32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

அபிஷன் – அனஸ்வரா மிக க்யூட்டான ஜோடி | With Love

Dinesh R சேலம் Published: 02/02/2026 4 நிமிட வாசிப்பு Updated: 03/02/2026 சினிமா
எழுத்து அளவு:

Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள, “வித் லவ் (With Love)” திரைப்படம் வரும் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் முன் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

ஒளிப்பதிவாளர் ஷ்ரேயாஸ் கிருஷ்ணா, “இப்படத்தின் கதையை மிக அழகாக சொன்ன மதனுக்கு நன்றி. கதை சொன்னபோது மறுக்கவே தோணவில்லை. திரையிலும் மிக அழகாக வந்துள்ளது. தயாரிப்பாளர் சௌந்தர்யா ரஜினிகாந்த் மேடம், மகேஷ் இருவருக்கும் நன்றிகள். அபிஷன், அனஸ்வரா, மற்றும் நடிகர் குழுவிற்கு நன்றி. படத்தை எடுக்கும் போது ஸ்கூல் நினைவுகள் எல்லாம் வந்தது. படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்” என்றார்.

நடிகர் ஹரீஷ், “எனக்கு மதன் ரொம்ப நாளா தெரியும். அபிஷன் ஜீவிந்தும் நானும் முன்னாடியே ஒன்றாக வேலை செய்துள்ளோம். மதன் எனக்கு கால் பண்ணி இந்தக் கதை சொல்லிட்டு, ‘அபிஷன் இதில் நடிக்கிறார்’ன்னு சொன்னதுமே, எனக்கு சொல்ல வார்த்தையே கிடைக்கல. ரொம்ப சந்தோஷமா இருந்தது. மதன் எனக்குக் கொடுத்த ரோல் உண்மையிலேயே சூப்பராக இருந்தது. இந்தப் படத்தில் நான் நடித்தது மிக மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் படக்குழுவிற்கும், மதனுக்கு, மகேஷ் அண்ணா, சௌந்தர்யா மேம், எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி” என்றார்.

நடிகர் சச்சின், “ஹரி சொன்ன மாதிரி, இந்தப் படம் ஒரு குடும்பப் படம் மாதிரி தான். ஷூட்டிங்க்குப் போற மாதிரி இல்லாம, தினமும் காலைல சுற்றுலாவுக்கு போற மாதிரி ஃபீல் இருந்தது. மதன் உட்கார்ந்து சிரிச்சுக்கிட்டே வேலை செய்வார். மகேஷ் அண்ணா, சௌந்தர்யா மேடம் எல்லாச் சின்னச் சின்ன விஷயங்களுக்கும் பெரிய ஆதரவாக இருந்ததற்கு நன்றி. ஷூட்டிங் ஸ்பாட்டில் நாங்கள் கொண்டாடியதை, திரையரங்கில் நீங்களும் கொண்டாடுவீர்கள் எண நம்புகிறேன். இந்தப் படத்தைப் பார்க்கும்போது ஒரு பாஸிடிவ் எனர்ஜி உங்களுக்கும் வந்து சேரும்” என்றார்.

பாடலாசிரியர் மோகன்ராஜன், “மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சௌந்தர்யா மேடம் பாடல் எல்லாம் நன்றாக வந்துள்ளது எனs சொன்னார்கள். அபி முதன் முதலில் டூரிஸ்ட் ஃபேமிலி படக்கதை சொன்ன போதே வியந்தேன். அவர் சீக்கிரமே ஹீரோவாக மாறுவார் என நினைத்தேன். ஆனால் அடுத்த படத்திலேயே ஆகிவிட்டார். மதனை டூரிஸ்ட் ஃபேமிலி படத்திற்கு முன்பிருந்தே தெரியும். அவர் ரசனையும், என் ரசனையும் ஒன்றாக இருக்கும். இப்படத்தில் உமா தேவி ஒரு பாடல் எழுதியுள்ளார். அதுவும் நன்றாக வந்திருக்கும் என நம்புகிறேன். இப்படத்தில் எனக்கு ஷான் ரோல்டன் இசையில் அற்புதமான பாடல்கள் அமைந்துள்ளது. அவருடன் மீண்டும் மீண்டும் வேலை பார்க்க ஆசைப்படுகிறேன். அனஸ்வரா – படம் பார்க்கும் எல்லோரும், ‘எனக்கும் இப்படி பெண் கிடைத்தாள் எப்படி இருக்கும்?’ என நினைப்பார்கள். அற்புதமாக நடித்திருக்கிறீர்கள். இப்படம் இந்த வருடத்தின் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும்” என்றார்.

