Shadow

Tag: Thaai Kizhavi movie

“நான் எம்.ஆர்.ராதாவின் மகள்” – ராதிகா சரத்குமார் | தாய் கிழவி

“நான் எம்.ஆர்.ராதாவின் மகள்” – ராதிகா சரத்குமார் | தாய் கிழவி

சினிமா, திரைச் செய்தி
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் உருவாகியுள்ள 'தாய் கிழவி' படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய நடிகை ஸ்ரீபிரியா, “படத்தின் முன்னோட்டம் மட்டும்தான் பார்த்தேன். அதைப் பார்த்துவிட்டு ராதிகாவிடம் படத்தின் நிகழ்வுக்கு நான் வர வேண்டும் என்று கேட்டேன். ஏனெனில், என் ராதிகாவைப் பலரும் புகழ்ந்து பேசுவதை நான் கேட்க வேண்டும். இந்தப் படத்தில் ராதிகாவின் அப்பாவைப் பார்த்தேன். ராதிகாவின் அம்மா இருந்திருந்தால் இந்தப் படம் பார்த்து எவ்வளவு மகிழ்ந்திருப்பாரோ அதே சந்தோஷம் எனக்கும் இருக்கிறது. ராதிகாவின் நடிப்பை பார்த்து கமல் வியந்துபோய் பாராட்டினார். ராதிகாவுக்குத் தேசிய அளவில் நடிப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற வருத்தம் எனக்கு எப்போதும் உண்டு. இந்தப் படம்...
ராதிகா: லேடி கமல்ஹாசன் | தாய் கிழவி

ராதிகா: லேடி கமல்ஹாசன் | தாய் கிழவி

சினிமா, திரைச் செய்தி
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் உருவாகியுள்ள 'தாய் கிழவி' படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நடிகர் சரத்குமார், “’தாய் கிழவி’ கதாபாத்திரத்தில் ராதிகா கலக்கி இருக்கிறார். நான் நடித்த ‘ஆழி’ படமும், ராதிகாவின் ‘தாய் கிழவி’ படமும் பிப்ரவரி 27 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. எனது மனைவி வெற்றி பெற்றால் நான் வெற்றி பெற்றது போல! ஊர்ப்பக்கம் தாய் கிழவி என்றால் அனைவரையும் அரவணைத்துக் கட்டிக்காப்பவரைதான் அப்படிக் கூப்பிடுவோம். அத்தகைய டைட்டில் ரோலில் நடிக்க உழைப்பு, அர்ப்பணிப்பு, தன் மீது நம்பிக்கை வேண்டும். திரையுலகில் 50 வருடங்கள் நெருங்குகின்ற ராதிகாவிற்கு நான் சொன்ன அனைத்தும் இருப்பதால்தான் இந்தப் படத்தில் தைரியமாக நடித்திருக்கிறா...