மனிதனின் மனசாட்சியை கேள்வி கேட்கும் திரு.மாணிக்கம் திரைப்படத்தின் பின்னணி இசை பணிகள் துவங்கியது
'சீதா ராமம்’ படத்தின் மூலம் மொத்த இளைஞர்களையும் தன் இசையால் கவர்ந்த இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் தன் நவீன இசையால் எல்லாத் தரப்பினரையும் திரு.மாணிக்கம் திரைப்படத்தில் கவரவிருக்கிறார். சமுத்திரக்கனி. நாசர் போன்றோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் திரு.மாணிக்கம் திரைப்படத்தின் பின்னணி இசைக் கோர்வை பணிகள் ஹைதராபாத்தில் தொடங்கியது.பாடலாசிரியர்கள் சினேகன், ராஜூ முருகன், இளங்கோ கிருஷ்ணன் மற்றும் சொற்கோ ஆகியோர் இத்திரைப்படத்தில் பாடல்களை எழுதியுள்ளனர்.‘ராஷ்மி ராக்கெட்’ என்ற இந்திப் படத்தின் கதை மூலம் மொத்த இந்தியாவையும் கவனம் ஈர்த்த இயக்குனர் நந்தா பெரியசாமி இந்தப் படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார்.கேரளாவைச் சேர்ந்த குமுளி, மூணாறு, மேகமலை, தேக்கடி, போன்ற எழில் கொஞ்சும் இயற்கையான பல இடங்களை இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் மைனா சுகுமார் அள்ளிக் கொண்டு வந்து படம் பிடித்திருக்கிறார்....