Search

கர்மா கட்டும் ‘கட்டம்’

Kattam movie

தமிழ்த் திரையுலகில் , 2017 ஆம் ஆண்டை, இளம் இயக்குநர்களுக்கான வருடம் என்று தான் சொல்ல வேண்டும். புதிய முயற்சிகள் வெற்றி பெற்றுக் கொண்டு இருக்கிறது. அந்த வரிசையில் தற்போது இணைய உள்ளது, “முரண்” திரைப்படத்தின் மூலம் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்த இயக்குநர் ராஜன் மாதவ் இயக்கும், கட்டம் திரைப்படம் ஆகும். Icreatewonder என்கிற புதிய நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.

புது முகங்கள் நிவாஸ் மற்றும் நந்தன் கதாநாயகர்களாக நடிக்க இவர்களுடன் நாயகியாக நடித்து உள்ளார் ஷிவ்தா நாயர். நவீன்- ஜே.சி.பால் இரட்டையர் இசை அமைக்க , டேமேல் ஒளிப்பதிவு செய்ய, வெங்கட்ரமணன் படத்தொகுப்பில், பிரேம் அரங்கமைப்பில் , சந்தியா ஜனா தயாரிக்கிறார்.

“க்ரைம் த்ரில்லர் தமிழ்த் திரையுலகுக்குப் புதியதன்று. ஆனால் நாங்கள் கையாண்டு இருக்கும் ‘கர்மிக் திரில்லர் (Karmic thriller)’ யுத்தி மிகவும் புதிது. ‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்பது பழ மொழி, ‘வினை விதைக்கத் துணை நின்றவனும் வினை அறுப்பான்’ என்பதே ‘கட்டம்’ படத்தின் மையக் கருத்து.

ரசிகர்களுக்கு நாங்கள் படத்தைக் கையாண்டிருக்கும் விதம் நிச்சயம் பிடிக்கும். படப்பிடிப்பு கட்டம் முடிந்து, இறுதி கட்ட போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடைப் பெற்றுக் கொண்டு இருக்கிறது. திரைக்கு வரும் கட்டத்தை நெருங்கி விட்டோம்” எனக் கூறினார் இயக்குநர் ராஜன் மாதவ்.