
வஞ்சகர் உலகம் விமர்சனம்
வஞ்சகர் சூழ் உலகிற்கு, சமூகத்தின் சில பிற்போக்குத்தனமான பார்வைகளும், பகுத்தறிவற்ற நம்பிக்கைகளும், காலாவதியான சட்டங்களுமே காரணமாக அமைகின்றன என்பது மிகவும் துரதிர்ஷ்டம். காலமாற்றமும் அதற்குத் தோதான சட்டங்களும், சக மனிதன் மீதான பார்வையை, மேலும் கரிசனத்துடனும் நட்புடனும் மாற்றும் என நம்புவோமாக!
படம் மெதுவான தாள லயத்தில் பயணிக்கிறது. இந்த லயத்திற்கு, இரண்டு மணி நேரம் நாற்பது நிமிடங்கள் என்பது மிக நீண்ட நேரமாய்த் தோற்றமளிக்கிறது. போதைப்பொருள், மணி லாண்டரிங் போன்ற சட்டவிரோத செயல்களை நிழலில் இருந்து இயக்கும் துரைராஜைப் பிடிப்பது, இளம்பெண் மைதிலியைக் கொன்றது யாரென விசாரிப்பது என்று கதை இரண்டு குதிரைகளின் மேல் ஒரே நேரத்தில் சவாரி செய்கிறது. மைதிலியின் கொலையில் இருந்து படம் தொடங்குவதால், அந்த ஒன்றின் மீதே இயக்குநர் மனோஜ் பீதாவும், கதாசிரியர் V.விநாயக்கும் சவாரி செய்திருந்தால் படத்தின் விறுவிறுப்பு க...