Shadow

Tag: குமரன் தங்கராஜன்

“குமார சம்பவம்: கொடுத்த வாக்கை நிறைவேற்றிவிட்டேன்” – கே.ஜி.கணேஷ் | Venus Infotainment

“குமார சம்பவம்: கொடுத்த வாக்கை நிறைவேற்றிவிட்டேன்” – கே.ஜி.கணேஷ் | Venus Infotainment

சினிமா, திரைச் செய்தி
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொலைக்காட்சித் தொடர் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகர் குமரன் தங்கராஜன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'குமார சம்பவம்' திரைப்படத்தின் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது. இதற்காக நடைபெற்ற நிகழ்வில் தயாரிப்பாளர் கணேஷ் முன்னோட்டத்தை வெளியிடப் படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர். நடிகரும் இயக்குநருமான பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை வீனஸ் இன்ஃபோடெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.ஜி. கணேஷ் தயாரித்திருக்கிறார். நடிகர் குமரவேல், ''இயக்குநர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் நான் நடிக்கும் இரண்டாவது படம். இப்படத்தின் கதையை அவர் என்னிடம் சொன்னபோது இந்த படத்தை யார் தயாரிக்கிறார்கள் என அவரிடம் கேட்டேன் அவர் 'யாத்திசை' படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் என்று சொன்னவுடன் நடிக்க ஒப்புக்கொண்டேன். ஏனெனில் அந்தத் திரைப்படத்தை நேர்த்தியாக உருவாக்கி...
‘வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ வெப் சீரிஸ் சிறப்புத் திரையிடல்

‘வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ வெப் சீரிஸ் சிறப்புத் திரையிடல்

Event Photos, OTT, கேலரி
ப்ரைம் வீடியோவும், வால்வாட்சர் ஃப்லிம்ஸும் இணைந்து, 'வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி' சீரிஸின் சிறப்புத் திரையிடலைத் திரைப்பிரபலங்களுக்காக ஒருங்கிணைத்தது. தொடர் ப்ரைம் வீடியோவில் வெளியாக இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் இந்த சிறப்புத் திரையிடல் சென்னையில் அரங்கேறியது. தொடரில் நடித்த நடிகர்களும் படைப்பாளிகளும், திரையிடலுக்கு வந்தவர்களை வாஞ்சையுடன் வரவேற்றனர். 'வதந்தி' வெப் சீரிஸின் தயாரிப்பாளர்கள் புஷ்கர், காயத்ரி, இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ், நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, சஞ்சனா, விவேக் பிரசன்னா, குமரன் தங்கராஜன் மற்றும் ஸ்ம்ருதி வெங்கட் இணைந்து அனைவரையும் வரவேற்றனர். 'சுழல்' வெப் சீரிஸ் இயக்குநர்கள் பிரம்மா ஜி, அனுசரண் முருகையன் மற்றும் நடிகர் கதிர் சிறப்புத் திரையிடலுக்கு வந்திருந்தனர். நடிகை ஆல்யா மானஸாவும், தமிழ் காமெடி நடிகர் புகழும் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்தனர். இவர்களுடன் 'மான்ஸ்டர்' இய...
வதந்தியில் சிக்கிய குமரன் தங்கராஜன்

வதந்தியில் சிக்கிய குமரன் தங்கராஜன்

OTT, Web Series
அமேசான் ப்ரைமில், டிசம்பர் 2 அன்று வெளியாகவிருக்கும் தமிழ் க்ரைம் த்ரில்லர் சீரிஸ் 'வதந்தி– தி ஃபேபிள் ஆஃப் வெலோனி'. இதன் ட்ரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ட்ரெய்லரைப் பார்த்தே ரசிகர்கள் மர்மம் நிறைந்த, திருப்பங்களுக்குக் குறைவில்லாத, சில்லிடவைக்கும் கதைக்களத்தை 'வதந்தி' தரும் என்று எதிர்பார்த்துள்ளனர்.ஓடிடியில் முதன்முறையாக அறிமுகமாகும் எஸ்.ஜே.சூர்யா, இத்தொடரில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மொத்தம் 8 அத்தியாயங்கள் கொண்டுள்ள இந்த்த் தொடரை உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ளார் ஆண்ட்ரூ லூயிஸ். இதில் எஸ்.ஜே.சூர்யாவுடன் லைலா, எம்.நாசர், விவேக் பிரசன்னா, குமரன், ஸ்ம்ருதி வெங்கட் என திறமையான நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் குமரன் தங்கராஜனும் நடிக்கிறார். விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் வரும் கதிர் என்ற கதாபாத்திரன் மூலம் தமிழகத்தில் க...