Shadow

புத்தகம்

மூதின் முல்லை – நாவல் விமர்சனம் | மு. ஜெகன் கவிராஜ்

மூதின் முல்லை – நாவல் விமர்சனம் | மு. ஜெகன் கவிராஜ்

இது புதிது, கட்டுரை, புத்தகம்
அண்ணன் டேனியல் அவர்களின் தலைப்பிள்ளை இந்த நாவல். தலைப்பிலே நம்மை மிரள வைத்துவிட்டார். மூத்தக்குடி என்பதன் பொருளாக இத்தலைப்பை நாவலுக்குச் சூட்டியுள்ளார். மூத்தக்குடிகளின் பாட்டுடைத் தலைவிகளாக இந்நாவலில் பெண்களே வியாபித்திருக்கிறார்கள். நாவல் பற்றிப் பேசும் முன் அண்ணன் டேனியல் பற்றிப் பார்ப்போம். எப்பொழுதுமே தேடலிலே திரியும் மனிதர். அவர் உடலின் வெயிட்டுக்கும், வாழ்வில் அவர் சந்தித்த கனத்திற்கும் சம்பந்தமே இருக்காது. "இந்த உடம்பாடா இதெல்லாம் தாங்கியது" என்றே தோன்றும். அடியேனுக்கு அவரது அகவாழ்வு சேஷ்டைகளும் புரியும். புற வாழ்வு கஷ்டங்களும் தெரியும் என்பதால் நான் அவரிடம் இருந்து வேறோர் நாவலை எதிர்பார்த்தேன். வாழ்வு போலவே அவரின் நாவலும் சற்றும் எதிர்பாராத அனுபவத்தைத் தந்தது. அவரின் நாவல் படைப்புக்கு இதயமாக இருந்தவர் நண்பர் தினேஷ் ராம். முருகன் மந்திரம் சார் இதயத்தைத் தனது மதிமகிழ் பதிப்பகம் ச...
எழுதப்படாத முகங்கள் |  மு.ஜெகன் கவிராஜ்

எழுதப்படாத முகங்கள் | மு.ஜெகன் கவிராஜ்

இது புதிது, புத்தகம்
நம் வாழ்க்கையில் நாம் எத்தனையோ முகங்களைக் கடந்து வந்திருப்போம். அதில் பெரும்பாலான முகங்கள் நம் நினைவில் இருந்து அகன்றிருக்கும். வெகு சில முகங்கள் மட்டுமே நம் நினைவில் நீங்காமல் நிலைத்திருக்கும். அப்படி நிலைத்திருக்கிற ஒவ்வொரு முகங்களின் பின்னாலும் ஏதோவொரு சுவையுடன் கூடிய வாழ்க்கை இருக்கும். அதுமட்டுமின்றி அந்த முகங்களில் சில நம் வாழ்க்கையின் மீளாப் பக்கங்களை தீராத் துயரத்துடன் எழுதி இருக்கக்கூடும். துவண்டு கிடந்த நம்மைத் தூக்கி நிறுத்தியிருக்கக் கூடும், வாய்ப்பற்று வறண்டு கிடந்த நம் வாழ்வை வளமாக்கியிருக்கக் கூடும்,  தோழமையுடன் நம் தோள் தொட்டிருக்கக் கூடும், நம்மைக் குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்கி இருக்கக் கூடும்.  இப்படி ஏதோவொரு சிறு துரும்பையாவது நம் வாழ்வில் நிகழ்த்தியிருந்தால் மட்டுமே அந்த முகங்கள் நம் நினைவில் இருக்கும். ஆனால் 'எழுதப்படாத முகங்கள்' புத்தகத்தின் ஆசிரியர் மு.ஜெகன...
கமல்ஹாசன் வெளியிட்ட ‘வானலைகளில் ஒரு வழிபோக்கன்’ புத்தகம்

