32°C
விளம்பரம்
Advertisement
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

OTT Movie Review

41 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன
நூறு கோடி வானவில் விமர்சனம் | Nooru Kodi Vaanavil review OTT முக்கியச் செய்தி
06/11/2026 Dinesh R 3 நிமிட வாசிப்பு

நூறு கோடி வானவில் விமர்சனம் | Nooru Kodi Vaanavil review

‘ஐய்யய்யோ ஆனந்தமே’ எனும் கும்கி படத்தின் பாடலில், ‘நூறு கோடி வானவில் மாறி மாறி சேருதே! காதல் போடும் தூறலில் தேகம் மூழ்கிப் போகுதே!’ என்ற வரிகள் இடம்பெற்றிருக்கும். நூறு கோடி வானவில் என்பதைக் காதல் மலர்ந்ததற்கான உயர்வு நவிற்சி அணியாக உருவகப்படுத்தியிருப்பார் கவிஞர் யுகபாரதி. அப்படி நாயகனுக்கும் நாயகிக்கும் மலரும் காதலை, இத்தலைப்பின் மூலம் உணர்த்துகிறார் சசி. கோவாவிற்கு வரும் முதல் நாளன்று, சிக்னலில் நிற்கும் போது, ஸ்கூட்டரில் வரும் ஃபென்னியைப் பார்க்கிறான் வினோ எனும் […]

முழுமையாகப் படிக்க
செய்திகள் வரிசை (பக்கம் 1)
டெஸ்ட் | TEST review – NetFlix OTT

டெஸ்ட் | TEST review – NetFlix

விஞ்ஞானி சரவணனுக்கும், அவரது மனைவி குமுதாவிற்கும், நட்சத்திர கிரிக்கெட் வீரர் அர்ஜுன் வெங்கட்ராமனுக்கும் ஒரு சோதனை ஏற்படுகிறது. தனது வாழ்க்கையையே அர்ப்பணித்து உருவாக்கிய அறிவியல் கண்டுபிடிப்பு நடைமுறைப் பயன்பாட்டிற்கு வர லஞ்சம் தருவதற்குப் பணம் தேவைப்படுகிறது; ஒரு குழந்தைக்காக ஏங்கும் குமுதாவிற்கு அதற்கான மருத்துவச் செலவுகளுக்குப் பணம் தேவைப்படுகிறது; கடந்த போட்டிகளில் சரியாக விளையாடாத அர்ஜுன் வெங்கட்ராமன் பாகிஸ்தான்க்கு எதிரான போட்டியில் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயமாகிறது. குமுதாவாக நயந்தாரா தோன்றியுள்ளார். முகத்தில் எந்த உணர்ச்சிகளையும் காட்டாமல், […]

03/04/2025 Dinesh R
தலைமை செயலகம் விமர்சனம் OTT

தலைமை செயலகம் விமர்சனம்

என்றோ செய்த ஊழல், ஆளும் முதல்வரின் கழுத்தை நெறுக்க, முதல்வரின் கைத்தடிகள் இந்தச் சூழலைப் பயன்படுத்தி அடுத்த முதல்வராவதற்கு காய் நகர்த்த, அதே நேரம் 15 ஆண்டுகளுக்கு முன்பு வட இந்தியாவில் பன்சால் மற்றும் அவன் கூட்டாளிகள் ஐவரைக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்ற கௌலைகாரி துர்காவைத் தேடும் வழக்கு போலீஸ் இடமிருந்து சி.பி.ஐ.-க்கு மாற்றப்படுகிறது.  இந்த வட இந்திய மற்றும் தென் இந்திய நிகழ்விற்குமான தொடர்பு என்ன என்பதே இந்த தலைமை(ச்) செயலகம் இணைய […]

