
தமிழில் அறிமுகமாகிறார் சமீர் கோச்சார்
இந்தியா முழுமைக்கும் இருக்கிற கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களில் சமீர் கோச்சாரை அறிந்திராதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதிலும் குறிப்பாக “ஐ.பி.எல்.” போட்டிகளில் வர்ணனையாளராகப் பணியாற்றதின் மூலம் இந்தியாவின் கடைக்கோடி வரை அறிந்த பிரபலமானார் சமீர் கோச்சார்.
தனது ஆரம்ப காலகட்டத்தை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, “ஹாத் சே ஹாத் மிலா” என்ற எயிட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தொடங்கியவர், இன்று பாலிவுட் சினிமா வரை வளர்ந்திருக்கிறார். இவர் நடிப்பில், தற்போது “NETFLIX” வலைதளத்தில் ஒளிபரப்பாகி வரும் “Sacred Games (சேக்ரட் கேம்ஸ்)” என்ற தொடர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
மேலும் “ஜனத்”, “ஹவுஸ்ஃபுல் 3” போன்ற பாலிவுட் வெற்றித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், “Century International Films” தயாரிப்பில் அமலா பால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் “அதோ அந...