கமல்ஹாசன் வெளியிட்ட ‘வானலைகளில் ஒரு வழிபோக்கன்’ புத்தகம்

இது புதிது, புத்தகம்
சிலோன் வானொலியின் B.H.அப்துல் ஹமீது எழுதிய ‘வானலைகளில் ஒரு வழிபோக்கன்’ எனும் நூல், டிசம்பர் 18 ஆம் தேதி அன்று, சென்னை கலைவாணர் அரங்கத்தில் வெளியிடப்பட்டது. தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் பி.சுசீலா பெற்றுக்கொண்ட புத்தகத்தின் முதல் பிரதியை உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட்டார். இரண்டாவது பிரதியை ராம்குமார் கணேசன் (சிவாஜி கணேசனின் மூத்த மகன்) பெற்றுக்கொண்டார். பிளாக் ஷீப் விக்னேஷ்காந்த் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை JMR Events கவனித்துக் கொள்ள, நிகழ்ச்சியை வழங்கியது பிளாக் ஷீப் டிவி. மதன்ஸ்' பேண்ட்-டின் இசை கச்சேரியில், பெரும்பாலும் கமலின் படங்களில் இருந்து ஒரு கலவையான பாடல்களின் தொகுப்பாகவே பாடப்பட்டது, நிகழ்ச்சியின் குறிப்பிடத்தக்க ஓர் அம்சம். கமல்ஹாசன் தனது உரையில், அப்துல் ஹமீதின் தூய்மை மற்றும் தமிழை உச்சரிப்பதில் முழுமை பெற்றிருப்பதைக் குறிப்பிட்டார். அப்துல...
பிளாக் ஷீப் டிவி | ‘வானலைகளில் ஒரு வழிப்போக்கன்’ – புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி

பிளாக் ஷீப் டிவி | ‘வானலைகளில் ஒரு வழிப்போக்கன்’ – புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி

புத்தகம்
பிரபல தொகுப்பாளரும், சர்வதேசளவில் புகழ்பெற்ற இலங்கைத் தமிழ் அறிவிப்பாளருமான முனைவர் B.H.அப்துல் ஹமீத் அவர்களது வாழ்நாள் அனுபவங்களை உள்ளடக்கிய 'வானலைகளில் ஒரு வழிப்போக்கன்' எனும் புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்ச்சியை "பிளாக் ஷீப் டிவி" ஒளிபரப்பவுள்ளது. இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்ச்சி, டிசம்பர் 18 ஆம் தேதியன்று மாலை 05:30 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் நிகழ உள்ளது. அரை நூற்றாண்டுக் காலமாக நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும், அறிவிப்பாளராகவும் கோலோச்சிய ஆளுமையான அப்துல் ஹமீதின் இந்தப் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார் RJ விக்னேஷ்காந்த். முந்தைய தலைமுறை மேதைகளைத் தேடி ஓடிக் கொண்டாடி மகிழும் பிளாக்‌ ஷீப் டிவி நிறுவனம், இந்நிகழ்ச்சியின் முதன்மை நல்கையாளராகவும் (Title Sponsorship) செயற்படவுள்ளது. புத்தகத்தைப் பற்றி, B.H.அப்துல் ஹமீத், “இது எனது வாழ்க்கையைப் பற்றிய சுயதம்பட்ட...
Stop Weighting | VJ ரம்யாவின் ஆரோக்கியத்திற்கான புத்தகம்

Stop Weighting | VJ ரம்யாவின் ஆரோக்கியத்திற்கான புத்தகம்

புத்தகம்
தொகுப்பாளரும் நடிகையுமான விஜே ரம்யா சுப்ரமணியத்தின் முதல் புத்தகமான ‘Stop Weighting: A Guidebook for a Fitter, Healthier You’ என்ற புத்தகத்தை பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா பப்ளிஷ் செய்கிறது. பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா ஒவ்வொரு வருடமும் 250க்கும் மேற்பட்ட புதிய தலைப்புகளை வெளியிடுகிறது மற்றும் இதன் பட்டியலில் 3000க்கும் மேற்பட்ட தலைப்புகளையும் வைத்திருக்கிறது. சரிதை, பயணம், வியாபாரம், அரசியல், வரலாறு, மொழி மற்றும் தத்துவம், லைஃப்ஸ்டைல், சமையல், உடல்நலம், உடற்பயிற்சி, விளையாட்டு, விஷுவல் புத்தகம் மற்றும் குழந்தைகளுக்கான புத்தகங்கள் என வலுவான ஃபிக்‌ஷன் மற்றும் நான்- ஃபிக்‌ஷன் பிரிவுகளில் புத்தகங்களை வெளியிட்டு வருகிறது. புகழ்பெற்ற இன்ஃபுளூயன்சராக வலம் வரும் ரம்யா ஒருகாலத்தில் உடல் பருமன் காரணமாக உடல் கேலிக்கு ஆளாக்கப்பட்டார். இதனால், எல்லாரையும் போலவே உடல் இளைக்க வேண்டும் என்று எண்...
காஃப்காவினால் அல்ல!

