
காதல் கலந்த திகில் திரைப்படமாக உருவாகி வரும் ‘பலூன்’ திரைப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
ஒளிப்பதிவாளராக R.சரவணன், கலை இயக்குநராக சக்தி வெங்கடராஜ், படத்தொகுப்பாளராக ரூபன், ஸ்டன்ட் மாஸ்டராக திலிப் சுப்பராயன், ஆடை வடிவமைப்பாளராக NJ சத்யா மற்றும் நடன இயக்குநராக ஷெரிப் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.
“முழுக்க முழுக்க இள வட்டாரங்களுக்கு பிடித்தமான படமாக தான் நாங்கள் பலூன் திரைப்படத்தை உருவாக்கி வருகிறோம். இளைஞர்களைக் கவரக்கூடிய கதை என்பதால், எங்கள் பலூன் படத்தில் மெலோடி பாடல்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நங்கள் கருதினோம். ‘மெலோடி’ என்றாலே அது யுவன்ஷங்கர் ராஜா தான். எங்கள் படத்திற்கு அவர் இசையமைப்பது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நிச்சயம் அவருடைய இசையும், பாடல்களும் எங்கள் பலூன் திரைப்படத்திற்கு முதுகெலும்பாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் பலூன் திரைப்படத்தின் இயக்குநர் சினிஷ்.
தன்னுடைய துள்ளலான இசையால் இள வட்டாரங்களை தன் பிடியில் வைத்திருக்கும் யுவன்ஷங்கர் ராஜா, விரைவில் தன்னுடைய ‘பலூன்’ இசை மழையை ரசிகர்களுக்கு வழங்க இருக்கிறார்.