“’என்னமோ நடக்குது’ நான் மியூசிக் பண்ற எட்டாவது படம். அஞ்சு தமிழ்ப்படம்; ஒரு கன்னடப் படம்; ஒரு தெலுங்குப் படம் பண்ணியிருக்கேன். அந்தப் படமெல்லாம் தியேட்டருக்கு வந்தது.. ஒரு வாரத்திலேயே தியேட்டரில் இருந்து எடுத்துட்டாங்க. அதனால் நான் மியூசிக் பண்றேன் என மக்களுக்குத் தெரியாம போயிடுச்சு. இந்தப் படத்துலதான் நான் மியூசிக் டைரக்டராக ரீச் ஆகியிருக்கேன். ரொம்ப சந்தோஷமா இருக்கேன். ‘தல’க்கு ஹேப்பி பர்த் டே! இன்னிக்கு நைட் பார்ட்டியிருக்கும். நான் போவேன்” என்றார் மகிழ்ச்சியுடன் பிரேம்ஜி அமரன்.
“இயக்குநர் ராஜபாண்டி எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். ‘இப்படிப் பண்ணலாமா?’ எனக் கேட்டால்.. ‘விருப்பப்படி பண்ணுங்க’ என எடிட்டிங் ரூம் பக்கமே வர மாட்டார். ராஜபாண்டி சார் ஸ்க்ரிப்ட் பார்த்தீங்கன்னா.. மூணு பெர்ஸ்பெக்டிவ்ல கதை அமைஞ்சிருக்கும். நான் அதை இன்னொரு வெர்ஷன்ல பண்ணலாமான்னு கேட்டப்ப.. டைரக்டர் ஒத்துக்கிட்டாரு. விநோத் சாரும் ஓகேன்னாரு. அதனால் அவங்க ரீ-ஷூட்டிங் போறாப்ல இருந்தது. அதைப் பத்திலாம் கவலைப்படாம வொர்க் பண்ணதாலதான் செகன்ட் ஹாஃப் நல்லா வந்திருக்குன்னு நினைக்கிறேன்.
எனக்குத் தெரிஞ்சு.. ‘சிங்க் (sync)’ பார்க்கிற இசையமைப்பாளர் பிரேம்ஜியாக மட்டுந்தான் இருப்பார். ஆர்.ஆர். போயிட்டு வந்த பிறகு படம் பயங்கர லெவலுக்குப் போயிட்டது. அதற்குப் பிறகு என்னை அவர் ட்ரிம் பண்ணவே விடலை. ‘நீங்க நாலு ஃப்ரேம் ட்ரிம் பண்ணா.. எனக்கு சிங்க் மிஸ்சாகிடும்’ என ஃபோன் செய்து திட்டுவார்” என்றார் எடிட்டர் பிரவீன்.
“தயாரிப்பாளருக்கு (விநோத்குமார் – விஜய் வசந்த்தின் தம்பி) முதலில் நன்றி. தன்னோட அடுத்த படத்துலயும் எனக்கு ஹீரோவாக நடிக்க வாய்ப்புத் தரணும்னு கேட்டுக்கிறேன். எனக்கு ஃபைட்ன்னா அலர்ஜி! கணேஷ் குமார் மாஸ்டரை ரொம்ப படுத்திட்டேன். அடுத்த படத்தில் இன்னும் நல்லா ஃபைட் பண்ணுவேன். இந்தப் படத்தோடு பலம், ‘இசை இளவல்’ ஆக அறிமுகமாகி இருக்கும் பிரேம்ஜி அமரனின் பேக்-கிரவுண்ட் ஸ்கோர்னுதான் சொல்லணும். ஏன்னா ராஜபாண்டி சாரோடது ரொம்ப ஃபாஸ்ட்டான ஸ்க்ரீன்-ப்ளே. அவர் நினைச்சதே அப்படியே எடுத்துக் கொடுத்தார் வெங்கடேஷ் சார். அவங்க இரண்டு பேரும் காலேஜ் மேட்ஸ். அதனால அவங்க அண்டர்ஸ்டாண்டிங் ரொம்ப நல்லாயிருந்தது. அதை அழகா கட்டிங் ஒட்டிங் பண்ணிக் கொடுத்தார் பிரவீன் சார். அதுக்கு எக்ஸ்ட்ரா ஆர்டினரியாக மியூசிக் பண்ணிக் கொடுத்தார் பிரேம்ஜி.
படத்தோடு முக்கியமான அம்சம் என்னன்னா.. படத்தை, 12-12-12 அன்னிக்கு தலைவர் பிறந்த நாள் அப்போ ஸ்டார்ட் பண்ணோம். இன்னிக்கு ‘தல’ பிறந்த நாளில் (01-04-2014) சக்சஸ் மீட் கொண்டாடுறது ரொம்ப சந்தோஷமாக இருக்கு” என்றார் ‘என்னமோ நடக்குது’ படத்தின் நாயகன் விஜய் வசந்த்.