32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
குறிச்சொல்

எம்.எஸ்.பாஸ்கர்

26 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 2 / 2
செய்திகள் வரிசை (பக்கம் 2)
பார்க்கிங் விமர்சனம் இது புதிது

பார்க்கிங் விமர்சனம்

மனிதனின் அடிப்படை குணங்கள் இரண்டே இரண்டு தான். ஒன்று காமம், மற்றொன்று கோபம். இந்த இரண்டு உணர்ச்சிகள் மட்டும் தான் அடிப்படையான உணர்ச்சிகள். மற்ற உணர்ச்சிகளான காதல், அன்பு, பாசம், நேசம், பொறுமை, விட்டுக்கொடுத்தல், இரக்கம் காட்டுதல் இப்படி எல்லா உணர்வுகளும் நம் கற்பிதங்களால் மனிதனுக்குள் வளர்க்கப்பட்ட விடயங்களே.  இது போன்ற உணர்வுகளை நாம் தலைமுறை தலைமுறையாக கற்பித்துக் கற்பித்து, இன்று மனித இனம் இந்த நிலைமைக்கு வந்து நிற்கின்றது. இதிலிருந்து இன்னும் மேம்பட்டு உயர் நிலைக்குச் […]

30/11/2023 Inbaaraja
“எல்லோருக்குள்ளும் ஒரு ஈகோ இருக்கு” – ஹரிஷ் கல்யாண் | பார்க்கிங் சினிமா

“எல்லோருக்குள்ளும் ஒரு ஈகோ இருக்கு” – ஹரிஷ் கல்யாண் | பார்க்கிங்

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலருடைய நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக உருவாகியுள்ள ’பார்க்கிங்’ படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரித்துள்ளது. இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. சோல்ஜர்ஸ் ஃபேக்டரி ஸ்ரீனீஸ், “நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு என் செலவுகளைக் கவனித்து வந்த என் பள்ளி நண்பர்களுக்கு நன்றி. என் ஸ்கூல்மேட் தான் இயக்குநர் நெல்சன். அவரை டார்ச்சர் செய்துதான் […]

26/11/2023 Dinesh R
திருமணம் விமர்சனம் சினிமா

திருமணம் விமர்சனம்

வாழ்நாள் சம்பாத்தியத்தைக் கல்யாணத்தில் சுலபமாக இழந்துவிடுவது நம் பெருமைகளில் ஒன்று. கையில் பணமில்லாவிட்டாலும், பணத்தை எப்படியேனும் புரட்டி வாழ்நாளைக் கடனாளியாகக் கழிக்க அஞ்சாத தற்கொலை மனோபாவம் இல்லாத நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் மிகவும் அரிதானவை. சேரன் முன் வைக்கும் திருத்தம், திருமண வைபவத்தில் அதீதமாக விரயமாகும் பொருளாதாரத்தைத் தவிர்க்கலாம் என்ற ஒன்றை மட்டுந்தான். தலைப்பில் தொனிக்கும் திருத்தங்’கள்’ என்ற பன்மை விகுதி ஒரு சினிமாட்டிக் எக்ஸாகிரேஷன் தான். சமூகத்தின் மீதான சேரனின் அதீத காதல் அவரது கலையார்வத்தையும் […]

04/03/2019 Dinesh R
காற்றின் மொழி விமர்சனம் சினிமா

காற்றின் மொழி விமர்சனம்

‘தும்ஹாரி சுலு’ எனும் ஹிந்திப் படத்தின் மறு உருவாக்கமாக வந்துள்ளது ‘காற்றின் மொழி’ திரைப்படம். சுலோச்சனாவாக நடித்த வித்யாபாலனின் பாத்திரத்தில் விஜயலக்‌ஷ்மியாக ஜோதிகா நடித்துள்ளார். நாயகியை மையப்படுத்திய படமாக ஜோதிகா தேர்ந்தெடுத்து நடிப்பது சிறப்பு. ஒரே மாதிரியான அம்சம் பொருந்திய கதைகளிலேயே உழலாமல், ஜோதிகாவைப் போல், முன்னணி நாயகர்களும் படத்தைத் தேர்ந்தெடுத்தால் எப்படியிருக்கும்? பன்னிரெண்டாம் வகுப்பு தேறாத விஜியலக்‌ஷ்மிக்கு எதிர்பாராத விதமாக ஹலோ எஃப்.எம்.-இல் ஆர்ஜே-வாக (RJ – Radio Jockey) வேலை கிடைக்கிறது. அதனால் அவர் […]

