தங்கமகன் விமர்சனம்
தன் தந்தை மீது விழும் பழியை எப்படி தங்கமகனான தமிழ் கலைகிறான் என்பதே படத்தின் கதை.
ஹேமா டிசோசாவாக எமி ஜாக்சன். முடியைத் தூக்கிச் சீவிய முன் நெற்றியோடு, சுடிதார் அணிந்து வரும் அவர் மிக அந்நியமாகத் தெரிகிறார். 'ஹீரோ ஃப்ரெண்ட்' ஆக வரும் சதீஷ் முதற்பாதி கலகலப்புக்கு உதவுகிறார். தனுஷ் மீசையை மழித்தால் கல்லூரி மாணவர்; மீசை வைத்தால் பொறுப்பான மகனும் மனிதனும் ஆகி விடுகிறார். ஆனால் சதீஷின் உடல் வாகிற்கு, அத்தகைய மாற்றம் பொருந்தவில்லை.
மறதியில் தவிப்பவராகவும், பாசமானதொரு தந்தையாகவும் வருகிறார் கே.எஸ்.ரவிக்குமார். எனினும் வழக்கமான அவரது கலகலப்பு மிஸ்ஸிங். வி.ஐ.பி.யில் அம்மா சென்ட்டிமென்ட் என்றால் இப்படத்தில் அப்பா சென்ட்டிமென்ட்டைத் தொட்டுள்ளார் இயக்குநர் வேல்ராஜ். தனுஷின் அம்மாவாக ராதிகா சரத்குமாரும், அத்தையாக சீதாவும் நடித்துள்ளனர். சில காட்சிகளில் மட்டுமே தோன்றினாலும், ஜெயப்ரகாஷ் அழுத்தமான கதா...