டமால் டுமீல் விமர்சனம்
ஒரு நன்னாளில், மணிகண்டனுக்கு வேலை போய் விடுகிறது. அடுத்த நாள், அவன் வீட்டு வாசலில் 5 கோடி ரூபாய் பணம் கொண்ட அட்டைப்பெட்டி ஒன்றைப் பார்க்கிறான். பின் என்னானது என்பதுதான் படத்தின் கதை.
MONEYKANDAN. நியூமராலஜி பார்த்து நாயகன் வைத்துக் கொள்ளும் பெயர். பணத்தைத் தனதாக்கிக் கொள்ள மணிகண்டன் கற்பித்துக் கொள்ளும் சமாதானம், தானொரு சாமானியன் என்பது. வர வர தமிழ் சினிமா சாமான்யர்களுக்கு நிறையதான் சலுகை தருகிறது. சாமானியன் மணிகண்டனாக வைபவ் நடித்துள்ளார். நாயகனாக அவர் அறிமுகமாகும் முதற்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு போலீஸ்காரரும், ஒரு ரெளடியும் அவரது வீட்டுக்குள் வந்து ஒருவருக்கு ஒருவர் சுட்டுக் கொண்டு இறக்கும்பொழுது, அவர் காட்டும் பாவனை ரசிக்க வைக்கிறது.
மீராவாக ரம்யா நம்பீசன். காதலிக்கவும் காதலிக்கப்படவும்தான் படத்தில் அவர் இருந்தாலும், சினிமாத்தனம் இல்லாத நாயகியாக வருகிறார். சில இடங்களில் வ...