Shadow

கருவாட்டு கருணாகரன்

உப்பு கருவாடு கருணாகரன்

“ஒரு சிறிய ரோல் கிடைத்தாலும் தனது நடிப்பால் அதைப் பதியச் செய்யும் ஒரு நடிகன் கருணாகரன். ‘உப்பு கருவாடு’ படத்தில் அன்றாடம் நம் பக்கத்து வீட்டில் பார்க்கும் ஒரு இளைஞன் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

கதாநாயகியாக நந்திதா நடிக்கிறார். தன்னை ஒரு கதாநாயகி என்று தன்னை குறுகிய வட்டத்தினுள் அடைக்காமல் தனக்கான நல்ல கதாப்பாத்திரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவருக்கு சரியான கதைகளும் படங்களும் கிடைக்க வேண்டும். அவ்வகையில் இருவருக்கும் ‘உப்பு கருவாடு’ ஒரு சிறந்த படமாய் அமையும்” ” எனக் கூறினார் இயக்குனர் ராதா மோகன்.

மேலும், “படத்தின் திறம் குறையாமல் குறுகிய காலத்தில் நான் எழுதியதை என் எண்ணத்தின்படியே கொண்டு வர உதவிய அத்தனைக் கலைஞர்களுக்கும் எனது நன்றிகள். தரத்திலும் திறத்திலும் சமரசம் செய்து கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. துரித வேகத்தில் படமெடுக்கும் போது கூட அந்தக் கொள்கையை விட்டுக் கொடுக்காதவன் நான். மொழியின் முக்கியத்துவத்தை அறிந்தவன் நான் என்பதில் எனக்கு பெருமை. அந்தப் பெருமையே எனக்கு மொழி கெடாமல் டப்பிங் செய்ய வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகிறது. படப்பிடிப்பில் இருக்கும் கவனமும் நேர்த்தியும் என் படங்களின் டப்பிங்கிலும் இருக்கும்.

ராம்ஜி நரசிம்மன் போல் ஒரு உறுதுணையான தயாரிப்பாளர் கிடைத்தால் படத்தை சொன்ன தேதியில் என்ன அதற்கு முன்னரே முடித்து விடலாம். எம்.எஸ்.பாஸ்கர், குமாரவேல், சாம்ஸ் என எனது ஆஸ்தான நடிகர் பட்டாளத்துடன் டான்ஸ் மாஸ்டர் சதீஷ் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்டீவ் வாட்ஸ் இசையில் பாடல்கள் ரசிகர்கள் மனதைக் கவரும் வகையிலும் கதையின் ஆழத்தைக் கூறும் வகையிலும் வந்துள்ளது. மேலும், அழகிய காட்சிகளால் மக்களைக் கவர ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசுவாமி பேருதவி புரிந்துள்ளார்.

ரசிகர்கள் தங்களை எளிதில் பொருத்திக் கொள்ளக்கூடிய கதாப்பாத்திரங்களின் மூலம் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்க விரைவில் வருகிறது உப்பு கருவாடு” என நம்பிக்கையுடன் கூறுகிறார் ராதா மோகன்.