காஃப்காவினால் அல்ல!

புத்தகம்
ஃபிரான்ஸ் காஃப்கா எனும் எழுத்தாளர் செக்கோஸ்லேவேக்கியா நாட்டில் பிறந்த ஒரு ஜெர்மானிய யூதர். உலகின் மிகவும் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவராகக் கருதப்படும் காஃப்கா உயிருடன் வாழ்ந்த காலம் நாற்பத்தியோரு வருடங்களேயானாலும், அந்தக் குறுகிய காலத்தினுள் அவர் இலக்கியத்தில் புரிந்துள்ள சாதனை மகத்தானது என்கிறார்கள். இவர் எழுதிய 'The Metamorphosis's (உருமாற்றம்) என்கிற கதை மிகவும் பிரபலமான கதை.ஒரு மனிதன் திடீரென ஒருநாள் ஒரு பூச்சியாக மாறி விடுதான விசேஷ கற்பனை. காஃப்காவைப் படித்தவர்கள் தமிழ் நாட்டில் அதிகம் பேர் இருக்க மாட்டார்கள். தமிழில் 'தங்க ஒரு....' எனும் ஒரு சிறுகதை 1961இல் வெளிவந்தது. க.நா.சு. நடத்திய "இலக்கிய வட்டம்" எனும் பத்திரிகையில் வெளி வந்த இக்கதையை எழுதியவர் கிருஷ்ணன் நம்பி. இக்கதையில் ஒரு போலீஸ்காரனும் அவனது மனைவியும் ,உருவம் சிறுத்து 'லில்லிபுட்' என்கிறோமே அது போல் மாறி, ஒரு பூட்சி...
மற்றபடி மனிதர்கள் – வெ.த. புகழேந்தி

மற்றபடி மனிதர்கள் – வெ.த. புகழேந்தி

கட்டுரை, புத்தகம்
அன்ன சத்திரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்பதுதான் இந்த நாவலின் அடிநாதம். எத்தனை பேர் இந்த நாவலை படித்திருப்பார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு இந்தப் புத்தகம் கிடைத்ததே என் கிராமத்து ஊரிலுள்ள அந்தக் குட்டி நூலகத்தின் மூலமாய்த்தான். அங்கே ஒரு நாள் க்ரைம் கதைகளைத் தேடித் தேடிக் களைத்துப் போய், விதியே என்று நொந்த படியே கையில் கிடைத்த ஒரு புத்தகத்தை எடுத்து வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். அதுதான் இந்த "மற்றபடி மனிதர்கள்". "வெ.த.புகழேந்தி" என்பவரால் எழுதப் பட்ட ஒரு சமூக நாவல் இது. எனக்குத் தெரிந்து நான் படித்த முதல் சமூக நாவலும் இதுதான். என்ன காரணத்தினாலோ அந்தக் கதை என்னை வெகுவாக ஆட்கொண்டு விட்டது. 1981 இல் மீனாட்சி புரம் எனும் கிராமத்தில் 1000க்கும் மேற்பட்டோர் ஒட்டு மொத்தமாக இஸ்லாமிற்கு மாறியதைப் பிண்ணணியாகக...
பெர்முடா | நாவல் விமர்சனம்

பெர்முடா | நாவல் விமர்சனம்

கட்டுரை, புத்தகம்
கேபிள் சங்கரின் பெர்முடா நாவல், மூன்று ஜோடிகளின் பொருந்தாக் காமத்தைப் பற்றிப் பேசுகிறது. மூன்று ஜோடிகளிலுமே ஆண் மூத்தவராகவும், பெண் இளையவராகவும் உள்ளார். பெர்முடா எனும் தலைப்பினை ஒரு குறியீட்டுப் பெயராகக் கொள்ளலாம். பொருந்தாக் காமம் எனும் கவர்ச்சியான ஈர்ப்பில் அந்த ஜோடிகள் சிக்குகின்றனர். அந்தப் பொல்லாத ஈர்ப்பு அவர்களைத் தன்னுள் இழுத்துப் புதைத்துக் கொள்கிறதா அல்லது அந்த ஈர்ப்பிலிருந்து லாகவமாய் வெளியேறி விடுகின்றனரா என்பதுதான் நாவல். பொருந்தாக் காமத்திற்குத் தொல்காப்பியர் சூட்டும் பெயர் “பெருந்திணை.” அதை மேலும் நான்கு வகைகளாகப் பிரிக்கிறார். அதில், இரண்டாம் வகையான ‘இளமைதீர் திறம்’ என்பதில்தான் நாவலின் அச்சாணி சுழல்கிறது. இளமை நீங்கிய நிலையில் கொள்ளும் காதல் என்பதே ‘இளமை தீர் திறம்’ ஆகும். ஆனால் ஒருவரின் வயதைக் கொண்டு இளமை தீர்ந்தது என எப்படிச் சொல்ல முடியும்? வயதைக் கொண்டு பருவ நிலை...
அம்மாவின் மரணம் | நூல் விமர்சனம்

