Shadow

ஸ்ரீகாந்த் சார் தான் அர்த்தம் சொன்னார் –  சத்தமின்றி முத்தம் தா பட நாயகி பிரியங்கா திம்மேஷ்

செலிபிரைட்  புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் கார்த்திகேயன்.S தயாரிப்பில், ஸ்ரீகாந்த் –  பிரியங்கா திம்மேஷ் நடிப்பில், இயக்குநர் ராஜ் தேவ் இயக்கியுள்ள  சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படம் ” சத்தம் இன்றி முத்தம் தா “.  மார்ச் 1 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வினில்..

நாயகி பிரியங்கா திம்மேஷ் பேசுகையில்…,

இந்தப் பட்த்தில் நடிப்பதற்கு எனக்குக் கிடைத்த வாய்ப்பு என்பது எதிர்பாராமல் நடந்த விஷயம். படம் துவங்குவதற்கு முதல் நாள் எனக்குப் போன் வந்தது. படத்தைப் பற்றி விளக்கினார்கள். எனக்கு கதை மிகவும் பிடித்திருந்தது. இந்தப் பட்த்திற்கு தேவையான முழு உழைப்பை நான் கொடுப்பேன் என்று இயக்குநரிடம் உறுதியாகக் கூறினேன். அடுத்த நாள் நான் சென்னை வந்து இப்பட்த்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். நான் செய்து கொடுத்த உறுதியைக் காப்பாற்றி இருக்கிறேன் என்று நம்புகிறேன். இந்தப் படம் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.

நடிக்கும் போது எனக்குப் பேருதவியாக இருந்த நடிகர் ஸ்ரீகாந்த் அவர்களுக்கு இந்த தருணத்தில் நான் நன்றி சொல்லிக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன். முதலில் இயக்குநரிடம் இருந்து போன்கால் வந்தது. பின்னர் ஸ்ரீகாந்த் சாரிடம் இருந்தும் போன் வந்தது. இயக்குநர் கூறும் போது படத்தின் அர்த்தம் எனக்குப் புரியவில்லை. ஸ்ரீகாந்த் சார் தான் எனக்கு அர்த்தத்தைக் கூறினார். இந்தப் படம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும். நான் இப்பொழுது தான் தமிழ் மொழியைக் கற்று வருகிறேன். இனி வரும் நாட்களில் நன்றாகத் தமிழ் பேசி நிறைய தமிழ்ப்படங்களில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள்” என்று பேசினார்.