அஷ்ட ஐயப்ப அவதாரம் – வித்யாசாகரின் ஆன்மிக ஆல்பம்
தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான வித்யாசகர், முதன்முறையாக ஆன்மிக பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். ஐயப்ப சாமியின் புகழ் பாடும் வகையில் உருவாகியுள்ள, “அஷ்ட ஐயப்ப அவதாரம்” ஆல்பத்தை, இந்தியாவின் முன்னணி இசை நிறுவனமான சரிகம நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஶ்ரீ ஐயப்பன் அறம் சேவா லிமிடட் சார்பில், முரளிகிருஷ்ணன் சிங்கப்பூர் இந்த ஆல்பத்தைத் தயாரித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் 225 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துப் புகழ்பெற்றவர் இசையமைப்பாளர் வித்யாசாகர். முன்னணி நட்சத்திரங்களின் வெற்றிப்பாடல்கள் முதல், காலத்தால் அழியாத பல அற்புதமான மெலடி பாடல்களைத் தந்து, மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த வித்யாசாகர், முதன் முறையாக ஆன்மீக பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.
சுயாதீன ஆல்பங்கள், திரைப்படப் பாடல் இசை, ஆன்மீக ஆல்பம் என இந்திய இசைத்துறையில் கோலோச்சும் முன்னணி இசை நிறுவனமான
சரிகம நிறுவனம் இ...