அஞ்சல விமர்சனம்
நூற்றாண்டு விழா (1913 - 2013) காணும் 'அஞ்சல தேனீர் விடுதி'யைப் பற்றிய படமிது.
ராமய்யா - முத்திருளாண்டி என தாத்தா - பேரனாக இரு பாத்திரத்தில் நடித்துள்ளார் பசுபதி. படம் முழுக்க அவர் மட்டுமே தெரிகிறார். இது அவரின் படம் எனலாம் அல்லது அவரை நம்பி எடுக்கப்பட்ட படம். ராமய்யாவின் மனைவி அஞ்சலையாக மெட்ராஸ் படப்புகழ் ரித்விகா நடித்துள்ளார். காலத்திற்கேற்ப மாறும் அவர் உடைகளாலும் கதை சொல்லியுள்ளார் இயக்குநர் தங்கம் சரவணன்.
கவாஸ் என்கிற கவாஸ்கராகப் பழகிப் போன பாத்திரத்தில் விமல் (Vemal). உத்ராவாக நடித்திருக்கும் நந்திதாவுக்கும் விமலுக்குமான காதல் காட்சிகள் திராபையாக இருந்தாலும், 'கண் ஜாடை காட்டி எனைக் கவுத்த செவத்த புள்ள' பாடல் ஈர்க்கிறது.
வசனங்களே படத்தின் பெரிய பலவீனம். வங்கியில் லோன் கிடைத்து விட, நாயகன் மகிழ்ச்சியை வார்த்தைகளால் வெளிபடுத்துகிறான். அடுத்த வரும் சின்னஞ்சிறு காட்சியில் நாயகி நாயகனி...