பலூனில் நுழைந்த ஜனனி
பலூன் படத்தில் நடிகை ஜனனியையும் மற்றொரு கதாநாயகியாக அறிவித்துள்ளதுள்ளனர்.
பலூன் திரைப்படத்திற்காக சென்னையில் உள்ள மோகன் ஸ்டுடியோவில் பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டு, படப்பிடிப்பு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. "அனைவரையும் ஈர்க்கக் கூடிய கண்கள் தான் ஜனனியின் பலமே! எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதை தன்னுடைய கண்கள் மூலம் மிக அழகாக வெளிப்படுத்தக்கூடிய ஜனனி எங்களின் பலூன் படத்தின் முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பது எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரது பங்களிப்பு எங்களின் படத்திற்குக் கூடுதல் மதிப்பைத் தரும் எனப் பெரிதும் நம்புகிறோம். வணீக ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் வெற்றி பெறத் தேவையான எல்லாச் சிறப்பம்சங்களையும் எங்களின் பலூன் திரைப்படத்தில் உள்ளடக்க முயற்சி செய்து வருகிறோம." என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் பலூன் படத்தின் இயக்குநர் சினிஷ்....