அம்மாவின் மரணம் | நூல் விமர்சனம்

கட்டுரை, புத்தகம்
அண்ணாதுரை படத்தில் கோதண்டம் பாத்திரத்திற்கு அற்புதமான ஜீவனை அளித்திருப்பார் பத்திரிகையாளரும் நடிகருமான சு. செந்தில் குமரன். அவர், தனது அம்மாவின் மரணத்தைத் தாங்க முடியாதவராகத் தன்னை ஆற்றுப்படுத்திக் கொள்ள, அம்மாவின் நினைவாக 67 கவிதைகளை இயற்றியுள்ளார். மரணித்த பொழுது அவரது அம்மாவின் வயது 67. பெண்ணென்றால் பேயென்றே விண்ணதிரச் சொன்ன பட்டினத்தான் அன்னையென்ற உறவை மட்டும் அள்ளிக்கொண்டான் - ஆங்கே அழுதழுது புரண்டபடி கொள்ளி வைத்தான். அப்படிப் பட்டினாத்தானே மூழ்கிய பாசத்தாய்ப் பெருங்கடலைத் தன்னால் எப்படி நீந்திக் கடக்க முடியும் எனக் கேள்வியெழுப்புகிறார். மரணச் செய்தி கேட்ட நொடி ஏற்பட்ட அதிர்வு முதல் அம்மாவின் நினைவு எழுந்து வாட்டும் ஒவ்வொரு தருணத்திலும், அம்மா இருந்தால் என்ன செய்திருப்பார் என, அம்மாவின் நினைவுகளில் புதைந்து ஆறுதல் காண முற்படுகின்றன அவரது கவிதைகள். செந்தில் குமரனின் அம்மா...
நான் இனி நீ.. நீ இனி நான் | ஜெகன் சேட் – நூல் விமர்சனம்

நான் இனி நீ.. நீ இனி நான் | ஜெகன் சேட் – நூல் விமர்சனம்

கட்டுரை, புத்தகம்
குறுநாவல் என்று கூடச் சொல்ல முடியாத ஒரு நெடுங்கதை. ரோலர்கோஸ்டர் போல் விறுவிறுவென ஓடும் 90'ஸ் கிட் ஒருவரின் காதல் கதை. முதல் வரியிலேயே, தான் பார்த்த பெண்ணின் அழகு பற்றிய பிரமிப்பில் இருந்து தொடங்குகிறது ஜெயராமனின் காதல் கதை. பேச்சுமொழியில், தனக்கு நெருங்கிய ஒருவரிடம் ஜெயராமன் கதை சொல்வது போல் எழுதியுள்ளார் ஜெகன் சேட். ஒருவரின் காதல் கதையை, அவர் வாயாலேயே கேட்பதுதான் எத்தனை சுவாரசியம்? இயக்குநர் ராஜேஷின் (ஒரு கல் ஒரு கண்ணாடி) ஆரம்பக் கால படங்கள் போல் தொடங்கும் கதை, கே. பாலசந்தரின் உறவுச் சிக்கல்களைப் பேசும் கதையைப் போல் முடிகிறது. அந்த சிக்கல்களையும், சுந்தர்.சி பாணியில் கலகலப்பாகவே அணுகியுள்ளார் ஜெகன் சேட். ஜெயராமன் தனது கதையைச் சொல்லும் போக்கில் பல அதிர்ச்சிகளைத் தருகிறார். அவரிடம் ஒரு பெண், 'நீ விர்ஜினா?' என வினவுகிறார். 90'ஸ் கிட்ஸ்களுக்குத்தான் தெரியும், அது எத்தனை வலி மிகுந்த கலாச்சார...
எழுதாப் பயணம் – ஒரு போராட்ட வீரரின் கள அறிக்கை

