Shadow

ஒரு கல் ஒரு கண்ணாடி விமர்சனம்

ok ok
ஒரு கல்.. ஒரு கண்ணாடி..

உடையாமல் மோதி கொண்டால் காதல்

என்று இயக்குனர் இராஜேஷின் முதல் படத்தில் வரும் ஒரு பாடல் வரியின்தொடக்கம் தான் படத்தின் கரு மற்றும் தலைப்பு. ஆனால் அதை முதல் படத்தில்சாத்தியப்படுத்தியது போல் இப்படத்திலும் அவருக்கு சாத்தியப்படுத்த முடியாமல் போய்விட்டது.

படத்தில் கதாநாயகன் என்று யாரும் இல்லை. கதை இருந்தால் தானே கதைக்குநாயகன் என யாராவது இருக்க முடியும்? இந்த இரண்டு குறையையும் சந்தானத்தைவைத்து லாவகமாக மறைத்துள்ளார் ராஜேஷ். முந்தையப் படங்கள் அளித்தநம்பிக்கையாகவோ, படிப்பினையாகவோ இருக்கும். மற்ற பாத்திரங்களின்வசனத்திற்கு எதிர் வசனம் பேசி மட்டுமே ஒப்பேத்தாமல், சந்தானம் முழுப்படத்தையும் முதுகில் சுமப்பவராக உள்ளார். ‘சந்தானம் இருக்க பயமேன்?’ எனஇயக்குனர் ராஜேஷின் மனோநிலையைப் பிரதிபலிக்கும் வண்ணமாக, படத்தின் நாயகனானஉதயநிதி ஸ்டாலினும் நிறைவாய் புன்னகைத்து தலையை மட்டும் வேண்டிய மட்டும்நன்றாக ஆட்டுகிறார். கவலைப் படும் நடிக்க  வேண்டிய காட்சிகளில், வலதுக்கையால் நெற்றியைத் துடைத்துக் கொள்கிறார். ஷ்ஷ்ப்பாஆஆ..

படத்தில் தொய்வு ஏற்பட நேரிடம் பொழுதெல்லாம், “மயிலாப்பூர் பார்த்தசாரதி”தான் அபயமளிக்கிறார். ஏற்ற இறக்க வசன உச்சரிப்பிலும், உடல் மொழியிலும்தன்னை மயிலாப்பூர் வாசியாக காட்டிக் கொள்ளும் இடங்களில் எல்லாம் சந்தானம்அசத்துகிறார்.

“என்னை ஏன் லவ் பண்ற?”

“ஏன்னா.. நீங்க அழகா வெள்ளையா தளதளன்னு இருக்கீங்க.”

“சோ நான் அழகா இருக்கேன். என் கேரக்டர்(!?) உனக்குப் பிடிச்சிருக்கு….”

என்னக் கொடுமை இது?

வெள்ளையாய் இருப்பது மட்டும் தான் ஒரே தகுதி என தெரியாத அப்பாவி நாயகியாகஉள்ளாரே! நாயகன், நாயகனின் தாய் என அனைவரும் நாயகியின் தோல் நிறத்தையும்,உடல் வாகுவையும் மட்டுமே சிலாகிக்க.. நாயகியோ தன் குணம் கவனிக்கப்படுவதாகநினைத்துக் கொள்கிறார். இதற்கே படத்தில் அநாதை விடுதி சிறுவர்களுக்குஇனிப்பு வழங்கி அவர்களிடம் முத்தம் பெறுவது, நாய் குட்டியை அணைத்துகொஞ்சுவது, கண் தெரியாதவர்களுக்கு சாலையைக் கடக்க உதவி செய்வது போன்றகிளிஷே காட்சிகள் கூட கிடையாது. ஹன்சிகா நாயகி என்பதாலோ என்னவோ, ராஜேஷ்தனது முந்தையப் படங்கள் போல் ஷகிலாவை ஒரு காட்சியில் கூட நடிக்கவைக்கவில்லை.

சந்தானம் என்னும் கேடயத்தால் மொன்னையான படத்தை தற்காத்து கொண்டுள்ளார்இயக்குனர். கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக.. சிவா மனசுல சக்தி, பாஸ் (எ) பாஸ்கரன் என வரிசை கிரமமாக படத்தின் தரம் குறைந்துக் கொண்டேவருகின்றன.

Leave a Reply