Shadow

அஞ்சல – இரட்டை வேடங்களில் பசுபதி

அஞ்சல பசுபதி

“ஒரு டீக்கடையின் வரலாறுதான் அஞ்சல படத்தின் கதை. அந்த டீக்கடையும், அதைச் சுற்றியுள்ள மனிதர்களையும் பற்றிய கதை” என்றார் இயக்குநர் தங்கம் சரவணன்.

“நான் நடித்த படங்களிலேயே, என் மனதுக்கு மிகவும் நெருக்கமான சில படங்களில் இதுவும் ஒன்னு” என்றார் பசுபதி. தந்தை, மகன் என இரு வேடங்களில் பசுபதி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சின்னக் கவுண்டர், சிங்கார வேலன், எஜமான் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஆர்.வி.உதயக்குமார், இப்படத்தில் நாயகியின் தந்தையாக நடித்துள்ளார். “ஷூட்டிங் ஸ்பாட்லயே, பசுபதியின் நடிப்பைப் பார்த்து அசந்துபோய் கை தட்டினேன். அவ்வளவு அருமையாக கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். இதற்கு முன், சிவாஜி சாரின் நடிப்பைப் பார்த்து கை தட்டியிருக்கேன். அதன் பின் பசுபதிக்குத்தான்” என்றார் இயக்குநர் உதயக்குமார்.

“நான் படத்தை 100 தடவைக்கு மேல் பார்த்துட்டேன். பசுபதி சார் நடிச்ச போர்ஷனைப் பார்க்கிறப்ப, ஒவ்வொரு முறையும் மனசை ஏதாவது செய்யும். அல்லது அழுதுடுவேன். வெயில் படம் பார்த்துவிட்டு, ‘யார்றா இவர்? இப்படிப் பண்ணியிருக்கார்!’ என வியந்திருக்கேன். அவர் என் படத்திலேயே நடிச்சிருக்கார் என்பது எனக்கு மிகவும் சந்தோஷமா இருக்கு” என்றார் படத்தின் தயாரிப்பாளர் திலீப் சுப்புராயன்.

படம் நிச்சயமாக, பல விருதுகளை அள்ளிக் குவிக்கும் என்று நம்பிக்கையோடு உள்ளனர் அஞ்சல படக்குழுவினர்.