எழுதாப் பயணம் – ஒரு போராட்ட வீரரின் கள அறிக்கை

கட்டுரை, சமூகம், புத்தகம்
ஒரு ஆட்டிசக் குழந்தையின் அம்மாவாக, சிறப்புக் குழந்தைகளின் ஆசிரியையாக, தனது அனுபவங்களை அழகாகத் தொகுத்து, 'எழுதாப் பயணம்' எனும் நூலை எழுதியுள்ளார் லக்‌ஷ்மி பாலகிருஷ்ணன். இந்நூலின் சிறப்பம்சம், எவருக்கும் புரியும்படியாக எழுதப்பட்டுள்ள ரொம்ப எளிமையான மொழிநடையே ஆகும். சமூகத்தில், ஆட்டிசம் பற்றிய போதுமான விழிப்புணர்வு இல்லை. அது ஏற்படுவதற்கு முன்பாகவே, அதை வைத்துச் சம்பாதிக்க சிலர் தொடங்கிவிட்டனர். நம் மக்களின் அறியாமை மேல உள்ள அசைக்க முடியாத நம்பிக்கையில், ஆட்டிசத்துக்குத் தீர்வு உண்டு என மக்களை நம்ப வைத்து பணம் பார்க்கின்றனர். லக்‌ஷ்மி பாலகிருஷ்ணன் போன்றோர் தொடர்ந்து, இத்தகைய வலையில் ஆட்டிச நிலையாளர்களின் பெற்றோர்கள் ஏமாந்து விடக்கூடாதென, கிடைக்கும் அத்தனை சந்தர்ப்பத்திலும் பேசி வருகின்றனர். ஆனாலும், ஆட்டிசம் பற்றி, பொதுவெளியில் மீண்டும் மீண்டும் உரக்கச் சொல்லவேண்டிய அவசியம் இன்னும் அப்படி...
மனச்சுரங்கத்தை உழும் ‘கரும்புனல்’

மனச்சுரங்கத்தை உழும் ‘கரும்புனல்’

புத்தகம்
இந்தியாவின் அச்சுறுத்தும் முகத்தினைப் படம்பிடித்துக் காட்டியுள்ளார் எழுத்தாளர் ராம்சுரேஷ். பீஹாரிலுள்ள கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி சுரங்கங்கள் தான் கதையின் களம். 1995 இல் நடப்பதாகக் கதை நகர்கிறது. 35 அத்தியாயங்கள் உடைய நாவல் என்றாலும், எந்த அத்தியாயமும் நான்கு பக்கங்களுக்கு மிகாமல் உள்ளது. முன்னுரை, என்னுரை நீங்கலாக 214 பக்கங்கள் கொண்ட நாவலை ஒரே மூச்சில் படிக்க முடிவதுதான் ராம்சுரேஷ் எழுத்தின் சிறப்பு. நாவலின் சரளமான flow-க்குக் காரணம், அவரது நினைவோடைகளில் சாம்பல் படிவமாய்ப் படிந்திருந்த அனுபவங்களைத் தூசி தட்டி புனைவாக்கியுள்ளார். கரும்புனல் என்ற தலைப்பு எவ்வளவு கச்சிதமாகப் பொருந்துகிறது என நாவலை முடித்ததுமே தோன்றுவதைத் தவிர்க்க முடியாது. செய்திகளிலும், செவி வழியாகவும் நாம் கேள்விப்படும் பீஹார், ஏன் அவ்வாறு இருக்கிறது என்பதற்கான விடையை நாவல் முன்வைக்கிறது. ஜார்க்கண்ட்டாக பீ...
பூக்கள் விற்பனைக்கல்ல – நாவல் விமர்சனம்

