32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
குறிச்சொல்

அதர்வா

16 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன
இதயம் முரளி விமர்சனம் | Idhayam Murali review இது புதிது முக்கியச் செய்தி
13/07/2026 Dinesh R 2 நிமிட வாசிப்பு

இதயம் முரளி விமர்சனம் | Idhayam Murali review

‘இதயம்’ எனும் படம், 1991 இல் வெளியாகி அந்தக் கால இளைஞர்களின் இதயங்களை வென்றது. மறைந்த நடிகர் முரளியின் திரைவாழ்வில் ஒரு மைல்கல் அப்படம். அப்படத்தின் நாயகனின் குணாதிசயத்தைக் கதைக்கருவாகக் கொண்டு அதர்வாவை வைத்து இதயம் முரளியாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன். 90’ஸ் கிட்ஸ் அதர்வாவிற்கு சிறுவயது பெண்களிடம் காதலைச் சொல்வதற்கு தயக்கம். அந்த தயக்கமே அவரின் காதல்களுக்குத் தடையாக மாறுகிறது. பள்ளிவாழ்வில் பாடமெடுக்கும் மிஸ்ஸிடம் காதலைச் சொல்லத் தவறுகிறான். அதன்பின் பருவ வயதில் ட்யூஷன் […]

முழுமையாகப் படிக்க
செய்திகள் வரிசை (பக்கம் 1)
“உதவும் மனப்பான்மை வணிகமாக மாறி குற்றச்சம்பவத்திற்கு வழி வகுக்கிறது” – அதிஷா | DNA சினிமா

“உதவும் மனப்பான்மை வணிகமாக மாறி குற்றச்சம்பவத்திற்கு வழி வகுக்கிறது” – அதிஷா | DNA

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், தயாரிப்பாளர் S. அம்பேத்குமார் வழங்க, இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா முரளி, நிமிஷா சஜயன் முன்னணி வேடத்தில் நடித்து, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட, கடந்த இருபதாம் தேதியன்று வெளியான DNA திரைப்படம், விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் பிரம்மாண்ட வெற்றியை நோக்கிப் பயணிக்கிறது. இதைத் தொடர்ந்து படத்தை வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் படக்குழுவினர் […]

26/06/2025 Dinesh R
டிஎன்ஏ விமர்சனம் | DNA review இது புதிது

டிஎன்ஏ விமர்சனம் | DNA review

DNA என்பது பிரதான கதாபாத்திரங்களான திவ்யாவையும் ஆனந்தையும் குறித்தாலும், படத்தில் ஒரு குழந்தையின் பெற்றோரைக் கண்டுபிடிக்க டிஎன்ஏ சோதனை மேற்கொள்ளப்படுவதையும் குறிக்கிறது. காதல் தோல்வியால் மதுபோதைக்கு அடிமையாகி மீளும் ஆனந்திற்கும், BPD எனப்படும் பார்டர்லைன் பெர்சனாலிட்டி டிஸ்ஆர்டர் கொண்ட திவ்யாவிற்கும் திருமணம் நடக்கிறது. குழந்தை பிறந்ததும், அம்மகவைக் கையில் வாங்கும் திவ்யா, அது தன்னுடைய குழந்தை இல்லை எனச் சொல்கிறார். மருத்துவர்கள், செவிலியர்கள், உறவினர்கள் என அனைவரும் திவ்யாவை நம்பாத பொழுது, ஆனந்த் மட்டும் திவ்யா சொல்வதை […]

19/06/2025 Dinesh R
“DNA என்றால் திவ்யா & ஆனந்த்” – அதர்வா சினிமா

“DNA என்றால் திவ்யா & ஆனந்த்” – அதர்வா

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘டிஎன்ஏ (DNA)’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய நடிகர் அதர்வா, ”கடந்த தசாப்தத்தில் வெளியான சிறந்த படங்களில் பரியேறும் பெருமாள் ஒன்று.‌ இந்தப் படத்தின் வாய்ப்பைத் தவறவிட்டதால் எதையும் இழக்கவில்லை என நினைக்கிறேன். ஏனெனில் கதிர் மிக அற்புதமாக நடித்திருந்தார். மாரி செல்வராஜிடம் வேறு […]

