
KISS – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் | ரோமியோ பிக்சர்ஸ்
ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ராகுல் தயாரிப்பில், நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாக, கவின் நடிப்பில் உருவாகியுள்ள “கிஸ்” படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட்லுக் வெளியாகியுள்ளது. காதலர் தினம் நெருங்கும் நிலையில், காதல் ஜோடிகள் சுற்றிலும் கூடி முத்தமிட, நடுவில் ஸ்டைலிஷாக நிற்கும் கவினின் கண்கள் மட்டும் மறைக்கப்பட்டிருக்கும். இப்படத்தின் டீசர் வரும் பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ராகுல், பெரும் பொருட்செலவில் பிரம்மாண்ட படைப்பாக இப்படத்தைத் தயாரித்துள்ளார். டான்ஸராக திரைத்துறைக்குள் நுழைந்து, நடன இயக்குநராக வளர்ந்து, நடிகராகவும் வலம் வரும் சதீஷ், இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இன்றைய இளைய தலைமுறை காதலைக் கொண்டாடும் விதத்தில் வித்தியாசமான ரொமான்ஸ் படமாக இப்படத்தை இயக்கியுள்ளார்.
தமிழ் சினிமா...