பூக்கள் விற்பனைக்கல்ல – நாவல் விமர்சனம்

புத்தகம்
அமேசான் நடத்தும் Pen To Publish போட்டிக்காக ஹேமா ஜே அவர்களால் எழுதப்பட்ட நாவல் “பூக்கள் விற்பனைக்கல்ல”. குடும்ப நாவல் வகையைச் சேர்ந்த கதை. பொதுவாகக் குடும்ப நாவல்களை எழுதுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. பெரும்பாலும் பெண் வாசகிகள் அதிகமாக இருக்கும் இந்த வகை பிரிவில், காதலையே பல்வேறு விதமாய்க் கொடுத்தாலும் அதை ரசித்துப் படிக்க விரும்பும் வாசகி / வாசகர்களுக்கு என்ன விதமான புதுமையான முயற்சிகளைத் தந்து விட முடியும் என்ற எழுத்தாளர்களின் உளவியல் திறமை சார்ந்த ஒன்று அது. காதலைத் திகட்டத் திகட்டக் கொடுத்தும், இன்னும் பத்தாமல் போதலை போதலை என்று துடிக்கும் இரண்டு துறை இருக்கிறதென்றால், அது ஒன்று சினிமா, இன்னொன்று இந்தக் குடும்ப நாவல்கள் என்று சொல்லலாம். தமிழ் சினிமாவைப் போன்றே இந்தக் குடும்ப நாவல் பிரிவிலும் அதை, அதன் டெம்ப்ளேட்டிலிருந்து வெளியே எடுத்து வந்து விட வேண்டும் என்று பல எழுத்தாளர்கள் ...
இந்தியப் பெருங்கடலில் உருவாகும் ஜூவாலை

இந்தியப் பெருங்கடலில் உருவாகும் ஜூவாலை

புத்தகம்
தமிழ் சினிமாவில் வெகு சில படங்களே கடலில் படமாக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் மொத்த படத்தில் 75 சதவீதம் இந்தியப் பெருங்கடலில் படமாக்கப்பட்டுள்ள படம் 'ஜூவாலை'. இந்தியப் பெருங்கடல் கொண்டுள்ள சிறு சிறு தீவுகளிலும் மீதமுள்ள படம் வளர்ந்து வருகிறது. 'ஜூவாலை' படத்தை மனுஷா தயாரிக்க ரஹ்மான் ஜிப்ரீல் நடித்து இயக்குகிறார். ரஹமான் ஜிப்ரீல், இயக்குநர் பாலுமகேந்திரா மற்றும் ஜோதி கிருஷ்ணா ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றி உள்ளார். தன் முதல் படம் கடலைச் சார்ந்தும், சூழ்நிலைகளைச் சார்ந்தும் படமாக்க வேண்டி இருப்பதால், பெரிய ஹீரோக்களை வைத்து இயக்குவதில் உள்ள சிரமங்களை உணர்ந்தவர் அதற்காக, தானே நீண்ட முடி, தாடி சகிதம் தயாராகி உள்ளார். கடல் என்ற கதைக்களத்தை கையில் எடுத்து இருந்தாலும், ’ஜூவாலை’ என பெயர் வைத்துள்ளார். "காதல், காமம், கோபம், வெறுப்பு போன்றவை ஒரு ஜூவாலை மாதிரிதான். நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரிந்து ...
களம் நாவல் விமர்சனம்

களம் நாவல் விமர்சனம்

புத்தகம்
களம். அமேசான் நடத்தும் Pen To Publish போட்டிக்காக இராஜேஷ் ஜெயப்பிரகாசம் அவர்கள் எழுதிய நாவல் இது. கிரிக்கெட்டையும் சினிமாவையும் மையமாக வைத்து எழுதப்பட்ட க்ரைம் த்ரில்லர். இந்த நாவல் குறித்தான பல்வேறு விளம்பரக் குறிப்புகளிலும் அவ்வாறுதான் சொல்லப்பட்டிருந்தது. கிரிக்கெட்டை மையமாக வைத்து தமிழில் வெகுசில நாவல்களே வெளிவந்துள்ளன. எண்டமூரி வீரேந்திரநாத் எழுதிய 'லேடீஸ் ஹாஸ்டல்', பட்டுக்கோட்டை பிரபாகரின் இரு க்ரைம் நாவல்கள், வெ.த.புகழேந்தியின் 'வீணையடி நீ எனக்கு' போன்றவை சில முக்கியமான நாவல்கள். இது தவிர சில குடும்ப நாவல்கள் கூட இதில் அடக்கம். ஆனால் எனக்குத் தெரிந்து இவை வெறுமனே ஹீரோ ஒரு கிரிக்கெட் வீரராகக் காட்டுவதோடு நின்று விடுகின்றன. க்ரிக்கெட் அதன் முக்கியப் பிண்ணனியாக இருப்பதில்லை. ராஜேஷின் களம் நாவல் முழுக்க முழுக்க கிரிக்கெட் பிண்ணனியில் எழுதப்பட்டிருக்கிறது. 'சரி இதெல்லாம் ஒரு பெருமைய...