15/06/2025 Dinesh R
பட்டத்து அரசன் விமர்சனம் இது புதிது

பட்டத்து அரசன் விமர்சனம்

ஓர் அணியாக ஒரு குடும்பம், கபடி ஆட்டங்களில் பங்குபெறும் ஒற்றை வரிச்செய்தியைப் படமாக எடுத்துள்ளார் இயக்குநர் சற்குணம். தனது ஊருக்காக நாப்பது வருடங்களாகக் கபடி ஆடி, ஊருக்கு மிகப் பெரும் பெருமையைச் சேர்த்தவர் பொத்தாரி. ஊரின் கபடிக் குழுவிற்கு அவரது பெயரை வைப்பதோடு, அவருக்குச் சிலையும் வைத்துக் கொண்டாடுகின்றனர் ஊர்மக்கள். அரசர்குளத்திற்கு எதிரான ஒரு போட்டியில், பொத்தாரியின் பேரன் பணம் வாங்கிவிட்டதாக ஊர்மக்களை நம்ப வைக்கிறான் பொறாமையில் பொங்கும் சக ஆட்டக்காரன் ஒருவன். அதனால் சுடுகாட்டு மாரியம்மன் […]

25/11/2022 Dinesh R
100 விமர்சனம் சினிமா

100 விமர்சனம்

தனது புஜ பல பராக்கிரமத்தால், தீயவர்களையோ, சமூக விரோதிகளையோ அடித்து உதைத்து அவர்களைச் சிறையில் அடைத்து, நேர்மையான காவல்துறை அதிகாரியாக மிளிர வேண்டுமென்பது அதர்வாவின் லட்சியம். ஆனால், அவசர உதவி கோரி எண் 100-இற்கு வரும் தொலைபேசி அழைப்புகளை ஏற்கும் கண்காணிப்பு அறையில் அவரைப் பணிக்கு அமர்த்திவிடுகின்றனர். நேடியாகக் கதைக்குள் செல்லாமல், படத்தின் முதற்பாதி தேவையில்லாத காட்சிகளால் அலைக்கழிக்கிறது. அதர்வாவின் தந்தையாக பருத்தி வீரன் சரவணன், அம்மாவாக நிரோஷா, காதலியாக ஹன்சிகா, நண்பராக ‘எருமை சாணி’ விஜய் […]

11/05/2019 Dinesh R
100 – காவல்துறை அதிகாரியாக அதர்வா சினிமா

100 – காவல்துறை அதிகாரியாக அதர்வா

ஆரா சினிமாஸ் சார்பில் காவியா வேணுகோபால் தயாரிக்க, அதர்வா, ஹன்சிகா மோத்வானி நடிப்பில், சாம் ஆண்டன் இயக்கியிருக்கும் படம் ‘100’. அதர்வா முதன்முறையாக காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்திருக்கிறார். மே 9ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இந்தப் படத்தை குரு ஸ்ரீ மிஷ்ரி எண்டர்பிரைசஸ் சார்பில் தமிழகம் முழுக்க வெளியிடுகிறார் சிஎஸ் பதம்சந்த் ஜெயின். “சாம் ஆண்டன் உடன் நான் இணையும் மூன்றாவது படம் 100. முந்தைய இரண்டு படங்களும் நகைச்சிவைப் […]

02/05/2019 Dinesh R
பூமராங் விமர்சனம் சினிமா

பூமராங் விமர்சனம்

ஆஸ்திரேலியப் பழங்குடியினர்கள் (aboriginals) பயன்படுத்திய எறி ஆயுதத்தின் பெயர் தான் பூமராங். அவற்றை வீசி எறிந்தால், இலக்கைத் தாக்கிவிட்டு மீண்டும் வீசியவரிடமே திரும்பும். பழந்தமிழர்களிடமும், இதே தொழில்நுட்பத்திலான “வளரி” எனும் ஆயுதம் உபயோகத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த ஆயுதத்திற்கும் படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தலைப்பைக் குறியீட்டுப் பெயராகத்தான் புரிந்து கொள்ள வேண்டும். “லைஃப் இஸ் எ பிட்ச்” என்ற க்ளைமேக்ஸில் வில்லனிடம் சொல்ல வந்து, பிட்ச் என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல், ‘லைஃப் இஸ் எ […]

