்டிருக்கும் நாயகன், அவன் கல்லாவில் தனக்கும் பங்கு வேண்டும் என்று போட்டிக்கு வரும் அந்த ஊர் தாசில்தார், இவர்கள் இருவருக்கும் இடையில் பகை வளர, இறுதியில் இவர்களுக்கு இடையில் மாட்டிக் கொண்ட கோயிலின் நிலை என்ன ஆனது, மக்களின் நம்பிக்கை என்ன ஆனது என்பதே “வடக்குப்பட்டி ராமசாமியின் கதை. கதை 1960 காலகட்டங்களில் நடக்கிறது. ஊரின் கண்ணாத்தா என்னும் காவல் தெய்வத்திற்கு ஒரு பின்கதை வைத்து, […]

04/02/2024 Inbaaraja
தமன்குமார் நாயகனாக நடிக்கும் “ஒரு நொடி” இது புதிது

தமன்குமார் நாயகனாக நடிக்கும் “ஒரு நொடி”

அறிமுக இயக்குநர் மணிவர்மன் இயக்கத்தில் தமன்குமார் நாயகனாக நடிக்கும் ‘ஒரு நொடி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இசை அசுரனும் திரைப்பட நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் இன்று வெளியிட்டார். பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், பாஃப்டா திரைப்படக் கல்லூரி நிறுவனரும், ‘காற்றின் மொழி’, ‘இவன் தந்திரன்’, ‘கோடியில் ஒருவன்’, ‘கொலைகாரன்’ போன்ற முக்கியமான படங்களை வெளியிட்ட விநியோகஸ்தருமான தனஞ்செயன் இப்படத்தை முன்னின்று வழங்குகிறார். தயாரிப்பு மதுரை அழகர் புரடக்ஷன் கம்பெனி மற்றும் வொயிட் லேம்ப் பிக்ஷர்ஸ். வித்தியாசமான […]

03/02/2024 Inbaaraja
மதிமாறன் விமர்சனம் இது புதிது

மதிமாறன் விமர்சனம்

அப்பார்ட்மென்ட்களில் தொடர்ச்சியாக மர்மமான முறையில் கொல்லப்படும் பெண்கள், உருவம் குள்ளமாக இருந்தாலும் தன் பாசமான தாய் தந்தையரோடும், தனக்கு உறுதுணையாக இருக்கும் தன் அக்காள் மதியுடனும் சந்தோஷமாக வாழ்ந்தபடி தன் அப்பாவைப் போல் வருங்காலத்தில் ஒரு போஸ்ட்மேனாக வேண்டும் என்ற கனவுடன் வாழ்ந்து வரும் நெடுமாறன். இந்த இரு வேறு புள்ளிகளும் சந்திக்கும் இடம் தான் “மதிமாறன்” திரைப்படத்தின் கதை. நெடுமாறனாக வெங்கட் செங்குட்டுவன் நடித்திருக்கிறார். இவர் தான் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “அயலான்” […]

30/12/2023 Inbaaraja
”ஒரு படத்தில் எம்.எஸ்.பாஸ்கர் இருந்தாலே அது நல்ல படம்” – மதிமாறன் டிரைலர் வெளியீட்டு விழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு சினிமா

”ஒரு படத்தில் எம்.எஸ்.பாஸ்கர் இருந்தாலே அது நல்ல படம்” – மதிமாறன் டிரைலர் வெளியீட்டு விழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு

ஜி.எஸ் சினிமா இன்டர்நேஷனல் சார்பில் லெனின் பாபு தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மந்திர வீரபாண்டியன் இயக்கத்தில், இவானா, வெங்கட் செங்குட்டுவன் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க , மாறுபட்ட திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “மதிமாறன்”. இம்மாதம் திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது. இவ்விழாவினில்… தயாரிப்பாளர் நவீன் சீதாராமன் பேசியதாவது… இது நிஜமா கனவா என அறியமுடியவில்லை. நான் […]

17/12/2023 Inbaaraja
“மதிமாறன்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !! சினிமா

“மதிமாறன்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !!

ஜி.எஸ் சினிமா இண்டர்நேஷனல் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மந்த்ரா வீரபாண்டியன் இயக்கத்தில், இவானா, வெங்கட் செங்குட்டுவன் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க , மாறுபட்ட திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள “மதிமாறன்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. Don’t judge the book by its cover புத்தகத்தின் அட்டையை பார்த்து புத்தகத்தை மதிப்பிடாதே என்பதாக உலகின் மிகச்சிறந்த பழமொழி ஒன்று உள்ளது, அது தான் இப்படத்தின் மையம். தன்னுடன் இரட்டையராக பிறந்த சகோதரியைத் தேடும் நாயகனின் தேடல் தான் […]

10/12/2023 Inbaaraja