Shadow

டமால் ஏன்? டுமீல் ஏன்?

Damaal Dumeel Preview

அஞ்சு பத்து லஞ்சம் கொடுத்தாவது தன்னுடைய காரியத்தைச் சாதித்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கும் சாதாரணமானவன் நாயகன் மணி. வசதியாக வாழ்ந்து கொண்டிருந்தவன் சூழ்நிலை காரணமாக வேலையை இழக்கிறான். இதற்கிடையில் இளவரசு, காமாட்சி சுந்தரம் என்ற இரு சமூக விரோதிகளின் பிடியில் சிக்குகிறான். இந்த இருவரில் ஒருவரிடம் சிக்கினாலும் மணியின் உயிர் போவது உறுதியாகிறது. அவன் செய்த தவறு என்ன, ஏன் இவர்கள் இவனைத் தேடுகிறார்கள், மணி இவர்களிடம் சிக்கினானா அல்லது தப்பினானா என்பதே முடிவு.

கதையின் நாயகன் மணியாக வைபவ். கதையின் நாயகியாக ரம்யா நம்பீசன். இளவரசாக கோட்டா சீனிவாச ரா காமாட்சி சுந்தரமாக ஷாயாஜி ஷிண்டே நடிக்கின்றனர். இவர்கள் தவிர மனோபாலா, சார்லி முதலியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

பணிக்குழு:

>> எழுத்து, இயக்கம் – ஸ்ரீ
>> தயாரிப்பு – கேமியோ ஃப்லிம்ஸ் சி.ஜே.ஜெயகுமார்
>> ப்ரொடக்ஷன் கன்ட்ரோலர் – ஆர்.உதயகுமார்
>> இசை – தமன் எஸ்.எஸ்.
>> ஒளிப்பதிவு  – ஏ.எம்.எட்வின் சகாய்
>> படத்தொகுப்பு – பரமேஷ் கிருஷ்ணா
>> கலை – ஆறுச்சாமி
>> பாடல்கள் – நா.முத்துகுமார், தாமரை, மதன் கார்க்கி, கருணாகரன்
>> நடனம் – அன்விதா ஷோபி, சதீஷ்
>> ஆக்ஷன் – ஜி
>> மக்கள் தொடர்பு – நிகில்