32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

ரவீந்திர சங்கீதம் – என்றும் புதுமை | Sur O Lohori

Dinesh R சேலம் Published: 10/05/2026 2 நிமிட வாசிப்பு Updated: 13/05/2026 சமூகம்
எழுத்து அளவு:

கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் 165 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், ‘Sur O Lohori (இசையும் தாளகதியும்)’, கலை மற்றும் கலாச்சார நிறுவனம் மூலம் மெல்லிசை இசை அஞ்சலி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இருபது பாடல்களுடன் நூறு குரல்களில் இசைக்கப்பட்ட ரவீந்திர சங்கீதம், சென்னையில் கோலாகலமாக அரங்கேறியது. ஒரு பான் இந்தியா நிகழ்வாக, நாட்டின் 11 முக்கிய நகரங்களில் இக்கொண்டாட்டம் நடைபெறுகிறது. கொல்கத்தாவைச் சேர்ந்த அருந்ததி டெப், மெல்லிசை ட்யூன்களின் கருத்தாக்கத்திற்கும் இசையமைப்பிற்கும் மூளையாக இருந்து இந்நிகழ்ச்சியை இயக்கினார். ஒவ்வொரு நகரத்திலும், ஒவ்வொரு கலாச்சார நிறுவனம் நிகழ்ச்சிக்குப் பொறுப்பேற்றுக் கொண்டது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

Chironutan எனப் பெயரிடப்பட்ட இந்நிகழ்வு, மே 10 ஆம் தேதி அன்று மாலை, சத்யபாமா பல்கலைக்கழகத்தின் RJ ஆடிட்டோரியத்தில், நூறு பாடகர்கள் ஒத்திசைவான குரலில் பாட அற்புதமாக அரங்கேறியது. கூடுதல் சிறப்பம்சமாக, அதே நேரத்தில் இந்தியாவிலுள்ள 11 நகரங்களிலும், இதே போன்று நிகழ்ச்சிகள் நடந்தன. இந்நிகழ்ச்சிக்கு எனப் பெயரிப்பட்டிருந்தது. Chironutan என்றால் என்றும் புதுமை எனப் பொருள். சென்னை நிகழ்வை ஸ்வாதி பட்டாச்சார்யா தலைமை வகித்துச் சிறப்பாக வடிவமைத்திருந்தார். 1994 இல் இருந்து ரவீந்திர சங்கீதப் பாடகராக இருக்கும் ஸ்வாதி பட்டாச்சார்யா, 2015 இல் Sur O Lohori – கலை மற்றும் கலாச்சார நிறுவனத்தைச் சென்னையில் தொடங்கினார் என்பது குறிப்பித்தக்கது.

Shoto Kontthe என்றால் நூறு குரல்கள் என்றும், Sohosro Kontthe என்றால் ஆயிரம் குரல்கள் என்றும் பொருள்படும்; இது, ரவீந்திரநாத் தாகூரைப் பெருமைப்படுத்தும் பெரும் இசை நிகழ்ச்சியைக் குறிக்கும் பதமாகும். ஒற்றுமை, பண்பாட்டுப் பெருமிதம் மற்றும் கூட்டு மரியாதை ஆகியவற்றைக் குறிக்கிறது; மேலும், குழுவாகப் பாடுதல் அல்லது பாராயணம் செய்தல் போன்ற நிகழ்வுகளில் இப்பதம் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. மொழி எல்லையைக் கடந்து மனதை ஊடுருவும் ஆத்மார்த்தமான இசை நிகழ்வாக Chironutan அமைந்தது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.