Shadow

“ராமைய்யா வஸ்தாவையா” – ஸ்ருதிஹாசன்

ஸ்ருதிஹாசன் நடிக்கவிருக்கும் அடுத்த இரண்டு படங்களின் பெயருமே, ‘ராமைய்யா வஸ்தாவையா (Ramaiya Vastavaiya)‘ தான்.

ஆனால் இரண்டுமே தமிழ்ப்படங்கள் இல்லை. ஒன்று பாலிவுட்டில். இன்னொன்று டோலிவுட்டில். ஆனால் இரண்டு படமுமே கிராமத்தில் நடப்பதாகவே கதையம்சம் கொண்டது.

ஹிந்திப் படத்தில், நாணம் மிகுந்த கிராமத்துப் பெண்ணாக நடிக்கிறார். இப்படம் தெலுங்கில் பிரபுதேவாவால் தமிழில் 20005 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. சித்தார்த்தும், த்ரிஷாவும் நடித்திருந்தனர. அதே படம் தமிழில், ஜெயம்ரவி த்ரிஷா நடிக்க ரீ-மேக் புகழ் ராஜா இயக்கத்தில், ‘சம்திங் சம்திங்’ என வெளியானது. எட்டு வருடங்களுக்குப் பின், பிரபுதேவாவே தன் படத்தை ஹிந்தியில் ரீ-மேக்குகிறார். இப்படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு ஜோடியாக கிரிஷ் குமார் நடிக்கிறார்.

ராமைய்யா வஸ்தாவையா என அதே தலைப்புக் கொண்ட தெலுங்குப் படத்திலோ, அதற்கு எதிர்மாறான முரட்டுத்தனம் மிகுந்த பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் ஆக்ஷன் காட்சிகளில் தற்போது நடித்து வருகிறார்.

இரண்டு படமுமே ஜூலை மாதம் வெளிவருமென எதிர்பார்க்கப்படுகிறது.