Shadow

நகரத்தில் நிம்மதியாக வாழ்தல் எளிதல்ல.!

மெல்லிசை

மெல்லிசை படம், அடுத்த கட்டத்தை நோக்கி நகர எடுத்துக் கொண்ட காலதாமதம் குறித்த கோபம் விஜய் சேதுபதியிடம் இருந்தது.

“யாருடைய தயவும் இல்லாமல் தானாக முளைத்த காட்டு மரம் விஜய் சேதுபதி. அந்த காட்டு மரம் எதைப் பற்றியும் கவலைப்படாமல், வந்தா மலை போனா சென்ஸாரில் கட் பண்ணும் வார்த்தை என படங்கள் செய்கிறது. யாருடைய தயவும் இல்லாமல் வரக்கூடியவருக்குத்தான் புதியவர்களை அறிமுகம் செய்வதிலும், புதிய முயற்சிகளைச் செய்வதிலும் தைரியமும் மனோதிடமும் இருக்கும். இதுதான் அவரை உச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. இதைத் தொடர்ந்தால் அவ்ரென்றும் ரவுடித்தான்” என்றார் இயக்குநர் ராம். “நான் ஏதோ இயக்குநர்க்கு வாய்ப்புக் கொடுத்ததாகச் சொல்றாங்க. ஆனா உண்மையிலேயே ரஞ்ஜித் தான் எனக்கு வாய்ப்புக் கொடுத்துள்ளார். நீங்க படத்தைப் பார்த்தீங்கன்னா அது தெரியும்” என்றார் விஜய் சேதுபதி.

விஜய் சேதுபதியின் நடிப்புக்கு கடும் சவால் விட்டுள்ளார் காய்த்ரி என்பது ட்ரைலரையும் பாடல் காட்சிகளையும் பார்க்கும்போதே நீங்கள் உணரலாம். “கொஞ்சம் ஏமாந்தா காயத்ரி என்னைத் தூக்கி சாப்பிட்டுடுவாங்கன்னு பஜ்ஜிகிட்ட (பாலாஜி தரணிதரன்), நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படப்பிடிப்பில் சொல்லிட்டு இருப்பேன். ரஞ்ஜித் கதாநாயகி தேடிட்டிருந்தார். காயத்ரி நல்லா நடிப்பாங்க. பிடிச்சிருக்கான்னு பாருங்க என ரஞ்ஜித்கிட்ட சொன்னேன். அவரும் ஆடிஷன் பார்த்தார். காயத்ரியின் நடிப்பு அவருக்கு ரொம்ப பிடிச்சிடுச்சு. இந்தப் படத்தில் கண்டிப்பாக அவங்க நடிப்பு பெரியளவில் பேசப்படும்” என்றார் விஜய் சேதுபதி. காயத்ரிக்கோ கலவையான உணர்வுகளால் பேச முடியாமல், உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் வடிக்கத் தொடங்கிவிட்டார்.

மெல்லிசை படத்தை இயக்கியுள்ள ரஞ்ஜித், இயக்குநர் ராமிடம் உதவியாளராகப் பணிபுரிந்தவர். “ரஞ்ஜித் ஜெயக்கொடிக்கு கவிதை தெரியும், இலக்கியம் தெரியும். கோபமும் வன்மமும் நிறைந்த ஒரு கிராமத்தன்; ஆனால் லயோலாவில் படித்த யோயோ இளைஞன். உலக சினிமா நிறைய பார்ப்பவர். இந்தக் கலவைதான் அவர். நகரத்தில் சுவாரசியமாக வாழலாம். ஆனால் நிம்மதியாக வாழ்தல் எளிதல்ல என மெல்லிசையில் சொல்லியுள்ளார்.

முதல் மழை, முதல் ரயில், முதல் காதல், முதல் காதல் போன்றவை தரக்கூடிய பரவசத்தை விட ஒரு இயக்குநருக்கு தன் முதல் தரக்கூடிய பரவசம் மிகவும் அதிகம். அந்தப் பரவசத்தை அனுபவிக்கும் ரஞ்ஜித்துக்கு வாழ்த்துகள். அதே போல் இன்னொரு பரவசமும் உண்டு இன்னிக்குத் தெரிஞ்சது. அது ஒரு இயக்குநரிடம் பணி புரிந்த உதவி இயக்குநர் செய்யும் முதல் படம், அந்த இயக்குநருக்கும் அத்தகைய பரவசத்தை ஏற்படுத்தும் என்பதுதன். நானும் இப்போ ரொம்ப பரவசமா இருக்கேன்” என தன் உதவி இயக்குநரை வாழ்த்தினார் ராம்.