Shadow

டிராகுலா – சாத்தானின் மகன்

Dracula டிராகுலா

டிராகுல் என்றால் ரொமேனிய மொழியில் டிராகன் என்று பொருள்.

மனித ரத்தம் குடிக்கும் குணம் கொண்ட காட்டேரிகளுக்கு, டிராகுலா என்ற பெயர் வந்தது வலாக்கிய அரசாங்கத்தின் மன்னான மூன்றாம் விளாட்டி என்னும் சிற்றரசனால். நாடோடிக் கதைகளும் பழம்பாடல்களும் விளாடின் ‘பெருமை’களை இன்னும் ஊதிப் பெரிதாக்கிவிட்டன. டிராகுலா என்பதற்கு சாத்தானின் மகன் என்ற அர்த்தத்தையும் கொடுத்துவிட்டன.

மனித ரத்தம் குடிக்கும் டிராகுலா பற்றிய படங்கள் பல முறை திரையில் உலா வந்ததுள்ளன. ஆனால் டிராகுலாவின் முந்தைய சரித்திரத்தைப் பற்றி விவரிக்கிறது, “டிராகுலா அன்டோல்ட் (Dracula Untold)” என்ற புதிய படம். கதை, 1492இல் நடக்கிறது. ட்ரான்சில்வேனியா வில் ஆட்சி புரிந்த அரசன், மூன்றாம் விளாட், டிராகுலாவாக மாறுவதாகக் காட்டப்பட்டுள்ளது.

ட்ரான்சில்வேனியாக்கு அருகே உள்ள ஒட்டோமான்அரசாங்கம் மூன்றாம் விளாடு க்கு பல கஷ்டங்களைக் கொடுக்கிறது. இதற்கிடையே, இரண்டாம் சுல்தான் மெஹமத், மூன்றாம் விளாடின் நாட்டிலிருந்து, 1000 சிறுவர்களை, தன் படையில் சிறுவர் அணியில் சேருவதற்காகக் கேட்கிறார்! இந்த அணியில் மூன்றாம் விளாடின் மகனும் கூட உண்டு! மூன்றாம் விளாட், டிராகுலாவாக மாறவேண்டிய கட்டம் வந்துவிட்டது!

கேரி ஷோர், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி உள்ளார். லூக் ஈவாண்ஸ், மூன்றாம் விளாடாக நடித்துள்ளார். அவரது மனைவியாக, ராணி மிரெனாவாக நடித்துள்ளவர், சாரா கோடன்.

அக்டோபர் 10 வெளியாகும் இந்தப் படம், தமிழிலும், “டிராகுலா: ஒரு மர்மம்” என இப்படத்தை ஹன்சா ஃபிக்சர்ஸால் வெளியிடப்படுகிறது.