Shadow

Tag: தமன் குமார்

டீஸர் மற்றும் ட்ரைலரை ஒரே நேரத்தில் வெளியிட்டு அசத்திய “ஒரு நொடி” படக்குழு

டீஸர் மற்றும் ட்ரைலரை ஒரே நேரத்தில் வெளியிட்டு அசத்திய “ஒரு நொடி” படக்குழு

சினிமா, திரைத் துளி
அறிமுக இயக்குநர் மணிவர்மன் இயக்கத்தில் தமன்குமார் நாயகனாக நடிக்கும் ‘ஒரு நொடி’ படத்தின் டீசரை தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ஆர்யா இன்று வெளியிட்டுள்ளார். இந்த படத்தின் டீசர் சரிகமா மியூசிக் நிறுவனத்தால் இன்று YouTube வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது. அதே நேரத்தில் தமிழ் திரையுலகில் முதல் முறையாக இப்படத்தின் ட்ரைலரும் தமிழ்நாடு முழுக்க 150 வெவ்வேறு திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இவ்வாறு செய்வதன் மூலம் ஆன்லைன் ரசிகர்கள் மற்றும் திரையரங்கு ரசிகர்களை இரண்டு விதங்களில் ஒருசேர கவர முடியும் என்பதே நோக்கம் ஆகும். பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், பாஃப்டா திரைப்படக் கல்லூரி நிறுவனரும், ‘காற்றின் மொழி’, ‘இவன் தந்திரன்’, ‘கோடியில் ஒருவன்’, ‘கொலைகாரன்’ போன்ற முக்கியமான படங்களை வெளியிட்ட விநியோகஸ்தருமான தனஞ்செயன் இப்படத்தை முன்னின்று வழங்குகிறார். தயாரிப்பு மதுரை அழகர் மூவிஸ் மற்றும் வொயிட் லேம...
சேது பூமி விமர்சனம்

சேது பூமி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மறவர் குலத்தைச் சேர்ந்த குமரனைக் கொல்ல முயல்கின்றனர். அவனது காதலி புது மலரின் தாய் மாமனைக் கொன்று விடுகின்றனர். அதனாலெழும் சிக்கல்களைச் சமாளித்து நாயகன் குற்றவாளியை எப்படிக் கண்டுபிடிக்கிறான் என்பதுதான் படத்தின் கதை. படத்தின் தலைப்பைக் கொண்டே படம் நடக்கும் களம் ராமநாதபுரம் என யூகிக்கலாம். வாய்ப்புக் கிடைக்கும் பொழுதெல்லாம் முத்துராமலிங்கத் தேவரை வழிபட உதவியதே அன்றி, களம் கதைக்கு உதவவில்லை. சம்பிரதாயமான முறையில் கதாபாத்திர அறிமுகங்கள் முடிந்தும், படத்தின் முதற்பாதி இலக்கற்றே பயணிக்கிறது. நாயகன், நாயகிக்கிடையேயான காதல் காட்சிகளில் இன்னும் சுவாரசியத்தைக் கூட்டியிருக்கலாம். சாமி எனும் கதாபாத்திரம் வீழ்ந்ததும் படம் சூடு பிடித்து ஓடத் துவங்குகிறது. நாயகனுக்கு இணையான சாமி எனும் கதாபாத்திரத்தில் படத்தின் இயக்குநர் கேந்திரன் முனியசாமியே நடித்துள்ளார். 'நீ துரியோதனன் பக்கமிருக்கும் கர்ணன் மாதிரிய்...
தொட்டால் தொடரும் விமர்சனம்

தொட்டால் தொடரும் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நாயகி எதைத் தொட்டதால் என்ன தொடர்கிறது என்பதே படத்தின் கதை. காதல், அதனால் எழும் ஊடல், மெகா சீரியலில் காட்டப்படும் குடும்பப் பிரச்சனை, தமிழ்த் திரைப்படங்களின் ஆதிகாலம் தொட்டே வரும் சித்தி கொடுமை, மொக்கை போட்டே சாகடிக்கும் நாயகனின் நண்பன், கொல்லத் துரத்தும் வில்லன் என அக்மார்க் தமிழ்ப்படத்துக்குரிய சகல விஷயங்களையும் ஒன்று விடாமல் காட்சிப்படுத்தியுள்ளார் கேபிள் சங்கர். இதில் புதுமை எனப் பார்த்தால், வில்லனாக வரும் வின்சென்ட் அசோகன் ஒரே ஒரு வார்த்தை கூடப் பேசாமல் மிரட்டியுள்ளார். படத்தின் தொடக்கத்திலேயே பாத்திரங்களைச் சுலபமாக ஏற்றுக் கொள்ள முடிகிறது. ஹீரோக்கு அநாவசியமான அறிமுகப் பாடல் கிடையாது; நாயகியும் லூசு போலவோ, கவர்ச்சி உடையிலோ அறிமுகமாகவில்லை. நாயகனைக் காதலிக்க மட்டுமே அவர் படத்தில் இல்லை. துக்கம், மகிழ்ச்சி, பொறுப்புணர்ச்சி, குறும்புத்தனம், கோபதாபமுள்ள பெண்ணாக உள்ளார் நாயகி. ஆனால் படத்த...