16/05/2024 Inbaaraja
ஸ்கந்தா – தி அட்டாக்கர் விமர்சனம் OTT

ஸ்கந்தா – தி அட்டாக்கர் விமர்சனம்

தலைப்பு வைப்பது ஒரு கலை. சிலர், தலைப்பில் கதைக் கருவைத் தொட்டுச் செல்வார்கள்; சிலர், முழுக்கதையையும் உணர்த்துவார்கள்; சிலர், சம்பந்தமே இல்லாமல் என்னத்தையாவது தலைப்பென வைப்பார்கள். படத்தின் விமர்சனத்தையே தலைப்பாக்கும் தைரியம், நந்தமூரி பாலகிருஷ்ணாவின் ‘சிம்ஹா’, ‘லெஜண்ட்’, ‘அகண்டா‘ முதலிய படங்களை இயக்கிய ஆக்ஷன் இயக்குநர் போயபட்டி ஸ்ரீனுவிற்கே உண்டு. படம், பார்வையாளர்களைக் கிஞ்சித்தும் கருணையின்றிச் சாவடி அடிக்கிறது. அதை நேர்மையாகத் தலைப்பிலேயே சுட்டிக் காட்டி, நேர்மை என்றால் ‘ஹமாம்’ சவர்க்காரம் மட்டுமில்லை, தானும் தானென உலகிற்கு […]

05/11/2023 Dinesh R
கூழாங்கல் விமர்சனம் OTT

கூழாங்கல் விமர்சனம்

வறண்ட நிலப்பகுதியில் பயணிப்பவர்கள், தண்ணீர் தாகத்தைத் தணிக்க கூழாங்கல்லை வாயில் வைத்துக் கொள்வார்கள். அத்தகையதொரு நிலப்பகுதியை வேலுவும், அவனது தந்தை கணபதியும் நடந்தே கடக்கின்றனர். பிறந்த வீட்டுக்குப் போன மனைவியை அழைத்து வர, கடன் வாங்கிப் பேருந்தில் செல்லுகிறான் குடிகாரனான கணபதி. மீண்டும் திரும்புகையில், நல்ல உக்கிரமான வெயிலில் தந்தையை நடக்க வைக்கிறான் வேலு. நடப்பது வேலுவிற்கும், கடன் வாங்கிப் பேருந்தில் வரக் குறைவான வாய்ப்பைப் பெற்ற அவனது தாயிற்கும் வழக்கமானது ஒன்றாகும். ஆனால் மாப்பிள்ளை முறுக்குடன் […]

05/11/2023 Dinesh R
சக்ரவியூகம் – நாயகன் அஜயின் மர்டர் மிஸ்ட்ரி OTT

சக்ரவியூகம் – நாயகன் அஜயின் மர்டர் மிஸ்ட்ரி

துப்பறியும் வகை “சக்ரவியூகம்” திரைப்படத்தை சேத்குரி மதுசூதன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தைப் பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் வெளியிட்டுள்ளார்கள். கதையின் நாயகனாக அஜய் நடித்திருக்கும் படத்தில் விவேக் திரிவேதி, ஊர்வசி பரதேசி, பிரக்யா நயன், ஷுபலேகா சுதாகர், ராஜீவ் கனகலா, சுரேஷ் பிரியா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், ராஜ் திரன்தாசு ஆகியோர் முன்னணி பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். சஞ்சய் ராவின் மனைவி சிரி தனது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடக்கிறார். விசாரணை அதிகாரி எஸ்.ஐ.சத்யா […]

16/07/2023 Dinesh R
மாடர்ன் லவ் சென்னை விமர்சனம் OTT

மாடர்ன் லவ் சென்னை விமர்சனம்

என்றென்றும் புதுமை மாறாமல் இருக்கும் ஒரு விஷயம் என்றால் அது ‘காதல்’ தான். அதாவது, காதல் என்றுமே நவீனமும் ஆகாது, பழைமையானதாகவும் மாறாது. ‘மாடர்ன் லவ்’ என்பதை, மாறி வரும் நவீன யுகத்தில், காதல் என்பது என்னவாக உள்ளது, எப்படிப் பார்க்கப்படுகிறது என்பதாகப் புரிந்து கொள்ளலாம். சங்ககாலம் முதலே, காதலெனும் சொல்லை அகவயமான உணர்வாகவே பார்த்துப் போற்றியுள்ளனர் தமிழர்கள். போன நூற்றாண்டின் மத்தியில், அது ‘லவ்’வாக மாறியதில் இருந்து, அவ்வுணர்வு அகத்திலிருந்து புறத்திற்கு மெல்ல கசியத் தொடங்கி, […]

21/05/2023 Dinesh R
மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் விமர்சனம் OTT

மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் விமர்சனம்

மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷனைக் கதைக்களமாகக் கொண்டு நடக்கும் திரைப்படம். குறைவான லோக்கேஷன்களில், திரைக்கதையை நம்பி விரைவாக எடுத்து முடிக்கப்பட்ட பட்ஜெட் படம் என்பதே இதன் சிறப்பம்சம். இப்படம், ஆஹா ஓடிடி-யில் நேரடியாக வெளியாகிறது. டி பிக்சர்ஸ் சார்பாக, இப்படத்தை எழுதி இயக்கித் தயாரித்துள்ளார் தயாள் பத்மனாபன். சிறந்த இயக்குநருக்கான கர்நாடக அரசின் விருதினை இரண்டு முறை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.  வேலையில் இருந்து வரும் ஜெய்குமார், ஒரு பள்ளி மாணவி கடத்தப்படுவதைப் பார்க்கிறான். அருகில் இருக்கும் […]

18/05/2023 Dinesh R
உடன்பால் விமர்சனம் OTT

உடன்பால் விமர்சனம்

ஆஹா தமிழில், டிசம்பர் 30 அன்று வெளியாகிறது இத்திரைப்படம். பரமனுக்குக் கடன் அதிகமாகிவிட, வீட்டை விற்று அதிலிருந்து மீளலாமெனத் திட்டமிடுகிறான். அதற்காகத் தங்கை கண்மணியை வீட்டிற்கு வரவைத்து, அம்மாவின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளன்று அப்பாவிடம் பேச நினைக்கிறார். வீட்டை விற்க ஒத்துக் கொள்ளாத விநாயகம், வள்ளலார் காம்ப்ளக்ஸ்க்குச் சென்றுவிடுகிறார். அந்த காம்ப்ளெக்ஸ் இடிந்து விழ, அரசாங்கம் அந்த காம்ப்ளக்ஸ் விபத்தில் இறந்தவர்களுக்குத் தலா 20 லட்சம் ரூபாயை நிவாரணமாக அறிவிக்கிறது. தேவை, பணம், குடும்பம், […]

28/12/2022 Dinesh R
விட்னெஸ் விமர்சனம் OTT

விட்னெஸ் விமர்சனம்

பொதுச் சமூகத்தின் பரவலான கவனத்தைப் பெறாத ஒரு பெரும் சமூக அவலத்திற்கு, பார்வையாளர்களைச் சாட்சியாக்கியுள்ளார் இயக்குநர் தீபக். மனித மலத்தை மனிதன் அள்ளும் கொடுமையும், அதனால் நிகழும் மரணங்களும் இன்றும் நிகழ்கின்றன. அதுவும் எத்துணை நயமாக ஒரு குறிப்பிட்ட சாதியினர் மேல் அப்பணி சுமத்தப்படுகிறது என உறைய வைக்கும் உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் இப்படத்தை உருவாக்கியுள்ளார் தீபக். கல்லூரி மாணவனான பார்த்திபனைக் கட்டாயப்படுத்தி கழிவுநீர்த் தொட்டிக்குள் இறக்கிச் சுத்தம் செய்ய வைக்கின்றனர். விஷ வாயு தாக்கி அவன் […]

09/12/2022 Dinesh R
வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி விமர்சனம் OTT

வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி விமர்சனம்

சுழல் தொடரின் வெற்றிக்குப் பிறகு, தங்கள் நிறுவனமான வால்வாட்ச்சர் ஃப்லிம்ஸ் சார்பாக புஷ்கர் – காயத்ரி தயாரித்திருக்கும் தொடர் ‘வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’. வெலோனி எனும் இளம்பெண் கொல்லப்பட, கொலையாளியைத் தேடுகிறது காவல்துறை. வெலோனி பற்றி எந்தத் தெளிவான உண்மையும் கிடைக்காமல், அவளைப் பற்றி மர்மங்களும் வதந்திகளும் மட்டுமே நிலவுவதால், காவல்துறை அவ்வழக்கை மூடி விடுகிறது. ஆனாலும் உண்மைக் குற்றவாளியை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டுமென அல்லாடுகிறார் துணை ஆய்வாளர் விவேக். வெலோனியைக் கொன்றது […]