17/11/2018 Dinesh R
நோட்டா விமர்சனம் சினிமா

நோட்டா விமர்சனம்

ஷான் கருப்புசாமியின் வெட்டாட்டம் நாவல் அப்படியே படமாக ஆனந்த் ஷங்கரால் எடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் வினோதன் தனது மகன் வருணிடம் முதலமைச்சர் பதவியை, இரண்டு வாரத்திற்குக் கைமாற்றிவிட்டு தன் மீது நீதிமன்றதிலுள்ள வழக்கைச் சந்திக்கத் தயாராகிறார். வழக்கின் தீர்ப்பு வினோதனுக்குப் பாதகமாகி விட, வருண் முதலமைச்சர் பதவியில் நீடிக்குமாறு ஆகிவிடுகிறது. சொந்த கட்சி ஆட்களின் அத்துமீறல், இயற்கைச் சீற்றம், குடும்பத்தின் மீதான உயிர் அச்சுறுத்தல் என வருண் தனக்கு முன்னுள்ள சவால்களை எல்லாம் எப்படிச் சமாளிக்கிறான் என்பதுதான் படத்தின் […]

06/10/2018 Dinesh R
களரி விமர்சனம் சினிமா

களரி விமர்சனம்

களரி என்பது பழந்தமிழர் தற்காப்புக் கலை. ‘போர்க்களம்’ என்ற பொருளில் படத்தின் தலைப்பு உபயோகிக்கப்பட்டுள்ளது. மிகத் தைரியமான பெண்ணான தேன்மொழி மீது பாசமாக உள்ளார் பயந்தாங்கொள்ளி அண்ணன் முருகேஷ். தங்கையின் கல்யாணத்திற்காக ஓடியோடி உழைக்கிறார். அன்வரைக் காதலிக்கும் தேன்மொழிக்கு, மூர்த்தியைத் திருமணம் செய்து வைக்கிறார்கள். மூன்று மாதங்களில், தேன்மொழி தன்னைத் தீயிட்டுக் கொள்கிறாள். ரத்தத்தைப் பார்த்தாலே மயங்கி விழும் முருகேஷ் தன் தங்கையின் மரணத்தில் உள்ள மர்மத்தைக் கண்டுபிடித்துப் பழி வாங்குகிறாளா என்பதுதான் படத்தின் கதை. கொச்சியில் […]

24/08/2018 Dinesh R
இந்திரஜித் விமர்சனம் சினிமா

இந்திரஜித் விமர்சனம்

தொல்லியல் துறை முன்னாள் இயக்குநர் ஒருவருக்குத் துணையாக வேலைக்குச் சேர்கிறான் துறுதுறு இந்திரஜித். மருத்துவக் குணம் கொண்ட விண்கல் ஒன்றைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள அந்தக் குழு, சவால்களையுக் எதிரிகளையும் சமாளித்துச் சாதித்தனரா என்பதே படத்தின் கதை. படத்தின் எந்தக் காட்சியும் மனதில் பதியவில்லை. ரோலர் கோஸ்டர் பயணம் போலவும், அவசரமானதொரு சாகசப் பயணம் போலவும் படம் முடிகிறது. ராசாமதியின் ஒளிப்பதிவில் கேரளக் காடுகளும், கோவா காடுகளும் கண்களுக்கு மிகக் குளிர்ச்சியாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அந்தப் பசுமையையும், இயற்கையின் […]

