32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
குறிச்சொல்

எஸ்.ஏ.சந்திரசேகர்

11 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன
கூரன் விமர்சனம் சினிமா முக்கியச் செய்தி
01/03/2025 Dinesh R 3 நிமிட வாசிப்பு

கூரன் விமர்சனம்

கூரன் என்றால் கூர்மையான அறிவை உடையவன் எனப் பொருள் கொள்ளலாம். ஆனால், இப்படத்தில் கூர்மையான அறிவைக் கொண்டுள்லதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது ஒரு பெண் நாயாகும். தன் குட்டியைக் காரில் மோதிக் கொல்லுபவனுக்கு எதிராக வழக்கு தொடுக்கிறது ஜான்சி எனும் நாய். நாயின் அந்த வேதனையைப் புரிந்து, நாயின் சார்பாக வழக்காடுகிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். நாய்க்கு நீதி கிடைத்ததா என்பதே படத்தின் கதை. கொஞ்சம் நம்ப முடியாத கதை என்றாலும், திரைக்கதையின் மூலமாகப் பார்வையாளர்கள் ஏற்றுக் கொள்ளும்படி படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. திரைக்கதை, […]

முழுமையாகப் படிக்க
செய்திகள் வரிசை (பக்கம் 1)
ஆலகாலம் – வஞ்சகம் சூழ் உலகு | ட்ரெய்லர் Trailer

ஆலகாலம் – வஞ்சகம் சூழ் உலகு | ட்ரெய்லர்

‘ஆலகாலம்’ திரைப்படத்தின் ட்ரெய்லரைப் புரட்சி இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் வெளியிட்டார். ட்ரெய்லரைப் பார்த்த அவர், அதில் வந்த காட்சிகள் பிடித்துப் போகவே படத்தின் முழுக் கதையையும் கேட்டறிந்தார். படத்தில் நாயகனாக நடித்துள்ள நடிகர் ஜெய கிருஷ்ணாவின் நடிப்பையும் பாராட்டினார். ‘ஆலகாலம்’ என்கிற திரைப்படம் உருக வைக்கும் ஓர் உண்மைக் கதையை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது. ‘ஆலகாலம்’ என்றால் கொடிய நஞ்சு ஆகும். வஞ்சகம், சூழ்ச்சி, மது, போதை, அடக்குமுறை என்கின்ற விஷம் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இதில் பெரும்பான்மையான […]

28/03/2024 Dinesh R
எஸ்.ஏ. சந்திரசேகருக்கு திரைத்துறை வாழ்நாள் சாதனையாளர் விருது சினிமா

எஸ்.ஏ. சந்திரசேகருக்கு திரைத்துறை வாழ்நாள் சாதனையாளர் விருது

எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தின் சார்பில் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகருக்குத் திரைத்துறை வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப் பட்டுள்ளது. நவம்பர் 21 ஆம் தேதி அன்று எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தின் ‘விஸ்காம்’ எனப்படும் காட்சித் தொடர்பியல் துறையின் ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் திரையுலகில், தனித்துவமான படங்களைத் தன் பாணியில் இயக்கி, தனக்கென முத்திரை பதித்து சாதனை படைத்த புரட்சி இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு, எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தின் வேந்தர் திரு. ஏ.சி.சண்முகம் அவர்கள் ‘திரைத்துறை வாழ்நாள் சாதனையாளர் ‘விருதினை வழங்கினார். […]

21/11/2023 Dinesh R
சேரன் நடித்த ‘தமிழ்க் குடிமகன்’  திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு சினிமா

சேரன் நடித்த ‘தமிழ்க் குடிமகன்’  திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு

லட்சுமி  கிரியேஷன்ஸ்  தயாரிப்பில்  உருவாகியுள்ள  திரைப்படம் ‘தமிழ்க்குடிமகன்.  இயக்குநர் சேரன் கதாநாயகனாக  நடித்துள்ள இந்த படத்தை  ‘பெட்டிக்கடை’ , ‘பகிரி’  ஆகிய படங்களை  இயக்கிய  இசக்கி கார்வண்ணன்  இயக்கியுள்ளார்.   முக்கிய  வேடங்களில் லால், எஸ்.ஏ. சந்திரசேகர், வேல ராமமூர்த்தி,  துருவா, ‘மிக மிக அவசரம்’  புகழ்  ஸ்ரீபிரியங்கா,  தீபிக்ஷா,  அருள்தாஸ்,  ரவிமரியா மற்றும் பலர்  நடித்துள்ளனர்.  இந்தப்  படத்திற்கு ‘விக்ரம் வேதா’ புகழ் சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.  ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவை கவனிக்க, படத்தொகுப்பை  கார்த்திக் […]

17/08/2023 Inbaaraja
“மாநாடு: வெற்றி கிடைத்ததும் மாறக்கூடாது” – STRஇன் போக்கைக் கண்டித்த SAC சினிமா

“மாநாடு: வெற்றி கிடைத்ததும் மாறக்கூடாது” – STRஇன் போக்கைக் கண்டித்த SAC

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான மாநாடு திரைப்படம் கடந்த நவம்பர் 25 ஆம் தேதி அன்று வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. 25 ஆவது நாளில் கூட பல திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த வெற்றிக்குக் காரணமான அனைவருக்கும் நன்றி சொல்லும் விதமாக இந்தப் படத்தின் நன்றி நவில்தல் விழா, டிசம்பர் 21 ஆம் தேதி அன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. […]

22/12/2021 Dinesh R
எஸ். ஏ. சந்திரசேகரனின் 70-வது படம்- “கேப்மாரி” என்கிற C.M. சினிமா

எஸ். ஏ. சந்திரசேகரனின் 70-வது படம்- “கேப்மாரி” என்கிற C.M.