10/03/2019 Dinesh R
இமைக்கா நொடிகள் விமர்சனம் சினிமா

இமைக்கா நொடிகள் விமர்சனம்

கொலையை ரசித்துச் செய்யும் ஒரு கொலைக்காரன், அவனைப் பிடிக்க நினைக்கும் ஒரு பெண் சி.பி.ஐ. அதிகாரி என இருவருக்கு இடையில் நடக்கும் ஆடுபுலியாட்டம்தான் இமைக்கா நொடிகள் படத்தின் கதை. ருத்ராவெனும் சைக்கோவாக அனுராக் கஷ்யப் அதகளப்படுத்தியுள்ளார். அனுராகின் அட்டகாசமான உடற்மொழியுடன், மிரட்டும் முகபாவனையுடன், மகிழ் திருமேனியின் கம்பீரமான குரல் செம்புலப் பெயல் நீர் போல் ஒன்றிக் கொள்கிறது. ட்ரெய்லரிலேயே அந்த ரசவாதத்தினை உணரலாம். படத்திலேயோ, அது தொடக்கம் முதல் கவ்விக் கொள்கிறது. வில்லனாக அனுராக் கஷ்யபையும், அவருக்கு […]

31/08/2018 Dinesh R
இமைக்க விடாப் படம் சினிமா

இமைக்க விடாப் படம்

சில திரைப்படங்கள் ரசிகர்களுக்கு உற்சாகத்தைத் தரும். சில திரைப்படங்கள் அவர்களுக்கு காதலை ஏற்படுத்தும். இன்னும் சில திரைப்படங்கள் அவர்களை வயிறு குலுங்கச் சிரிக்கச் செய்யும். ஆனால் ஒரு சில திரைப்படங்கள் மட்டும் தான் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமரச் செய்து, அவர்களின் இமைகளை ஒரு நொடி கூட மூட விடாமல், சுவாரசியத்தின் உச்சிக்குக் கொண்டு செல்லும். அப்படி ஒரு திரைப்படமாக உருவெடுத்து வருவது தான் அதர்வா – நயன்தாரா – ராசி கண்ணா – பிரபல வில்லன் […]

20/10/2016 Dinesh R
கேமியோ – அதர்வா – ராஷி சினிமா

கேமியோ – அதர்வா – ராஷி

“எங்கள் இமைக்கா நொடிகள் படத்தை நாங்கள் மிகுந்த கவனத்துடன் வலுவான முறையில் எழுப்பிக் கொண்டு வருகிறோம். முக்கியமாக எங்கள் படத்தின் அஸ்திவாரமாகச் செயல்படுவது கதைக்களம் தான். அந்தக் கதைக்களத்தைத் தாங்கி நிற்கும் வலுவான தூண்களாக அதர்வா, இயக்குநர் அஜய் ஞானமுத்து, ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர், இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா, இவை அனைத்திற்கும் மேலாக நயன்தாரா இருப்பது எங்கள் படத்திற்குக் கூடுதல் பலம். சிறந்த நடிகர் – நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் சிறப்பான விளம்பரங்கள் மூலம் எங்கள் […]

