
பாதாள உலகம் – லட்சியவாதம் எனும் போதை | Paatal Lok 2
பணம், புகழ், அதிகாரம் இவற்றுக்கு ஆசைப்படாத, தான் நம்பும் நேர்மையும் கொள்கையுமே முக்கியம் என்று செயல்பட்டு, பிரச்சனைகளில் மாட்டி இழப்புகளைச் சந்தித்தாலும், அதை ஏற்றுக்கொண்டு தனது வழியிலேயே வாழ்வதற்கு போதை தருவது எதுவாக இருக்கும்?
குடும்பத்திலும் நிம்மதி இருக்காது, நண்பர்கள், உடன் பணிபுரிபவர்கள் மதித்தாலும், பிழைக்கத் தெரியாதவன் என்று கிண்டல் அடிப்பார்கள். ஆனாலும் உண்மை ஒன்றுக்காக ஓடிக்கொண்டே இருக்கும் இலட்சியவாத மனிதர்கள் இன்றும் இருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட ஒருவரை கதைநாயகராக வைத்து வெளிவந்த ஹிந்தி சீரிஸ் "பாதாள் லோக் (பாதாள உலகம்)" ஆகும். பொதுவாக ஹிந்தி சீரிஸ்களில் முதல் பாகம் வெற்றி பெற்றதும் அடுத்த பாகத்தைத் திணித்து எடுப்பார்கள். சேக்ரட் கேம்ஸ், மிர்ஸாபூர், பஞ்சாயத் போன்றவை அப்படித் தான் அமைந்தன. அதனால் பாதாள் லோக் சீரிசின் இரண்டாம் சீஸன் வெளிவந்திருக்கிறது என்று அறிந்தும் அதைப் பார்ப...