Shadow

சீனாவில் இருதய நோய் குறைவு..! ஏன்.? எப்படி.!

சீன உணவு

பாராம்பரிய சீனத்து உனவுகள் நோய்களைத் தடுக்கும், ஆற்றலுடையன.

சிட்டக்கிவகை காளான்களினால் செய்யப்பட்ட உணவுப் பதார்த்தங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் சிறந்தவை. கிசகா மோரி (Kisaka mori) என்னும் ஜப்பானிய அறிஞர் சிட்டக்கி காளான்களினது நோய் தீர்க்கும் இயல்பை வெளிக்காட்டினார்.

சிட்டக்கி காளான்களிலுள்ள எரிட்ரீன் (Eritasenina) என்னும் பதார்த்தம் குருதிக் கொலஸ்ட்ரோலின் அளவை மிக விரைவாகக் குறைக்கக் கூடியது. இதனைத் தவிர சிட்டக்கி காளான்களின் மருத்துவத்தன்மையான பல்வேறு பதார்த்தங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை பல்வேறு நோய்களைத் தடுப்பதை ஆய்வுகள் காட்டுகின்றன.

லென்டினன் (Lentinan) என்னும் பதார்த்தம் புற்று நோயைத் தடுக்கக்கூடிய ஆற்றலுள்ளதா எனத் தீவிரமாக ஆராயப்படுகிறது. அதனைவிடக் கொர்டினெலின் (Cortinelin) என்னும் பதார்த்தம் நுண்ணுயிர் கொல்லியாகத் தொழிற்படக்கூடியது. எனவே சிட்டக்கி காளான் உணவுகள், உடலுக்கு நன்மையளிக்கக்கூடியவை.

சிவப்பு அரசி

அண்மைக் காலத்தில் செய்யப்பட்ட ஆய்வொன்று சீன மக்களால் பாவிக்கப்படும் சிவப்பு மதுவம் தொற்றிய அரிசி (Red Yeast Rice) குருதிக் கொலஸ்ட்ரோலைக் குறைப்பதைக் காட்டுகின்றது. இவ்வரிசி வழமையாக ஆசிய நாடுகளில் தினம் 14-55 கிராம் வரை ஒருவரால் உபயோகிக்கப்படுகின்றது.