Shadow

டிஜிட்டல் ‘ஆயிரத்தில் ஒருவன்’

திவ்யா பிலிம்ஸ் உரிமையாளராகிய சொக்கலிங்கம் ஆகிய நான் என்னை ஊக்குவித்த அனைத்து பத்தரிகை மற்றும் மீடியா நண்பர்களுக்கு என்னுடைய பணிவான வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு, ‘கர்ணன்’ என்ற மாபெரும் மகாபாரதக் காவியத்தினை ‘ரெஸ்டோரேஷன்’ மற்றும் ‘டிஐ – டிடிஎஸ்’ (Restoration, DI & DTS) எனும் நவீன தொழில்நுட்பத்தினை இன்றைய இளைஞர்களுக்கு தேவைப்படும் வகையில் செய்ததின் வாயிலாக, அந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றதற்கு முக்கிய காரணம் பத்திரிகை நண்பர்களும், மீடியா நண்பர்களும் என்பதை நான் நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு ‘கர்ணன்’ என்ற வெற்றியைக் கொடுத்தது போல், மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுக்கும் , புரட்சித் தலைவி அவர்களுக்கும் இன்றைய காலகட்டத்திற்கு அவர்கள் இணைந்து நடித்த முதல் காவியமான ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தினை, ‘கர்ணன்’ படத்தைப் போலே இன்றைய கால இளைஞர்களுக்கு எடுத்துச் செல்ல இயலுமா என்ற முயற்சியில், கடந்த இரண்டு வருட காலமாக மிகவும் சேதமடைந்த ‘பிக்சர் நெகட்டிவ்’ (Picture Negative) மற்றும் ‘சவுன்ட் நெகட்டிவ்’ (Sound Negative) களை எடுத்து அதனை சீர் செய்யும் முயற்சியில் அதாவது ‘ரெஸ்டோரஷன்’ (Restoration), ‘டிஐ, கலர் கரெக்ஷன், (DI & Color Correction)’ ஆகியவைகளைச் செய்து முடிந்த வரையில் இன்றைய கால தரத்திற்கு ஏற்ற வகையில் சினிமாஸ்கோப்பில் வடிவமைத்துள்ளோம்.

அடுத்தபடியாக ‘சவுன்ட் நெகட்டிவ்’வை சரி செய்யும் முயற்சியில் இன்றைய கால கட்ட இளைஞர்களுக்கு ஏற்ற வகையில் ‘மோனோ சவுன்ட் சிஸ்டம்’ (Mono Sound System) ஆக இருந்த ‘சவுன்ட் நெகட்டிவ்’ வை ‘வேவ் ஃபார்மேட் (Wave Format) , ‘நாய்ஸ் ரெஸ்டோரேஷன்’(Noise Restoration)’ என்ற யுக்திகளை புகுத்தி ‘டிடிஎஸ்’ – 5. 1 தொழில்நுட்பத்திற்கு வடிவமைக்கும் முயற்சியில் மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் – ராமமூர்த்தி அவர்களின் இனிமையான இசையினை எந்தவித மாற்றமும் இல்லாமல் இன்றைய கால கட்டத்திற்கு ஏற்றவகையில் பல்வேறு இசைக் கலைஞர்களின் உதவியால் அந்த தனித்தன்மை சிறிதும் குன்றாமல் மெருகேற்றி ‘டிடிஎஸ் – 5.1 சர்ரவுன்ட்’ (DTS – 5.1 Surround) என நவீன மயமாக்கியுள்ளோம்.

நமது தமிழக முதல்வர் மாண்புமிகு அம்மா அவர்கள் , என்னுடைய இந்த முயற்சியினைப் பாராட்டி மிகவும் ஊக்குவித்து, வாழ்த்துச் செய்தியினை இன்று எமக்கு அளித்துள்ளார்கள். இதை எனது வாழ்நாள் சாதனையாக, நான் பிறந்த பேறினை அடைந்ததாகக் கருதுகிறேன்.

இதன் வாயிலாக அம்மா அவர்களுக்கு என்னுடைய பணிவான நன்றியினையும், வணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு.G.சொக்கநாதன்,
திவ்யா பில்ம்ஸ்.