ஜெய்-யின் 25-வது படமான கேப்மாரி என்ற CM படத்தில் வைபவி சான்ட்லியா, அதுல்யா ரவி இருவரும் நாயகிகளாக நடிக்க சத்யன், தேவதர்ஷினி, லிவிங்ஸ்டன், பவர்ஸ்டார், சித்தார்த் விபின் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இந்தப் படம் காதல், நகைச்சுவை, இளமை குறும்புகளுடன் உருவாகிறது. M.G.R. பிலிம் சிட்டியில், பிரம்மாண்டமனஅ அரங்கம் வடிவமைக்கப்பட்டு அதிரடியான பாடல் காட்சி படமாக்கப்பட்டது. என் காதல் ராணி என்னைத் தூக்கி வீசிட்டா என் ஹார்ட்ட அவ தேனி போல கொட்டிட்டா என்று ஹரிசரண் பாடிய […]

12/08/2019 Dinesh R
“என் குரு பாக்யராஜ்; ஆசான் எஸ்.ஏ.சந்திரசேகர்” – பா.விஜய் சினிமா

“என் குரு பாக்யராஜ்; ஆசான் எஸ்.ஏ.சந்திரசேகர்” – பா.விஜய்

வில் மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பா.விஜய் நாயகனாக நடித்துத் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘ஆரூத்ரா’. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் முரளி அவர்கள் வெளியிடும் இந்தப் படத்திற்கு, ‘மெலோடி கிங்’ வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் இசை வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசுகையில், “நான் மற்றவர்களின் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொள்வதில்லை. ஏனெனில் நான் நடிகனில்லை. ஆனால் எனக்கு பா.விஜயைப் பிடிக்கும். இந்தப் படத்தின் கதையை முழுவதுமாக இயக்குநர் பா.விஜய் என்னிடம் […]

12/08/2018 Dinesh R
கொடி விமர்சனம் சினிமா

கொடி விமர்சனம்

தனுஷ் முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடிப்பதோடு அரசியல்வாதியாகவும் நடிக்கிறார். அதை விடக் குறிப்பிடத்தக்க விஷயம், தனுஷ்க்குச் சமமான முக்கியத்துவத்தோடு த்ரிஷா பாத்திரமும் அமைக்கப்பட்டுள்ளதே! நாயகன் இரு வேடங்களில் நடிக்கும் படத்தில், நாயகியொருவருக்கு மிக அழுத்தமான கதாப்பாத்திரம் அளிக்கப்பட்டது சொல்லொன்னா மகிழ்ச்சியை அளிக்கிறது. அரசியலால் மக்களுக்கு நல்லது செய்யமுடியுமென நம்பும் கருணாஸ், தனது இரு மகன்களில் ஒருவரான கொடியின் முன் தீக்குளித்து விடுகிறார். அதன் பின், கட்சியே கதியெனக் கிடக்கும் கொடிக்கு, எதிர்க்கட்சியைச் சேர்ந்த ருத்ரா மீது […]

29/10/2016 Dinesh R
நையப்புடை விமர்சனம் சினிமா

நையப்புடை விமர்சனம்

வேலுச்சாமி எனும் 70 வயது ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியின் சைலண்ட் சூப்பர் ஹீரோயிசம்தான் படம். படம் பாரதியின் ‘புதிய ஆத்திசூடி’ வரிகளோடு தொடங்குகிறது. தலைப்பும், கதையும்கூட அதிலிருந்தே தான் எடுக்கப்பட்டுள்ளது. ‘தேசத்தைக் காத்தல் செய்’தவரான வேலுச்சாமி, ‘தீயோர்க்கு அஞ்சாமல்’, ‘கொடுமையை எதிர்த்து நிற்கிறார்’. இளைய தலைமுறை தொலைக்காட்சி நிகழ்ச்சியின் ‘நேர்ப்படப் பேசு’ நிகழ்ச்சியில் பங்கேற்று, ‘வெடிப்புறப் பேசு’கிறார். மேலும், அச்சத்தினைத் தவிர்த்து, ஆண்மை தவறாமலும் சாவதற்கு அஞ்சாமலும், ரெளத்திரத்தினைப் பழகி, பாதகம் செய்வோர்களை “நையப்புடை” க்கிறார் […]

26/02/2016 Dinesh R