இயக்குநர் தேசிங் பெரியசாமி, “சிவாஜி திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில்தான் தயாரிப்பாளர் மகேஷ்ராஜ் அவர்களை முதன்முறையாகச் சந்தித்தேன். அன்றிலிருந்து நாங்கள் நல்ல நண்பர்களாகிவிட்டோம். அப்போது இவர் இப்படியொரு திறமையான, முன்னணி தயாரிப்பாளராக வளர்வார் என்று நான் நினைக்கவே இல்லை. இப்போது அற்புதமான படங்கள் செய்கிறார். சௌந்தர்யா மேடம் இந்தப் படத்தை ரசிகர்களுக்குப் பிடிக்க வேண்டுமென, ஒவ்வொரு அம்சத்தையும் பார்த்துப் பார்த்து செய்துள்ளார். அவரின் அந்த நேர்மை காரணமாகவே இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும். இயக்குநர் மதன் அவர்களின் முதல் படம் போலவே தெரியவில்லை. மிகச் சிறப்பாக உருவாக்கியிருக்கிறார். அபிஷன் ஜீவிந்த் அபாரமான நடிப்பை வழங்கியுள்ளார். எதிர்காலத்தில் அவர் ஒரு பெரிய ஹீரோவாக வருவார். அனஸ்வரா ராஜன் மிக அருமையாக நடித்துள்ளார் . ஷான் ரோல்டன் மிக அழகான இசையைத் தந்துள்ளார். படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி, “வித் லவ் ஒரு பக்காவான ஹிட் திரைப்படம். அபிஷன் ஜீவிந்த் அனஸ்வரா ஜோடி, மிகவும் க்யூட்டாக இருக்கிறது. காவ்யா அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்தப் படத்தின் எடிட்டிங் சிறப்பாக இருக்கிறது. அவரது முதல் படம் போலவே தெரியவில்லை. எடிட்டருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்தத் திரைப்படம் நிச்சயம் மிகப் பெரிய வெற்றியைப் பெறும்” என்றார்.

இயக்குநர் சிபி சக்கரவர்த்தி, “படம் பார்த்துவிட்டேன். மிக அருமையாக உள்ளது. சௌந்தர்யா மேடம் பெரிய ஹீரோவை வைத்து இப்படத்தை எடுத்திருக்கலாம். ஆனால் அவர் இந்தப் புது டீமை நம்பித் தயாரித்துள்ளார். தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் என்னிடம், ‘இந்தப் படம் எப்படி இருக்கிறது?’ என்று கேட்டார். நான் அவரிடம், ‘படம் அருமையாக இருக்கிறது; பணம் மழையாகப் பொழியப் போகிறது’ என்று சொன்னேன். அதை கேட்ட உடனே தயாரிப்பாளர் கனவு காண ஆரம்பித்துவிட்டார். இயக்குநர் மதன் மிகவும் நம்பிக்கை தரும் இயக்குநராக இருக்கிறார். இன்றைய இளைஞர்கள் இந்தப் படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கும் வகையிலான படமாக இது இருக்கும்” என்றார்.

தயாரிப்பாளர் அருண் விஷ்வா,” ஒரு உண்மையான சினிமா ரசிகனுக்குப் படம் மூலம் கிடைக்கும் பணத்தை விட, ஒரு நல்ல படத்தைப் பார்த்த பிறகு மனதில் உருவாகும் திருப்திதான் பெரியது. அந்தப் படத்தைப் பார்த்து, அதை மனதில் அசைபோட்டு யோசிக்கும் ஒரு நிறைவு கிடைக்கும். அந்த உணர்வை நான் சிறை படத்தை பார்த்த பிறகு அனுபவித்தேன். அதே உணர்வு வித் லவ் படத்தைப் பார்த்த பிறகு மீண்டும் கிடைத்தது. தயாரிப்பாளர் மகேஷ்ராஜ் தொடர்ந்து புதுமுக இயக்குநர்களுக்கு ஆதரவளித்து வருகிறார். மகேஷ் போன்ற தயாரிப்பாளர்கள் வெற்றி பெறும்போதுதான், மேலும் மேலும் புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். ஆகவே, இப்படிப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு நாம் அனைவரும் முழுமையான ஆதரவு வழங்க வேண்டும். தயாரிப்பாளர் சௌந்தர்யா மேடமுக்கு என் வாழ்த்துக்கள்” என்றார்.

இப்படம் வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.