Shadow

“வரலாறு முக்கியம்!” – சில்வஸ்டர் ஸ்டலோன்

Expendables-3

ரேம்போவாக கலக்கிய ஆக்ஷன் ஹோரோக்கு 68 வயதாகிறது. எனினும் அவரது ‘எக்ஸ்பேண்டபிள்ஸ் – 3’ மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. அதிலும் இம்முறை, எக்ஸ்பேண்டபிள்ஸில் ‘ப்ரேவ் ஹார்ட்’ நாயகன் மெல் கிப்சன் வில்லனாக அறிமுகமாகிறார். அந்த அனுபவத்தைப் பற்றி சில்வஸ்டர் ஸ்டலோனிடம் கேட்ட பொழுது, “வில்லனின் முகத்தில் குத்துவது சுலபம். ஆனா அந்தக் கதாபாத்திர உருவாக்கமும் அதன் பின்புலமான வரலாறையும் உருவாக்குவதுதான் கஷ்டம். மெல், ஸ்டோன்பேங்க்ஸ் எனும் பாத்திரத்தைச் செதுக்கியுள்ளார். அதனால் க்ளைமேக்ஸ் சண்டைக் காட்சி மிக அருமையாக வந்துள்ளது. நான் என் வாழ்க்கையில் பல சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளேன். ஆனா இது உண்மையிலேயே ஸ்பெஷல். கச்சிதமாகவும் மிரட்டலாகவும் வந்துள்ளது. காரணம் வரலாறும் எங்க இருவர் கதாபாத்திரத்தின் உருவாக்கமே!” என்றார்.

Jason Statham || Expebdables-3படத்தின் இன்னொரு ஆச்சரியம், ஆக்ஷன் படங்களில் நீண்ட காலம் நடிக்காமல் இருந்த ஹாரிசன் ஃபோர்ட்டும் எக்ஸ்பேண்டபிள்ஸில் இணைந்திருப்பது. ப்ரூஸ் வில்லசிற்குப் பதிலாக நடிக்கிறாரா எனக் கேட்டதற்கு, “யாராலும் அவரை ரீப்ளேஸ் செய்ய இயலாது. நான் வேற கேரக்டர்தான் பண்றேன். என்னைக் கூப்பிட்டு, நான் ஏன் படத்தில் இருக்கணும் எனச் சொன்னாங்க. படத்தில் எனக்கு ஆக்ஷன் காட்சிகள் இல்லை. ஆனா சுவாரசியமான கேரக்டர். இந்தப் படத்திற்கு முன் சில்லைத் (Syl) தெரியாது. அவருடன் பணி புரிந்தது நல்ல அனுபவமாக இருந்தது” என்றார்.

எக்ஸ்பேண்டபிள்ஸின் மூன்று பாகத்திலும் சில்வஸ்டர் ஸ்டலோனுடன் நடித்தவர் ஜேசன் ஸ்டெதம். மற்ற இரண்டு பாகத்தைவிட இதிலென்ன விசேஷம் எனக் கேட்டதற்கு, “இதுவரை வந்திராத சிரப்பான ஆக்ஷன் படமாக இந்தப் பாகம் இருக்கும். எங்களோடு புதிதாக மெல் கிப்சன், காரிசன் ஃபோர்ட், வெஸ்லி ஸ்னைப்ஸ் ஆகியோர் இணைந்துள்ளார்கள். சில் (Syl) நடிகர்களைவிட அவர்கள் ஏற்கும் பாத்திரங்களில்தான் கவனம் செலுத்துவார். அவருக்கு ஹீரோகள் பற்றி எழுதப் பிடிக்கும். ஏன்னா அவர் கேரியர் முழுவதும் ஹீரோவாக இருந்தவர். அவரைவிட ஹீரோகள் பற்றி நன்றாகத் தெரிந்தவர் யாருமில்லை” என்றார்.