‘ஆலகாலம்’ திரைப்படத்தின் ட்ரெய்லரைப் புரட்சி இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் வெளியிட்டார்.
ட்ரெய்லரைப் பார்த்த அவர், அதில் வந்த காட்சிகள் பிடித்துப் போகவே படத்தின் முழுக் கதையையும் கேட்டறிந்தார். படத்தில் நாயகனாக நடித்துள்ள நடிகர் ஜெய கிருஷ்ணாவின் நடிப்பையும் பாராட்டினார். ‘ஆலகாலம்’ என்கிற திரைப்படம் உருக வைக்கும் ஓர் உண்மைக் கதையை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது.
‘ஆலகாலம்’ என்றால் கொடிய நஞ்சு ஆகும். வஞ்சகம், சூழ்ச்சி, மது, போதை, அடக்குமுறை என்கின்ற விஷம் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இதில் பெரும்பான்மையான மனித இனங்கள் சிக்கி சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், இலட்சியத்தோடு வளர்த்தெடுக்கப்படும் மகன், வெற்றிக்காகப் போராடும் இளைஞன், தன்னம்பிக்கையுடன் கரம் கோர்க்கும் காதலி, இவர்கள் வாழ்க்கையைச் சூறையாடும் வஞ்சகம், சூழ்ச்சி எனும் ஆலகாலம். இதில் இருந்து இவர்கள் மீண்டார்களா, தாயின் லட்சியம், இளைஞனின் முயற்சி, காதலியின் நம்பிக்கை வெற்றி பெற்றதா என்பதே ‘ஆலகாலம்’ திரைப்படம் சொல்லும் கதை.
இப்படத்தை ஜெயகிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். தமிழ்த்திரை உலகில் யாரிடமும் உதவியாளராக இல்லாமல் இயக்குநர்களாகி லோகேஷ் கனகராஜ், உறியடி விஜயகுமார், கார்த்திக் நரேன் போன்ற இயக்குநர்கள் முத்திரை பதித்துள்ளனர். அவர்களைப் போன்று இப்படத்தை இயக்கியுள்ள ஜெயகிருஷ்ணமூர்த்திம் யாரிடமும் உதவியாளராக இல்லாமல் தனது ரசனையின் மூலமும் தேடல் அனுபவத்தின் மூலமும் சினிமாவைக் கற்றுக் கொண்டு களத்தில் இறங்கியுள்ளார்.
காலா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ஈஸ்வரிராவ் இப்படத்தில் அம்மாவாக முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். நாயகனாக ஜெயகிருஷ்ணா, நாயகியாக சாந்தினி நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் தீபா, பாபா பாஸ்கர், தங்கதுரை, கோதண்டம், சிசர்மனோகர் மற்றும் பலர் நடித்துள்ளனர். காதலும் பாசமும் நிறைந்த ஒரு குடும்பப் படமாக உருவாகியுள்ளது.
ஸ்ரீ ஜெய் புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனம் தயாரித்துள்ளது. ஆக்சன் சென்டிமென்ட் நிறைந்த இப்படத்தைப் பார்த்த அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
படத்திற்கு யூ சான்றிதழ் வழங்கியுள்ள தணிக்கைத் துறை அதிகாரிகள், இந்தப் படம் காலத்துக்கு ஏற்ற கதையைச் சொல்கிறது என்றும் கணவன், மனைவி, அம்மா, குடும்பம் என்பதையும் தாண்டி நல்ல சமூக நோக்கத்தோடு உருவாகியிருக்கும் ஒரு படமாக இருப்பதாகவும் பாராட்டி இருக்கிறார்கள்.
தொழில்நுட்பக்குழு:
தயாரிப்பு – ஸ்ரீ ஜெய் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் – ஜெயகிருஷ்ணா
இசை – என்.ஆர்.ரகுநந்தன்
ஒளிப்பதிவு – கா. சத்தியராஜ்
எடிட்டர் – மு. காசிவிஸ்வநாதன்
கலைஇயக்கம் – தேவேந்திரன்
நடனஇயக்குநர் – பாபா பாஸ்கர், அசார்
ஸ்டண்ட். – ராம்குமார்
டிசைன்ஸ் – டிசைன் பாய்ண்ட்
நிர்வாகத் தயாரிப்பு – மணி தாமோதரன்
மக்கள் தொடர்பு – சக்திசரவணன்
ஏப்ரல் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்த ஆலகாலம் திரைப்படத்தை ஆக்சன் ரியாக்ஷன் நிறுவனம் சார்பில் ஜெனிஷ் வெளியிடுகிறார்.