01/10/2016 Dinesh R
ஈட்டி விமர்சனம் சினிமா

ஈட்டி விமர்சனம்

தனது பலவீனத்தை, முறையான பயிற்சியின் மூலமாக எதிர்கொண்டு விருப்பப்பட்ட துறையில் புகழ் சாதிக்கிறானா இல்லையா என்பது தான் கதை. புகழாக அதர்வா. குறி தப்பாது காற்றைக் கிழித்துக் கொண்டு செல்லும் ஈட்டி போல் அவரது உடம்பு கச்சிதமாக உள்ளது. நாயகன் என்பதால் வென்று விடுவான் என்ற சினிமாத்தனத்தை மீறி, இந்த முயற்சிக்கு வெல்லாமல் எப்படி என்ற உணர்வைத் தருவது தான் அதர்வாவின் வெற்றி. வசன உச்சரிப்பின் போது, கடைசி வார்த்தையைக் கத்தரித்தது போல் பேசுவார். இப்படத்தில், அதர்வாவின் […]

13/12/2015 Dinesh R
சண்டி வீரன் விமர்சனம் சினிமா

சண்டி வீரன் விமர்சனம்

மீண்டும் மருத நிலத்தைக் களமாக்கி திரையேற்றியுள்ளார் சற்குணம். ஓர் ஊரின் குடிநீர் ஆதாரம் மற்றொரு ஊரின் ஆளுகைக்குள் உள்ளது. அவ்விரு ஊர்களுக்கிடையில் மூளும் வெறுப்பின் முடிவென்ன என்பதுதான் படத்தின் கதை. சிங்கப்பூருக்கும் தஞ்சை, புதுகை, நாகை, திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த கிராமங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அந்தத் தொடர்பின் பின்னணியை நேர்த்தியாக நாயகனின் அறிமுகத்துக்குப் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் அதன் பின் படத்தில் எந்த சுவாரசியுமும் இல்லாமல் இடைவேளையின் பொழுதே கதை தொடங்குகிறது. அதர்வா, ஆனந்தி காதல் காட்சிகள் […]

07/08/2015 Dinesh R
இரும்பு(க்) குதிரை விமர்சனம் சினிமா

இரும்பு(க்) குதிரை விமர்சனம்

பைக், பைக் ரேஸ் என ஆர்வத்தைக் கிளறிய படம். ஆனால் தமிழ் சினிமாவின் எல்லைகளுக்குள் நின்று, ஊறுகாயாகத்தான் மேற்படி விஷயத்தை உபயோகித்துள்ளார்கள். தாய் இறந்ததும் நாயகனை நாயகி தேற்றுகிறார். அது ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’. அப்படத்தில் நாயகியை யாரோ கடத்தி விட்டதாக கற்பனையாக நினைத்துக் கொள்வார் அதர்வா. இந்தப் படத்தில், கண் முன்னேயே தந்தை இறந்துவிடுவதால் மனமுடைந்து போகிறார். நாயகி ப்ரியா ஆனந்தைக் கண்டதும் காதலாகி, மனதை சுயமாகத் தேற்றிக் கொள்கிறார். ஆனால் இந்தப் படத்தில், நிஜமாகவே […]

29/08/2014 Dinesh R
பரதேசி விமர்சனம் சினிமா

பரதேசி விமர்சனம்

இன்னுமொரு படமென ஒதுக்க முடியாதவைகளே பாலாவின் படைப்பு. மீண்டும் அதை, முன்பை விட அழுத்தமாக உணர்த்துகிறது ‘பரதேசி’. லட்சணமாய்ப் பார்த்துப் பழகிய நாயகன் முகத்தை எந்தளவுக்கு முடியுமோ அந்தளவு அழுக்குப்படுத்தி விடுவார் பாலா. அத்தகைய நாயகனின் பிம்பம் கொண்டு பார்வையாளர்கள் மீது முதல் தாக்கத்தினை ஏற்படுத்துவார். அந்த அழுக்கு முகம் கொண்ட நாயகர்கள், மற்ற தமிழ்ப்பட நாயகர்களைப் போல சராசரியானவர்களே. உதாரணம் ஷங்கரின் நாயகர்களுக்கு லஞ்சம் வாங்குவதும், பேரரசின் நாயகர்களுக்கு ரவுடியிசமும் பெருங்குற்றம். பாலாவின் நாயகர்களுக்குத் தங்களை […]

18/03/2013 admin