Shadow

ஈவிரக்கமற்ற சிம்ஹா

Simha

‘பீட்சா’வைத் தொடர்ந்து தான் இயக்கும் இரண்டாவது படத்தைப் பற்றி, “இது நான் பீட்சாக்கு முன்பே எழுதின ஸ்க்ரிப்ட். பீட்சா தயாரிப்பாளர் C.V.குமார்கிட்ட சொன்னேன். என்னோட பட்ஜெட் ஒன்றரை கோடிதான். ஆனா இதுக்கு பட்ஜெட் அதிகமாகும். உங்க ரைட்டிங் ஸ்டைல் நல்லாயிருக்கு. என் பட்ஜெட்க்குள் எழுத முடியுமா பாருங்கன்னு சொன்னார். நான் விடாம அதுக்கு அப்புறம் நாலு ப்ரொட்யூசரைப் பார்த்து கதை சொன்னேன். ஃபர்ஸ்ட் டைம் டைரக்ட் பண்றீங்க.. பட்ஜெட் அதிகமாகயிருக்குன்னு சொல்லிட்டாங்க. சரின்னு இந்த ஸ்க்ரிப்ட்டை மூட்டை கட்டி வச்சுட்டு பீட்சா பண்ணேன்.

இப்ப கொஞ்சம் மாத்தி ஜிகர்தண்டான்னு வந்திருக்கு. எனக்கு கதை சொல்ல வராது. ஸ்க்ரிப்ட் கொடுத்து தயாரிப்பாளர் கதிரேசன்கிட்ட படிக்கச் சொன்னேன். பரவாயில்லை கதை சொல்லுங்கன்னு சொன்னார். நான் சொன்னேன். இல்ல.. ஸ்க்ரிப்ட் கொடுங்க என வாங்கிப் படிச்சுட்டு நல்லாயிருக்குன்னு சொன்னார்.

படத்துக்கு நாலஞ்சு டைட்டில் வச்சிருந்தேன். தயாரிப்பாளருக்கு ஜிகர்தண்டாதான் பிடிச்சிருந்தது. மீண்டும் சாப்பிடுற பொருளே தலைப்பா வைக்கிறேன்னு சொல்வாங்க எனச் சொன்னேன். பரவாயில்லைன்னுட்டார். சரின்னு மீனிங் தேடலாம்னு தேடினேன். ஜிகர், தண்டா என இரண்டாகப் பிரித்தால் ‘கோல்ட் ஹார்ட் (Cold heart)’ என பொருள் வருது. படத்தின் கதைக்கும் பொருந்துறாப்ல இருந்தது.

Karthick Subbarajஇந்தக் கதை எழுதறப்பவே சித்தார்த் பண்ணா நல்லாயிருக்கும்னு யோசிச்சு வச்சிருந்தேன். பீட்சா பார்த்துட்டு நல்லாயிருக்குன்னு அவர் ட்வீட் பண்ணியிருந்தார். அவரைப் பார்த்து, ‘ஜிகர்தண்டா’ கதை சொன்னேன். அவருக்கும் பிடிச்சிருந்தது. இந்தப் படத்தில் அவர் மற்ற நடிகருக்கு நிறைய ஸ்பேஸ் கொடுத்து நடிச்சிருக்கார். பாபி (சிம்ஹா) கேரக்டருக்கு பெரிய பெரிய ஆர்டிஸ்ட் எல்லாம் யோசிச்சு வச்சிருந்தோம். கடைசியா பாபியே பண்ணட்டும்னு முடிவு பண்ணிட்டம்.

அவர் கருப்பா தெரியணும்னா.. வெயிலில் நிக்க வச்சோம். ஆனா அவர் பளபளப்புக் குறையலை. பெயின்ட்தான் அடிச்சிருக்கோம். ரொம்ப அற்புதமா பர்ஃபார்ம் பண்ணியிருக்கார்” என்றார் கார்த்திக் சுப்புராஜ்.

“கார்த்திக் சுப்புராஜ் சொன்ன ஒரு விஷயத்தை நானும் சொல்லிக்கிறேன். அவருக்கு கதை சொல்லவே தெரியலை. எப்படி ஒரு நல்ல கதையை இவ்ளோ மோசமா அவரால் சொல்ல முடியுதுன்னு தெரியலை.

2014 எனக்கு ரொம்ப முக்கியமான வருடம். ஜிகர்தண்டா, காவியத்தலைவன், லூசியா என சில நல்ல படங்களில் நானும் இருக்கேன் என்ற சந்தோஷம்தான் காரணம். முதலில் இந்த சாக்லேட் பாய் என்ற பெயர் போனால் போதும். அடுத்த வருஷம் பண்ணப் போற படத்தில்வேணா.. மீண்டும் ‘சாக்லேட் பாய்’ கேரக்டர் பண்றது பற்றி யோசிக்கலாம்.

இந்தப் படத்துக்காக சிம்ஹா 3 படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டிருக்கிறார். அவ்ளோ கமிடட்டாக வொர்க் பண்ணியிருக்கார். அது ரொம்ப பெரிய விஷயம். அவர் ரொம்ப தெளிவாயிருக்கார். இந்தப் படம் அவருக்கு எந்த மாதிரி பெயர் சம்பாதித்துத் தரப் போகுதுன்னு அவருக்குத் தெரிஞ்சிருக்கு” என்றார் சித்தார்த்.

நேரம் படத்திலேயே, வட்டிராஜாவாக சிம்ஹா பயமுறுத்தியிருப்பார் என்பது நினைவில் இருக்கலாம்.