Shadow

சிங்கம் II இசை – ஒரு பார்வை

சூர்யாவும், இயக்குநர் ஹரியும் மீண்டும் தேவி ஸ்ரீ பிரசாத்துடன் இணைந்துள்ளனர். இந்தக் கூட்டணியில் முன்பு  வெளியான ஆறு மற்றும் சிங்கம் முதல் பாகத்தின் பாடல்கள் நல்ல வரவேற்ப்பைப் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றி சிங்கம் இரண்டாம் பாகத்திலும் தொடருமா என்று பார்ப்போம். 

இப்படத்தில் மொத்தம் 6 பாடல்கள். 

பாடல்களை எழுதியவர் விவேகா.

1. பாடல் – புரியவில்லை 
பாடியவர் – ஸ்வேதா மோகன் 

நாயகி, நாயகன் மீதுள்ள காதலை வெளிப்படுத்தும் பாடல் இது. ஸ்வேதா மோகன் குரல் அடடா அடடா.. நல்ல ஒரு “ஃபாஸ்ட் மெலடி”. அருமையான இசையும் வரிகளும்.  

2. பாடல் – வாலே வாலே 
பாடியவர் – ஷங்கர் மகாதேவன் 
நாயகனின் அறிமுக பாடல், வழக்கமான ஹீரோவோட பெருமை பாடும் பாடல், வழக்கமான இசை.  குறிப்பிட்டு சொல்லும்படியாக எதுவுமில்லை   

3. பாடல் – அச்சமில்லை
பாடியவர் – தேவி ஸ்ரீ பிரசாத் 

“சிங்கம் சிங்கம்.. ஹி இஸ் துரைசிங்கம்” என்று சிங்கம் படத்தில் வரும் பாடலின் அடுத்த வெர்ஷன் போல. இப்பாடலை கேட்பதை விட திரையில் பார்ப்பதே சிறந்தது.  

4. பாடல் – சிங்கம் டான்ஸ் 
பாடியவர் – தேவி ஸ்ரீ பிரசாத், பாபா சேகல், ஷர்மிளா

Foot tapping song, அனைவரையும் கவர்ந்திடும். இப்பாடலில் தேவி ஸ்ரீ பிரசாத்தின் ட்ரேட்மார்க் இசையைக் கேட்கலாம். 

5. பாடல் – விதை போல 
பாடியவர் – ஹரிஹரன் 

நாயகன் அடிபட்டு மீண்டெழுந்து வருவதை  பாடலின் வரிகள் வெளிப்படுத்துகின்றன. ஹரிஹரன் குரலில் ஒரு அழுத்தமான பாடல்.

6.  பாடல் – கண்ணுக்குள்ளே 
பாடியவர் – ஜாவேத் அலி, சைமன், ப்ரியா ஹிமேஷ்

“கண்ணுக்குள்ளே gun ah வச்சி என்ன சுடாத” ஜாவேத் அலி மற்றும் ப்ரியா ஹிமேஷ் குரலில் நல்ல ஒரு பெப்பி பாடல். சிங்கம் முதல் பாகத்தில் “காதல் வந்தாலே” பாடலை போல இதுவும் கேட்பவரை ஆட்டம் போட வைக்கும்.

“புரியவில்லை”, “சிங்கம் டான்ஸ்” மற்றும் “கண்ணுக்குள்ளே” பாடல்கள் மக்களை நிச்சியம் கவரும் என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும் சிங்கம் படத்தின் பாடல்கள் போல சிங்கம் II படத்தின் பாடல்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். 

சிங்கம் II 3.5/5

– இரகுராமன்

<

Leave a Reply