
பாபநாசம் சுயம்புலிங்கம், ஹேப்பி அண்ணாச்சி!!
படத்தின் வெற்றியைக் கொண்டாட, படக்குழுவினர் அனைவரும் அந்தந்தப் பாத்திரத்தின் உடையலங்காரத்துடனே மேடையேறினர். அது மட்டுமல்லாமல், சுலைமான் பாய் டீக்கடை - ராணி இல்லம் – காவல் நிலையம் என மேடையின் செட்டிங்கிலும் அமர்க்களப்படுத்தியிருந்தனர். ‘வெற்றி தோல்விகள் சகஜம். ஆனால் இப்படியொரு படம், எங்களுக்கும் மனத் திருப்தியை அளித்து ரசிகர்களுக்கும் மனத் திருப்தியை அளித்த இப்படம் வெற்றி பெற்றதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம்’ என கமல் சொன்னதுபோல், பாபநாசம் படத்தின் மொத்த குழுவும் மகிழ்ச்சியில் திளைத்தவாறு ஊடகத்திற்கும் மக்களுக்கும் நன்றியைத் தெரிவித்தனர்.
பாபநாசம் இயக்குநர் ஜீத்து ஜோசப்பிடம், "யார் சிறப்பாக நடித்திருந்தனர்? த்ரிஷ்யத்தின் ஜார்ஜ் குட்டியா? பாபநாசத்தின் கமலா!?" எனக் கேட்டதற்கு,
"இருவரும் தனக்கே உரிய ஸ்டைலில் அந்த பாத்திரத்தை நடித்திருந்தனர். இருவரும் தன் திறமைகளை நிரூபித்தவர்கள். இந்திய அளவி...