02/12/2022 Dinesh R
ஜீவி – 2 விமர்சனம் OTT

ஜீவி – 2 விமர்சனம்

தொடர்பியல், முக்கோண விதி, மையப்புள்ளி ஆகியவற்றை மையக்கருவாகக் கொண்ட படம் ‘ஜீவி’. அப்படத்தின் இரண்டாம் ஆஹாவில் நேரடியாக வெளியாகியுள்ளது. முந்தைய பாகத்தில், தொடர்பியலைத் தெரிந்து கொள்வாரே அன்றி மையப்புள்ளியை அடையமாட்டார் நாயகன். ஆனால், முதற்பாகத்தின் வெற்றிக்குக் காரணம், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்குக் கிடைக்கும் நீதி தரும் ஆத்ம திருப்தியே! இந்தப் பாகத்தில், குடும்பச்சூழல் காரணமாக நாயகன் மீண்டும் திருடுகிறான் சரவணன். அதையொட்டி, தொடர்பியலின் காரணமாக, சரவணனைச் சுற்றி நடப்பவை அனைத்தும் தவறாகிறது. மையப்புள்ளியைக் கண்டடைந்தால் தான், இதை நிறுத்த […]

20/08/2022 Dinesh R
மேதகு – 2 விமர்சனம் OTT

மேதகு – 2 விமர்சனம்

மேதகு என்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு 2021ஆம் ஆண்டு வெளியான திரைப்படமாகும். மேதகு எனும் சங்கச்சொல்லுக்கு, மேன்மையான, மேன்மை பொருந்திய எனப் பொருள் கொள்ளலாம். வேலுப்பிள்ளை பிரபாகரன், மேன்மை பொருந்திய ஒப்பற்ற தலைவர் என்பதைச் சுட்டவே மேதகு எனத் தலைப்பிட்டிருந்தார் இயக்குநர் தி. கிட்டு. அப்படத்தின் தொடர்ச்சியாக, மேதகு 2 படத்தை இரா.கோ.யோகேந்திரன் இயக்கியுள்ளார். முதற்பாகமான மேதகு, 2021 ஆம் ஆண்டு ஜூன் 25 இல், ஓடிடி […]

20/08/2022 Dinesh R
கடாவர் விமர்சனம் OTT

கடாவர் விமர்சனம்

கடாவர் (Cadaver) என்றால் உயிரற்ற உடல் எனப் பொருள். படப்பை காட்டுக்குள், காருடன் சேர்ந்து எரிக்கப்பட்ட சடலம் ஒன்று கிடைக்கிறது. முற்றிலும் உருக்குலைந்த அந்தச் சடலத்தைக் கொண்டு, போலீஸ் சர்ஜனான பத்ராவின் உதவியோடு கொலை செய்யப்பட்ட நபரை அடையாளம் காண்கிறது காவல்துறை. கொலை செய்யப்பட்ட நபர் யார், கொலையாளி யார், கொலைக்கான மோட்டிவ் என்ன என்பது போன்ற விசாரணைக்கான பதிலே படத்தின் முடிவு. இசையமைப்பாளர் ரஞ்சின் ராஜ்க்குத் தமிழில் இது முதற்படம். மலையாளத்தில் அவரது முதற்படம் ஜோசஃப். […]

12/08/2022 Dinesh R
O2 விமர்சனம் OTT

O2 விமர்சனம்

கோவையில் இருந்து கொச்சிக்குச் செல்லும் பேருந்து நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்து விடுகிறது. பேருந்தில் சிக்கியவர்கள் ஆக்சிஜனுக்காகப் போராடும் சர்வைவல் த்ரில்லர்தான் படத்தின் கதை. சர்வைவல் த்ரில்லர் என வகைமைப்படுத்தினாலும், தன் மகனுக்காகப் போராடும் ஒரு வீரத்தாயின் கதை என்ற சிறப்பும் உண்டு இப்படத்திற்கு. தன் மகனுக்காக எந்த எல்லைக்கும் சென்று போராடும் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ளார். அவரது செல்ல அழகு மகனாக யூ-ட்யூப் புகழ் ரித்விக் நடித்துள்ளான். அவனது திறமைக்குத் தீனி போடுமளவிற்கான வாய்ப்பு இல்லையெனினும், […]

18/06/2022 Dinesh R