Shadow

நட்பைப் பிரதானப்படுத்தும் ‘காவல்துறை உங்கள் நண்பன்’

Police---comman-man-duo-friendship

ஒரு காவலனுக்கும், சாதாரண மனிதனுக்கும் இடைப்பட்ட உறவு – காவல்துறை உங்கள் நண்பன்!

‘நமது உணர்வுகள் தான் நம் வாழ்வை வழிநடத்தும் சக்திகளாக இருக்கின்றன’ என்ற ஒரு புகழ்பெற்ற பழமொழி இருக்கிறது. அது மறுக்க முடியாத உண்மை. உணர்வுகள் தான் நம் வாழ்வில் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கின்றன. அதனால் தான் அத்தகைய திரைப்படங்கள் பார்வையாளர்களை எப்போதும் கவர்ந்திழுக்கின்றன. ‘மோ’ என்ற திகில் திரைப்படம் மற்றும் ‘அதிமேதாவிகள்’ என்ற காமெடித் திரைப்படத்தைத் தொடர்ந்து இப்போது ஒரு எமோஷனல் திரைப்படத்தை இயக்க இருக்கிறார் இயக்குநர் ஆர்டிஎம். ‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்ற தலைப்பில் ஒரு காவல்துறை அதிகாரிக்கும், ஒரு சாமானிய மனிதனுக்கும் இடையே உள்ள உணர்ச்சிப் பிணைப்பைச் சொல்லும் படமாக உருவாகியிருக்கிறது.

இயக்குநரின் முந்தைய படங்களான ‘மோ’ மற்றும் ‘அதிமேதாவிகள்’ படங்களின் நாயகனான சுரேஷ் ரவி இந்தப் படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார். மைம் கோபி, கல்லூரி வினோ முதலியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

>> இசை – ஆதித்யா, சூர்யா
>> ஒளிப்பதிவு – விஷ்ணு ஸ்ரீ
>> படத்தொகுப்பு – வடிவேல், விமல் ராஜ்
>> கலை – ராஜேஷ்

ஒயிட் மூன் டாக்கிஸுடன் இணைந்து BRS டாக்கீஸ் கார்ப்பரேஷன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.