32°C
விளம்பரம்
Advertisement
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4071 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 272)
சன்யாசம் கூறாமல் கொள் கதை

சன்யாசம் கூறாமல் கொள்

“உங்களுக்கும் க்ளைன்ட்டுக்கும் நடுவில் மாட்டிக்கிட்டு இப்படி உயிர விடுறதுக்கு.. பேசாம சாமியாரா போயிடலாம்.” கோபத்திலும் சற்று நிதானமாக உதிர்ந்த வார்த்தைகள். ஒரே நாளில் வெவ்வேறு தருணங்களில் மூன்று முறை சாமியார் ஆவதைப் பற்றி ராம்சரண் கூறி விட்டார். அதன் பிறகு அலுவலகத்தில் ஒரு வித மரியாதையுடன் பார்க்க ஆரம்பித்தனர். அவர் கடந்தவுடன் அவரைப் பற்றி குசுகுசுவெனப் பேசிக் கொண்டனர். எப்பொழுதையும் விட இவருக்கு கீழ் இருப்பவர்கள் நன்றாக வேலை செய்தது போலிருந்தது. நாற்பதுகளை கடந்தும் நல்ல திடகத்திரமான உருவம். […]

17/09/2009 Dinesh R
ரசிகன் நான் கவிதை

ரசிகன் நான்

ஏ தமிழ் சினிமாவே! எனக்கு உன்னை எவ்வளவு பிடிக்கும் என்று நீ அறிவாயா? கருப்பு வெள்ளை காலத்திலேயே காண்பவர்களின் கனவுகள் உன்னால் வண்ணம் பெற்றன. இன்று நீயோ வண்ண பெண்ணாய் கனவு தேவதையாய் புவனத்தை பவனி வருகிறாய். ஆனால் உனது ஆதாரங்கள் அக்கரை சீமையில் இருந்து இறக்குமதி ஆகிறது. ஏன் உனக்கு இந்த அவல நிலை? கதைக்கு நாயகி தேடும் காலம் போய் கவர்ச்சிக்காக நாயகி என்ற இழிவு ஏன் இங்கு என்று உன்னிடம் தொற்றியது? கற்பனைகள் […]

26/08/2009 Dinesh R
BJP – ஜஸ்வந்த் சிங் நீக்கமும் அதன் பின்பக்கமும் அரசியல்

BJP – ஜஸ்வந்த் சிங் நீக்கமும் அதன் பின்பக்கமும்

சிம்லாவில் நடைபெற்றுவரும் ”சைதன் பைதக்” எனும் செயற்குழு அவசர அவசரமாக 30 வருடங்களாக BJP யில் உழைத்த ” ஜஸ்வந்த் சிங் ” நீக்கப்பட்டதாக அறிவித்தது. ஜஸ்வந்த் சிங் உடனே தான் அனுமனாக BJP யில் இருந்ததாகவும் தற்பொழுது ராவணனாக  என்னை மாற்றி உள்ளனர் என்றும் சொல்கிறார். அவருக்கு விளக்கமளிக்கவும் வாய்ப்பு தரப்படவில்லை. TV மீடியாக்கள் தொடர் செய்தியாக இதை ஒளிபரப்பி வருகின்றன. ஜஸ்வந்த் சிங் செய்த பிழை தான் என்ன? ஒரு புத்தகம் எழுதினர் என்பது […]

20/08/2009 Dinesh R
கூண்டுக்குள் நம்சுதந்திரம் கவிதை

கூண்டுக்குள் நம்சுதந்திரம்

பூகம்பம், புயல், சுனாமி வந்தால்தான் நமக்குள்ளே தேசிய ஒருமைப்பாடு அப்பொழுதான் அனைவரும் ஒன்றுபடுவோம்…… பரவாயில்லை அடிக்கடி இவைகள் வரட்டும் அந்த சில காலமாவது ஒற்றுமையாய் இருப்போம் …..! நிவாரண நிதியிலும் நித்தம் நித்தம் சீர்கேடு ….! 62 ஆண்டுகள் ஆகின்றது ஆயினும் குண்டு துளைக்காத பாதுகாப்புகுள் நம் சுதந்திர உரை ……! சுதந்திரம் இப்பொழுது சுத்தமாக சுற்றாத இயந்திரம் ….! மகாத்மா சொன்னார் எப்பொழுது ஒரு பெண் இரவில் தனியாக பயமில்லாமல் நடமாட முடிகிறதோ அதுதான் உண்மையான […]

15/08/2009 Dinesh R
அது என்ன… காதல்! கட்டுரை

அது என்ன… காதல்!

யார பார்த்தாலும் நான் அவள காதலிக்கிறேன், இவன காதலிக்கிறேன் என்று சொல்றாங்க. ஆனா.. எனக்கு இந்த காதல் மட்டும் ஒரு புரியாத விஷயாமாகவே இருக்கு. ஏன் எரிச்சலா கூட தான் இருக்கு? இத சொன்னா என்னை இதயம் இல்லாதவன் என்று சொல்றாங்க. சரி காதல் என்ற வார்த்தைக்கு இலக்கண இலக்கியத்தில் பொருள் தேடி, ஓலைச் சுவடி எல்லாம் கூட ஒன்றிரண்டு புரட்டினேன். காதல் என்பது பெரும்பாலும் வினைச் சொல்லாகவும்(Verb), சில இடத்தில் பெயர்ச் சொல்லாகவும்(Noun) உபயோகிக்கப் படுகிறது. […]

07/08/2009 Dinesh R