24/11/2017 Dinesh R
கண்ல காச காட்டப்பா விமர்சனம் சினிமா

கண்ல காச காட்டப்பா விமர்சனம்

தொடக்கத்தில் லேசான தடுமாற்றம் ஏற்பட்டாலும், கலகலப்பான படத்திற்கு உத்திரவாதம் அளித்துள்ளார் மேஜர் கெளதம். எம்.எஸ்.பாஸ்கரும், யோகி பாபுவும் தமது டைமிங் சென்ஸாலும், மாடுலேஷனாலும் 2 மணி நேரத்திற்கும் குறைவான படத்தைக் கரையேற்றியுள்ளனர். கழிவறை கட்டும் திட்டத்தில் தமிழக அமைச்சர் ஊழல் செய்து சுருட்டிய 100 கோடியைக் கொலம்பியா வங்கியில் டெப்பாசிட் செய்ய, முதற்கட்டமாக ஹவாலா மூலம் மலேஷியா அனுப்பி வைக்கப்படுகிறது. அப்பணத்தை நாயகன், நாயகிகள், நகைச்சுவை நடிகர்கள் என மொத்தம் 8 பேர் திருட முனைகின்றனர். அமைச்சரின் பணம் […]

26/11/2016 Dinesh R
நையப்புடை விமர்சனம் சினிமா

நையப்புடை விமர்சனம்

வேலுச்சாமி எனும் 70 வயது ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியின் சைலண்ட் சூப்பர் ஹீரோயிசம்தான் படம். படம் பாரதியின் ‘புதிய ஆத்திசூடி’ வரிகளோடு தொடங்குகிறது. தலைப்பும், கதையும்கூட அதிலிருந்தே தான் எடுக்கப்பட்டுள்ளது. ‘தேசத்தைக் காத்தல் செய்’தவரான வேலுச்சாமி, ‘தீயோர்க்கு அஞ்சாமல்’, ‘கொடுமையை எதிர்த்து நிற்கிறார்’. இளைய தலைமுறை தொலைக்காட்சி நிகழ்ச்சியின் ‘நேர்ப்படப் பேசு’ நிகழ்ச்சியில் பங்கேற்று, ‘வெடிப்புறப் பேசு’கிறார். மேலும், அச்சத்தினைத் தவிர்த்து, ஆண்மை தவறாமலும் சாவதற்கு அஞ்சாமலும், ரெளத்திரத்தினைப் பழகி, பாதகம் செய்வோர்களை “நையப்புடை” க்கிறார் […]

26/02/2016 Dinesh R
உப்பு கருவாடு விமர்சனம் சினிமா

உப்பு கருவாடு விமர்சனம்

சினிமாவைத் தவிர வேறொன்றினை அறியாத சந்திரனுக்கு, படம் இயக்க காசிமேடு தயாரிப்பாளர் ஒருவர் கிடைக்கிறார். பல சிக்கில்களுக்கு மத்தியில், சந்திரனால் அந்தப் படத்தை இயக்க முடிந்ததா இல்லையா என்பது தான் படத்தின் கதை. ராதாமோகனின் ஆஸ்தான நடிகர்களில் ஒருவரான குமரவேல் தான் படத்தின் நாயகன். அவர் பீடி பிடித்துக் கொண்டே முதற்பாதி படத்தில் பட்டும் படாமலும் திரையில் தோன்றினாலும், இரண்டாம் பாதியில் ஒட்டுமொத்த படத்துக்கே தான் தான் நாயகனென கருணாகரனை மிக இலகுவாக முந்தி விடுகிறார். மாஞ்சா என்ற […]

27/11/2015 Dinesh R
சுட்ட கதை விமர்சனம் சினிமா

சுட்ட கதை விமர்சனம்

சுட்ட கதை – முழு நீள ஃபேண்டசி தமிழ்ப்படம். ‘பாஸ்மார்க்’கில் (BOSSMARK) குடித்து விட்டு ஒருவரை ‘சுட்டு’க் கொலை செய்து விடுகிறார் கோரமலை கான்ஸ்டபிள் ராம்கி. பின் என்னானது என்பது தான் சுட்ட கதை. கான்ஸ்டபிள் ராம்கியாக பாலாஜி. அவர் அனிச்சைத் திருட்டு (Kleptomania) எனும் உளக்குறையால் பாதிக்கப்பட்டவர். இவரும் வலப்பக்க காது கேளாதவருமான கான்ஸ்டபிள் சங்கிலிராயனும் லட்சியவாதிகள். கோரமலையில் தர்மத்தை நிலைநாட்டுவது தான் அவர்களின் அந்த உயரிய லட்சியம். சிலந்தி எனும் மலைவாசிப் பெண்ணால் அவர்களின் […]

26/10/2013 admin