Shadow

அன்புக்காக ஏங்கி அலையும் டெய்சி

டெய்சி

டெய்சி என்ற எட்டு வயது குழந்தையின் பாசத்தை எடுத்துக் கூறும் இக்கதை சமீபத்திய திகில்/ பேய் படங்களிலிருந்து பெரிதும் வித்திசயமாய் உருவாகியுள்ளது. உண்மையான நிகழ்வுகளை மையமாக வைத்து செண்டிமென்ட் – திகில் படமாக உருவாக்கியுள்ளார் இயக்குநர் ஸ்ரீநாத் ராமலிங்கம்.

எம்.ஆர்.கே. உடன் இணைந்து கதை இயற்றி இயக்குநராக அறிமுகமாகும் ஸ்ரீநாத் ராமலிங்கம், தனது படத்தைப் பற்றிக் கூறுகையில், “ஒவ்வொரு குழந்தையும் பெற்றோர்களின் வாழ்க்கை என்னும் சுவரை அலங்கரிக்கும் சித்திரமே. பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் தங்களது பெற்றோரின் மேல் உள்ள நம்பிக்கையில் தான் ஜனிக்கின்றனர் என்ற கூற்றை உறுதிபடுத்தும் கதை இது. டெய்சி அன்புக்காக ஏங்கி அலைபாயும் ஒரு உக்கிரமான எட்டு வயது சிறுமியின் ஆவியைப் பற்றிய கதை. நிஜ வாழ்க்கையில் நான் பார்த்து அறிந்த சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கதையே டெய்சி. இன்றைய குடும்பங்களுக்குத் தேவையான கருத்தைக் கொண்ட கதை என்பதால் முழுக்க முழுக்க செண்டிமெண்ட் கலந்து உருவாக்கியுள்ளோம்” என்றார்.