ஜெய்-யின் 25-வது படமான கேப்மாரி என்ற CM படத்தில் வைபவி சான்ட்லியா, அதுல்யா ரவி இருவரும் நாயகிகளாக நடிக்க சத்யன், தேவதர்ஷினி, லிவிங்ஸ்டன், பவர்ஸ்டார், சித்தார்த் விபின் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இந்தப் படம் காதல், நகைச்சுவை, இளமை குறும்புகளுடன் உருவாகிறது.
M.G.R. பிலிம் சிட்டியில், பிரம்மாண்டமனஅ அரங்கம் வடிவமைக்கப்பட்டு அதிரடியான பாடல் காட்சி படமாக்கப்பட்டது.
என் காதல் ராணி என்னைத் தூக்கி வீசிட்டா
என் ஹார்ட்ட அவ தேனி போல கொட்டிட்டா
என்று ஹரிசரண் பாடிய பாடலை 50 -க்கும் மேற்பட்ட மும்பை அழகிகளுடன் கலர்ஃபுல்லாகப் படமாக்கப்பட்டது. இந்தப் பாடலுக்காக ஜெய் மிக சிரத்தை எடுத்துச் சிறப்பாக நடனமாடியுள்ளார். தெறி, பேட்டை முதலான படங்களுக்கு நடனம் அமைத்த ஷெரீலஃப் மாஸ்டர் இந்தப் பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். C.M. யாருமே எதிர்பாராத இளமை ததும்பும் காதல் கதை இது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் இளைஞர்களை விசிலடிக்க வைக்கும் என்று இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் கூறுகிறார். இவர் நான்கு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்கும் படம் இது.
>> கதை திரைக்கதை வசனம் இயக்கம் – எஸ் .ஏ.சந்திரசேகரன்
>> இசை – சித்தார்த் விபின்
>> ஒளிப்பதிவு – ஜீவன்
>> படத்தொகுப்பு – ஜி.கே. பிரசன்னா
>> கலை – வீரமணி கணேசன்