

நட்பையும் காதலையும் இதை விட புனிதப்படுத்தி விட முடியாது என்கிற மாதிரியான ஒரு அழுத்தத்தை மனசுக்குள் ஏற்படுத்தும் அழியாத கோலங்கள் – 2 திரைப்படம்
படத்தில், ஓர் எழுத்தாளராக வாழ்ந்துள்ளார் பிரகாஷ்ராஜ்; போலீஸ் வேடத்தில் காக்கி சட்டையின் கடுமையையும், உள்ளத்தின் ஈரத்தையும் பிரதிபலித்துள்ளார் நாசர்; பெண்ணின் பெருமையையும் பொறுமையையும் இவரை விட யாரால் பிரதிபலிக்க முடியும் என்கிற மாதிரியான காதாபாத்திரத்தில் ரேவதி அழகாக நடித்துள்ளார்.
இப்படி நான்கு கதாபாத்திரங்களை மட்டும் வைத்து அழுத்தமான திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குநர் M.R.பாரதி.
“அடிதடி இல்லை. குத்துப்பாட்டு இல்லை. காமெடி இல்லை. டூயட் இல்லை.
இதெல்லாம் தான் கமர்ஷியல் ஃபார்முலா என்றால், இது எதுவும் இல்லாமல் இரண்டு மணி நேரம் திரையை நோக்கியே நம் கண்கள் இருக்கும் என்றால் அது அதிசயம் தானே! அந்த அதிசயத்தை அழியாத கோலங்கள் 2 நிகழ்த்தி இருக்கிறது. கொண்டாட வேண்டிய படமே இது” என்கிறது படக்குழு.
மேலும், அர்ச்சனா, ரேவதி, பிரகாஷ்ராஜ், நாசர், இயக்குநர் M.R.பாரதி ஆகியோர் விருதுகளுக்குத் தயாராக இருக்கிறார்கள் என எதிர்பார்ப்பில் உள்ளனர்.


