32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

தூத்துக்குடியில் 49000 கோடி முதலீடு – அல் க்யுப்லா அல் வாடயா நிறுவனம்

Dinesh R சேலம் Published: 18/02/2020 1 நிமிட வாசிப்பு Updated: 22/04/2020 சமூகம்
எழுத்து அளவு:

Al-Qebla-Al-Watya

சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த மாதம் 20ஆம் தேதி, தமிழக அமைச்சரவைக் கூட்டம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்  நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் போது தமிழகத்தில் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது தொடர்பான ஆலோசனை நடைபெற்றது. குறிப்பாகத் தென்மாவட்டங்களில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், தொழில் நிறுவனங்கள் மூலம் முதலீடுகளை அதிகரிக்கவும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இதையடுத்து, தூத்துக்குடியில்  ரூ. 49,000 கோடி முதலீட்டில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க குவைத் நாட்டில் செயல்பட்டுவரும் அல் க்யுப்லா அல் வட்யா என்ற நிறுவனத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்நிலையில், தூத்துக்குடியில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவும் முதலீடு செய்யவும் அனுமதி வழங்கிய தமிழக அரசிற்கு அல் க்யுப்லா அல் வட்யா நிறுவனத்தலைவர் அப்துல் கரீம் அல் முட்டாவா மற்றும் சக்தி குழுவின் ராஜ் குமார் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர். 

இந்தத் தொழிற்சாலை மூலம் தென் மாவட்டங்களில் உள்ள கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.