
Police Family – லாக்கப் மரணங்கள்
சமீப வருடங்களில் நடைபெற்ற சில லாக்கப் மரணங்கள் தமிழகத்தையே உலுக்கியதுடன் இந்திய அளவிலும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த லாக்கப் மரணங்கள், அது தொடர்பான பழிவாங்கல்கள், அதனால் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அதை அவர்கள் சமாளிக்கும் விதம் இவற்றை மையப்படுத்தி உருவாகி உள்ள படம் ‘போலீஸ் ஃபேமிலி’ ஆகும்.
ஆத்திரம் கொண்டு பழி வாங்குதல் என்பது எந்த ஒரு விஷயத்துக்கும் தீர்வு ஆகாது. அப்படிச் செய்தால் பழிவாங்கும் உணர்வு என்பது அடுத்தடுத்த தலைமுறைக்கும் தொடரவே செய்யும். ஒருவன் அதை உணர்ந்து பழிவாங்கும் எண்ணத்தை விட்டு விட்டு மன்னிக்கும் மனதுக்கு எப்போது மாறுகிறானோ, அன்று தான் அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும். இதை மையக்கருத்தாகக் கொண்டு இந்த ‘போலீஸ் ஃபேமிலி’ படம் உருவாகியுள்ளது.
ஆன் தி டேபிள் புரொடக்சன்ஸ் சார்பில் மலைச்சாமி ஏஎம் ராஜா தயாரிப்பில் இப்பட...


