Shadow

விளம்பரம் தேடும் ஆள் அல்ல நான் – எஸ்.டி.ஆர்

Simbhu statement on Kaveri

‘இனி என் படங்கள் கர்நாடகாவில் திரையிடப்படாது’ என சிம்பு ஆவேசப்பட்டதாக ஒரு தகவல் சமூக தளங்களில் வேகமாகப் பரவியது. அதனை மறுத்து விளக்கம் அளித்துள்ளார் சிலம்பரசன்.

அன்பு நண்பர்களே,

தற்போது நான் தாய்லாந்து நாட்டில், அச்சம் என்பது மடமையடா படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பில் இருக்கிறேன். காவேரி விவகாரம் தொடர்பாக நான் ஏதோ கூறியதாக வந்த செய்திகள் குறித்து எனது நலவிரும்பிகளும், எனது தந்தையும் என்னிடம் கூறினர். இந்தியாவின் பொறுப்புள்ள குடிமகனாக, எனது பங்கும், எனது எல்லைகளும் என்னவென்று எனக்குத் தெரியும். காவேரி விவகாரம் குறித்து எந்த அறிக்கையும் நான் வெளியிடவில்லை. இது இரு மாநிலங்களுக்கும் இடையில் நிலவும் சர்ச்சை. இது கலைஞர்கள் மேடையேறி பிரச்சாரம் செய்வதற்கான விஷயம் அல்ல.

சட்டத்தின் துணையோடு இரு மாநிலத் தலைவர்களும் இதற்கான தீர்வை எட்டுவார்கள். நம்மால் முடிந்தது, நன்றாக பருவமழை இரு மாநிலங்களிலும் பொழிந்து, அமைதியும் வளமும் செழிக்க வேண்டும் எனப் பிரார்த்திப்பதே! அதே போல, நாம் அண்டை மாநில மக்களாக சுமுகமாக வாழ்ந்துள்ளோம். ஆனால் இந்த விவகாரத்தினால் எக்காரணம் கொண்டும் இரு மாநில மக்களிடையே இருக்கும் உறவில் எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என விரும்புகிறேன். இந்தப் பிரச்சனையைக் கூடிய விரைவில் கடப்போம் என நம்புகிறேன்.

இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் ரீதியில் அறிக்கைகளை விட்டு, இரு மாநிலங்களிலும் அமைதி இல்லாத நிலையை ஏற்படுத்தி, அதன் மூலம் விளம்பரம் தேடும் ஆள் அல்ல நான் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்.

நன்றி,
எஸ்.டி.ஆர்.